வீரன் இவன் என சொல்லித் தெரிவதில்லை... தோற்றம்.. முழங்கிய சீதா தேவி
சென்னை:சன் டிவியில் ஜெய் அனுமான்தொடர் தினமும் ஒளிபரப்புவதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பிப் பார்த்து ரசிக்கிறார்கள்.
அனுமன் அசோக வனத்திலிருக்கும் சீதையை கண்டுவிட்டான். தான்தான் ராமர் பிரபுவின் பக்தன் என்றும்அன்னை சீதா தேவிக்கு நிரூபித்து விட்டான்.

சீதைக்கு இப்போது தன் பிரபு தன்னைக் காக்க வந்து விடுவார் என்னும் நம்பிக்கை வருகிறது.சீதா தேவியை கண்ட ஆனந்தத்தில் அனுமன் இருக்க, அனுமன் மரங்களிலிருக்கும் பழங்களை சாப்பிடுன்னு சொல்றாங்க சீதா தேவி.
அனுமனும் அவ்வாறே சாப்பிட, அசோக வனத்தில் சீதைக்கு காவலாக இருக்கும் அரக்கிகள் என்ன சின்ன வானரத்தை நம்பி பூரிப்பில் இருக்கிறாயா என்று வம்பு இழுக்கின்றனர்.
அவன் என்ன பெரிய வீரனா என்று அரகிக்கிகள் கேட்க .. வீரன் என்பவனைப் பார்த்தாலே தெரியும்ன்னு சொல்றாங்க. அனுமன் மாவீரன்...வீரன் என்பவன் சொல்லித் தெரிவதில்லை.

எவனது கால்கள் யானை போல இருக்கிறதோ அவன் வீரன்.. எவனது தோள்களில் அவனே தட்டினால் அவனை சுற்றி இருக்கும் மிக நீண்ட தொலைவு இடங்களில் அதிர்வு ஏற்படுகிறதோ அவன் வீரன்.
சீதா தேவி சொல்லும்போதே அனுமன் தனது தோள்களைத் தட்ட ராவணனின் சிம்மாசனம் அதிர்கிறது. எவன் தனது தொடைகளைத் தட்டினால் அதே போல அதிர்வலைகள் மீண்டும் பலமாக உண்டாகிறதோ அவன் வீரன்..
அனுமனும், என் பிரபு ஸ்ரீ ராமரும் வீரத்தின் உறைவிடம். அனுமன் என் பிரபு ஸ்ரீராமரின் மிகப் பெரும் பக்தன் என்று பெருமையுடன் செருக்காக வசனம் பேசுவது மிக நன்றாக இருந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications