பக்கத்து வீட்டில் சட்டைக்குனு வாங்கிய கஞ்சியை எனக்கும் சிஸ்டருக்கும் கொடுத்த அம்மா! செல்வராகவன் ஓபன்
சென்னை: சிறு வயதில் தாங்கள் சாப்பிடுவதற்கு சோறு கூட இருக்காது என்றும் தனது அம்மா, பக்கத்து வீட்டுக்கு சென்று துணிக்கு போட கஞ்சி வேண்டும் என கூறி வாங்கி வந்து அதை தனக்கும் தனது சகோதரிக்கும் கொடுப்பார் என செல்வராகவன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். இவரது காதல் கொண்டேன் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அந்த படம்தான் தனுஷுக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது.

தந்தை கஸ்தூரிராஜாவை அனைவருக்கும் தெரிந்திருந்த நிலையில் இந்த படத்தின் மூலம்தான் செல்வராகவன் யார் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து செல்வராகவன் புதுப்பேட்டை, மயக்கம் என்ன, 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். அவையும் ஹிட்டானது.
7ஜி ரெயின்போ காலனி
இவருக்கும் 7ஜி ரெயின்போ காலனியில் நடித்த சோனியா அகர்வாலுக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
உதவி இயக்குநர்
இதையடுத்து தன்னிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீதாஞ்சலியை காதலித்து செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செல்வராகவன், பீஸ்ட், பகாசுரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
ஆயிரத்தில் ஒருவன் 2
தற்போது அவர் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய கதைகளையும் இயக்கவுள்ளார். மேலும் தனுஷ் இயக்கிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் செல்வராகவன் இயக்கினார். இது சுமாராகத்தான் இருந்தது.
வறுமை
இந்த நிலையில் செல்வராகவன் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் சிறு வயதில் இருந்த வறுமை, போராட்டங்கள் குறித்து விவரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சின்ன வயதில் எங்களுக்கு வறுமை அதிகம். ஊர்ல இருந்து சென்னைக்கு எங்க அப்பா பிழைக்க தான் கூட்டிட்டி வந்தாரு. சாப்பிடுவதற்கு சோறு கூட இருக்காது.
கஞ்சி
அப்போ நானும் என் சிஸ்டரும் மட்டும்தான் இருந்தோம். என் அம்மா பக்கத்து வீட்ல போய், அப்பா வேலைக்கு போகணும், அதனால் டிரஸுக்கு போட கஞ்சி கொடுங்கன்னு கேட்டு வாங்கிட்டு வந்து அதை எங்களுக்கு கொடுப்பாங்க. அப்படி வறுமையோட முழு உருவத்தையும் பார்த்தவர்கள் நாங்கள்.
தனுஷ் பிறந்ததும்
இதில் வறுமையை பார்க்காமல் வளர்ந்தவர் தனுஷ். அவர் பிறக்கும் போது ஓரளவுக்கு செட்டில் ஆகிவிட்டோம். இவ்வாறு செல்வராகவன் தெரிவித்தார். அது போல் அவர் மேலும் கூறுகையில் மயக்கம் என்ன திரைப்படத்தில் அடிடா அவள உதைடா அவள என்ற பாடல் வரியை எழுதியது தனுஷ்.
நான் மாட்டினேன்
ஆனால் மாட்டிக் கொண்டது நான். ஒரு பெண்ணை வெறுத்தால்தான் அதிலிருந்து நாம் வெளியே வர முடியும் என்பதால் அந்த வரிகளை வைத்தோம். ஆனால் அது வேறு மாதிரி வந்துவிட்டது. போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுவிட்டு வந்தேன் என செல்வா தெரிவித்தார். தற்போது மென்டல் மனதில் என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
கஸ்தூரி ராஜா
கஸ்தூரி ராஜாவின் மகன்கள்தான் செல்வராகவனும் தனுஷும். இருவரும் திரைத்துறைக்கு வந்துவிட்ட நிலையில் அவர்களது சகோதரி பல் மருத்துவராக உள்ளார். தனுஷுக்கு ஒரு வெற்றி பாதையை அமைத்துக் கொடுத்தவர் செல்வராகவன் என சொல்லலாம். செல்வா இல்லாவிட்டால் தனுஷ் இல்லை என்றும் சொல்வதுண்டு. இதை தனுஷே நிறைய முறை சொல்லியிருக்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications