அடடா வாடா செல்லமே.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பக்கம் போனீங்களா.. மெகருன்னிஷா வந்தாச்சு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது .அந்த வகையில் முதல் இடத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் புதுமுகமாக அறிமுகமாகும் நடிகை சத்திய சாயி. இவர் இந்த சீரியலில் மெகருன்னிஷா எனும் கேரக்டரில் நடிக்க இருக்கிறார். இந்த சீரியல் பொதுவான பல படங்களின் கதைகளை போல இருந்தாலும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது.
இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மனதில் நல்ல ஒரு இடத்தை பெற்று விட்டார்கள். இதில் அண்ணன் தம்பி 4 பேர் அவர்களின் மனைவிகள் பற்றி கூட்டுக்குடும்பமா கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

3 அண்ணன் 3 அண்ணி
இதில் அண்ணன்கள் மூன்று பேருக்கும் ஜோடியோடு இருக்கிறார்கள். கடைக்குட்டி கண்ணனுக்கு மட்டும் ஜோடி இல்லாமல் இருந்தது. அவருக்கும் தற்போது ஜோடி வரப் போகுது.. குட்டி அண்ணி மீனா வளைகாப்பு, பிரசவம் முடிந்த கையோடு கண்ணனுக்கு ஜோடி சேர்க்க களம் இறங்கிட்டாங்க. கண்ணனுக்கும் பெண்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் அவருடைய ஜோடி யார் என்று தெரிந்து கொள்வதில் ரசிகர்களையும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கடைக்குட்டிக்கு காதல்
அந்த வகையில் இவர்களின் அறிமுக காட்சி இன்ஸ்டாகிராமில்வைரலாக பரவி வருகிறது. ஆமாங்க,, கண்ணனுக்கு காதல் திருமணம் நடக்கப் போகுது. கண்ணனின் காதல் திருமணம் இனி இந்த சீரியலில் பெரும் என்டர்டைன்மென்ட் ஆகவும் அந்த வீட்டிற்குள் என்ன மாதிரியான நிகழ்வுகள் வரப் போகின்றன என்ற பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. மீனாவும் சீரியலில் இல்லை, பிரசவம் காரணமாக. எனவே ஒரு கை குறைந்த நிலையில் மெஹருன்னிஷாவைக் கொண்டு வருகின்றனர்.

குட்டி செல்லம் சத்தியசாயி
இந்த சீரியலில் அறிமுகமாகும் சத்தியசாயி ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக செல்லமே படத்தில் தோன்றியிருக்கிறார். அந்த படத்தில் சின்ன வயது ரீமாசென் கேரக்டரில் இவர்தான் நடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் டி ராஜேந்தர் நடித்த சொன்னால்தான் காதலா என்ற படத்திலும், விஜயகாந்தின் தேவன் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார் .அதன் பிறகு சரவணன் மீனாட்சி சீரியலில் ரம்யா கேரக்டரில் நடித்திருக்கிறார் .

நிறைய அனுபவம்
விண்ணைத்தாண்டி வருவாயா, லட்சுமி கல்யாணம் என மேலும் பல சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். இதனை தொடர்ந்து ஜீ தமிழில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த அழகிய தமிழ் மகள் சீரியலில் ஏற்கனவே நடித்துக்கொண்டிருந்த கதாநாயகி சினிமா பட வாய்ப்புக்காக இந்த சீரியலில் இருந்து விலகியதும் அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. இதுவரையிலும் சீரியலில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் கொண்டாட்டமாக தான் இருந்திருக்கிறது .

நல்ல ரீச்
சந்தோஷமாக உடனே ஓகே என்று சொல்லி இந்த சீரியலில் நடித்து இருக்கிறார். இவரது முக அமைப்பு, இந்த சீரியலில் இவரது கச்சிதமான கேரக்டரும் ரசிகர்களிடம் நன்றாகவே ரீச் ஆகியிருக்கிறது . சத்தியசாய், ஏற்கனவே தம்பிராமையா நடித்த ஊ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இவருக்கு கல்யாணமாகி விட்டதாம். இருந்தாலும் தொடர்ந்து சீரியல்களில் தனது திறமையைக் காட்டிக் கொண்டிருக்கிறார். நடிப்புக்கும், திறமைக்கும் திருமணம் தடையே இல்லை என்பது இவரது வாதமாகும்.

ஆதரவு தர காத்திருக்கும் ரசிகர்கள்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ராஜா மகள் என்னும் சீரியலிலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் பாண்டியன் ஸ்டோர்ஸில் அறிமுகமாகிறார். இது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மனதில் பெரும் இடத்தைப் பிடித்திருப்பது போல இவரும் இந்த சீரியலில் நல்ல இடத்தைப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல ரசிகர்களும் இவருடைய நடிப்பைக் காண தயாராகி வருகின்றனராம்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications