அந்தப் பக்கம் இவரும்.. இந்தப் பக்கம் மாமியாரும் மருமகனும் செம குத்தாட்டம்.. ரவுடி பேபீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சத்யா சீரியலில் வரும் நாயகி, மாமியார் உள்ளிட்டோர் இணைந்து போட்டுள்ள குத்தாட்டம் வைரலாகியுள்ளது.

இப்ப இருக்கிற சூழ்நிலையில் சின்னத்திரை கதாநாயகியாக இருந்தாலும் சரி வெள்ளித்திரை கதாநாயகியாக இருந்தாலும் சரி இணையதளங்கள் மூலமாக பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்கள்.

போட்டி போட்டுக்கொண்டு போட்டோஷூட் நடத்தி ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்து விட்டார்கள். அந்த மாதிரிதான் சத்யா சீரியலில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ஆயிஷாவுக்கும் இணைய தளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

 சேட்டைக்கார ஆயிஷா

சேட்டைக்கார ஆயிஷா

ஆயிஷா செய்யும் சின்ன சின்ன சேட்டைகளை அவருடைய ரசிகர்கள் அவர்களின் ரசிகர்கள் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது ஆயிஷா ரவுடிபேபி பாட்டுக்கு போட்ட ஆட்டம் வைரலாக பரவி வருகிறது. ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ஒரு சீரியலாக சத்யா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக சென்னை தமிழ் பேசும் ரவுடிபேபி ஆக ஆயிஷா நடிக்கிறார்.

 செம பேபி

செம பேபி

உண்மையிலேயே பலருக்கு இவருடைய பெயர் ஆயிஷா என்று கூட தெரியாது. அந்த அளவிற்கு இவர் சக்தியாகவும் ரவுடிபேபி ஆகவும் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார். இன்ஸ்டாகிராமில் பல ரசிகர்கள் கமெண்ட்டுகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் பக்கங்களையும் உருவாக்கி வருகிறார்கள். அதில் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் சின்னச் சின்ன சேட்டைகளையும் பிற நிகழ்ச்சிகளுக்கு பேட்டி கொடுக்கும்போது இவருடைய க்யூட்டான எக்ஸ்பிரஷனையும் அப்படியே போட்டோ பிடித்து இவர்களின் ரசிகர்கள் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

 குத்து டான்ஸ்

குத்து டான்ஸ்

தற்போது இவர் சூட்டிங் ஸ்பாட்டில் ரவுடிபேபி பாட்டுக்கு இவரும் இவருடன் ஜோடியான அமுல் பேபியும் செம ஆட்டம் போட்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் அந்த சீரியலில் நடிக்கும் அனைவருமே ரவுண்டு கட்டி ஆட்டம் போட்டு வருகிறார்கள். இந்த ஆட்டத்தை பார்த்து பல ரசிகர்களும் கமெண்ட்டுகளை போட்டு வருகிறார்கள். ஆயிஷா தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஒரு ரவுடி பேபி தான் என்று நிரூபிக்கும் வகையில் இந்த ஆட்டம் பாட்டம் அமைந்திருக்கிறது.

 மருமகனும், மாமியாரும்

மருமகனும், மாமியாரும்

அவர்கள் மட்டுமல்லாமல் அந்த சீரியலில் மாமியார் மருமகனாக வரும் கலைஞர்களும் ஒரு குத்து குத்தியுள்ளனர். அந்த வீடியோவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர் எப்போதும் இவர் கூட நடிக்கும் விஷ்ணு பிரபுவுடன் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறது இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். பல ரசிகர்கள் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ஆவலாக கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் அதற்கு இவர் சிரித்துக்கொண்டு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை நாங்கள் ஒரு நல்ல நண்பர்கள் என்று கூறியிருக்கிறார்.

 பிரிந்து போன காதல்

பிரிந்து போன காதல்

ஆயிஷா இதற்கு முன்பு ஒருவரை ரொம்பவும் சின்சியராக காதலித்து இருக்கிறார் . அவர் கூட தான் எப்பவும் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவாராம். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். இவரோட ஆசைக்காக தான் அவர் சினிமாவில் நடிப்பதற்கு கூட சம்மதித்து எப்பவும் இவருக்கு துணையாக இருந்தாராம். ஆனால் அது கடைசிவரை நிலைக்கவில்லை மற்றும் எங்களுக்குள் செட் ஆகாது என்று தெரிந்துகொண்டோம் அதனால் பிரிந்து விட்டோம் என்று கூறியிருக்கிறார்.

 நண்பன் விஷ்ணு

நண்பன் விஷ்ணு

தற்போது எங்கு சென்றாலும் ஆயிஷாவும் விஷ்ணுவும் சேர்ந்து செல்வது இவர்களுடைய ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பாக இருக்கிறார்களாம். கிளாமர் எல்லாம் சினிமாவுக்கு தேவைப்படுகிறபோது காட்ட தான் செய்ய வேண்டும். அப்பதான் நம்மளை ரசிகர்களுக்கு போரடிக்காது என்று கூறியிருக்கும் ஆயிஷா தற்போது முட்டிக்கு மேல மெருன் கலர் கவுண் போட்டுக் கொண்டு செம்ம ஆட்டம் போட்டிருப்பது கலக்கலாக இருக்கிறதாம். இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது என்று இவருடைய ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+