chithi 2: சன் டிவிக்கு சீசன் 2 என்பது வழக்கம் இல்லாதது...!
சென்னை:சன் டிவிக்கு எதிலும் சீசன் 2 என்பது வழக்கம் இல்லாதது. முதன் முறையாகத்தான் சித்தி 2 என்று வழக்கப்படுத்தி இருக்கிறார்கள்.
சன் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து துவங்கினாலும் சீனியர் ஜூனியர் என்றுதான் இருக்குமே தவிர இதற்கு சீசன் 2 அல்லது 3 என்கிற வரிசை எல்லாம் கிடையாது.
இதே போலத்தான் சீரியல்களுக்கும்.. கல்யாண பரிசு சீரியல் கூட இப்போது இரண்டாவது சீசன்தான். அதற்கு கூட இரண்டாவது என்கிற வரிசை எல்லாம் கிடையாது.

சித்தி 2 ராதிகா
சின்னத்திரையில் ராதிகா சரத்குமாருக்கு கிட்டத்தட்ட சரிவு என்றாகிவிட்ட நிலையில்தான் அவருக்கு ரீ என்ட்ரி கொடுப்பது போல சித்தி 2 என்பதை கையில் எடுத்து இருக்கிறார் ராதிகா சரத்குமார். இதை சன் டிவியும் ஏற்றுக்கொண்டு அவரை வரவேற்று இருக்கிறது.

நந்தினி 2 சுந்தர் சி
சித்தி 2 சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதை அடுத்து நந்தினி 2 சீரியலும் பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளதாக சுந்தர் சி தெரிவித்துள்ளார். போகும் இடங்களில் தன்னை நந்தினி 2 எப்போது வரும் என்று கேட்பதாகவும். தான் மிக விரைவில் அந்த சீரியலின் 2ம் பாகத்தை ஆரம்பிக்க உள்ளதாக பதில் கூறியதாகவும் கூறினார்.

நந்தினி சீரியல்
சின்னத்திரையில் மிக பிரமாண்டமான சீரியலாக நந்தினி சீரியல் உருவாகி குழந்தைகளுக்குப் பிடித்தமான பாம்பு கதையாக தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது. குஷ்பூவுக்கு சன் டிவியில் சீரியல் இயக்கி பரிசாகத் தந்து அவரை மகிழ்வித்ததாக சுந்தர் சி கூறி இருந்தார்.

போட்டியாக சுந்தர் சி
அந்த வகையில் சுந்தர் சி யின் நிறுவனமும் ராதிகாவின் நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு, சன் டிவிக்கு சித்தி 2, நந்தினி 2 என்று சீரியல்களை வரும் வருடத்துக்கு வழங்க உள்ளனர் போலும். சன் டிவியும் சீசன் 2 என்று மற்ற சானல்களுக்கு நிகராக களத்தில் இறங்கி போட்டியிட தயாராகி வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications