எங்கள் மூக்கழகே.. ஆயிஷாவைப் பார்த்து கவிதைகளைக் கொட்டும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல்களில் ஆண் கெட்டப்பில் கலக்கிக் கொண்டிருந்த ஆயிஷா தற்போது இணையதளத்தில் தன்னுடைய முழு அழகையும் மொத்தமாக காட்டி விதவிதமாக போட்டோஸ்கலாக குவித்து வருகிறார். ரசிகர்களும் குவிந்து வந்து கமெண்ட்டுகளைக் கொட்டிக் கொண்டுள்ளனர்.

ஜீ தமிழில் தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சத்யா சீரியல் கதாநாயகி தான் ஆயிஷா. இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ரெடி ஸ்டெடி கோ எனும் நிகழ்ச்சி மூலமாக தான் அறிமுகமானார்.

இந்த நிகழ்ச்சியில் இவரது அழகை பார்த்து விஜய் டிவியிலிருந்து பொன்மகள் வந்தாள் சீரியல் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு வந்தது.

 பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

இந்த சீரியல் நன்றாக ஓடிக் கொண்டிருந்த பொழுது இவருக்கும் அந்த சீரியல் டைரக்டருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த சீரியலில் இருந்து இவர் தூக்கப்பட்டார். அதன்பிறகு இவர் பெரிய மன உளைச்சலில் இருந்துள்ளார் .இந்த சீரியலுக்காக பல படங்களின் வாய்ப்புகளையும் கூட இவர் நிராகரித்திருக்கிறார்.

 மாயா தொடர்

மாயா தொடர்

பொன்மகள் வந்தாள் சீரியலை தொடர்ந்து நடிகை குஷ்பூ தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மாயா தொடரில் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது .அதுவும் இரட்டை வேடத்தில் மிகவும் அசால்ட்டாக நடித்து இருப்பார். அதில் உண்மையிலேயே நடிப்பில் மிரட்டியிருப்பார். இந்த சீரியல் இவருக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவருடைய கேரக்டரை பார்த்து ரசிகர்கள் அதிகரித்தார்கள்.

 சத்யாவில் கலக்கல்

சத்யாவில் கலக்கல்

இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் சத்தியவாக பின்னிப் பெடல் எடுத்துக்கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் இவர் லேடி புள்ளிங்கோவாக கலக்கிக் கொண்டிருக்கிறார் .இவர் கூட நடிக்கும் விஷ்ணுவிற்கும் இவருக்கும் காதல் என்று பல கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. அது எந்த அளவிற்கு உண்மை என்று இன்னும் தெரியவில்லை. இருவரும் அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது பெஸ்ட் பிரண்ட் என்று கூறிவருகிறார்கள்.

 ஆயிஷாவுக்குள் காதல் இருக்கா

ஆயிஷாவுக்குள் காதல் இருக்கா

ஏற்கனவே ஒருவரை ரொம்பவும் சின்சியராக காதலித்து அந்த காதல் இப்போது பிரேக்கப் ஆகிவிட்டது என்று ஆயிஷா கூறியிருக்கிறார். அதனால் இவர்களுக்கு ஏதும் இருக்குமோ என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சின்ன ரோலில் நடித்திருக்கிறார். நடிகர் சந்தானத்துடன் தில்லுக்கு துட்டு 2 வில் ஒரு சின்ன ரோலில் நடித்திருக்கிறார்.

 நடிப்பில் அசத்தல்

நடிப்பில் அசத்தல்

சின்ன ரோலாக இருந்தாலும் இதுவும் ரசிகர்கள் ரசிக்கும் அளவில் தான் இருந்திருக்கிறது .இதனை தொடர்ந்து இவர் பட வாய்ப்புக்காக காத்துக்கொண்டிருக்கிறார். தனது அசத்தல் அழகால் மனதை கொள்ளையடித்த ஆயிஷாவை சின்னத்திரை திரிஷா என ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள். ஆண் கெட்டப்பில் சீரியலில் நடித்து போரடித்து விட்டதால் அசத்தலாக போஸ் கொடுத்து போட்டோக்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

 அழகான ஆயிஷா

அழகான ஆயிஷா

அந்த போட்டோஸ்கள் இன்ஸ்டாகிராம் ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது. சீரியலில் ஆண் போன்ற கெட்டப்பில் பார்த்துவிட்டு இன்ஸ்டாகிராமில் இவரை இவ்வளவு ஒரு அழகான பெண்ணாக பார்ப்பதற்கு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. அதுவும் அவரது நீளமான தலைமுடியும், அந்த எடுப்பான மூக்கும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கிறதாம். இவர் சென்னை தமிழில் பேசுவது பலருக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

 இன்னா கலக்கு கலக்காறாங்கபா

இன்னா கலக்கு கலக்காறாங்கபா

செம மாடல் பொன்னாக இருந்துகொண்டு பேச்சு மட்டும் நம்ம பாசையாக இருக்கு என்று பல ரசிகர்கள் கமெண்ட் போட்டிருக்கிறார்கள். பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கும் போது இவருக்கு இப்போது ஆல்பம் பாடலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் இப்போது பிரபலமாகி வருகிறது. பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு புகழ்பெற்ற பல நடிகர்களில் தர்ஷனுடன் இணைந்து இவர் ஒரு ஆல்பத்தில் கலக்கியுள்ளார். இந்த பாடலை சித்ஸ்ரீராம் தான் பாடி இருக்கிறார். இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+