முதலிரவுல சுவீட் எதுக்கு.. சொம்பு நிறைய பால் பழம் எதுக்கு செம்பா?

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ராஜா ராணி சீரியல்: முதலிரவுல சுவீட் எதுக்கு! சொம்பு நிறைய பால் பழம் எதுக்கு!- வீடியோ

    சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் வருத்தம், கோபம், மனஸ்தாபம் எல்லாம் மறைந்து போய், குடும்பத்தில் குதூகலம் மட்டுமே நிறைஞ்சு இருக்கு.

    வினோதினிக்கும் ,ஹரீஷுக்கும் அவங்க ஆசைப்பட்ட படியே கல்யாணம் நடந்துருது. முதலிரவுக்கான ஏற்பாடுகளை கார்த்திக் கவனிச்சுட்டு இருக்கான்..

    செம்பா தட்டு நிறைய சுவீட் எடுத்துட்டு வந்து வச்சுட்டு போறா.செம்பா என்னது வச்சுட்டு போறேன்னு கேட்கறான் கார்த்திக்.

    தட்டு

    தட்டு

    ஒண்ணுமில்லை சின்னையா சுவீட் தட்டு..வச்சுட்டு போறேன்னு சொல்றா செம்பா. முதலிரவுல ஸ்வீட் எதுக்கு செம்பான்னு கேட்கறான் கார்த்திக். தெரியலை சின்னையா..பெரியம்மா வச்சுட்டு வர சொன்னாங்க..

    ஃபர்ஸ்ட் நைட்

    ஃபர்ஸ்ட் நைட்

    இன்னிக்கு வினோதினிக்கும்,, ஹரீஷுக்கும் ஃபர்ஸ்ட் நைட் சின்னையா.. சினிமாவுல எல்லாம் பார்த்திருக்கேன் சின்னையான்னு சொல்றா.பார்த்து இருக்கே..ஆனா,எதுக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமான்னு கேட்கறான்.

    எதுக்கு

    எதுக்கு

    அதான் சொன்னேனே சின்னையா, இன்னிக்கு ஃபர்ஸ்ட் நைட்னு சொல்லி செம்பா வெட்கப்பட்டு கிளம்ப, அவள் கையை பிடிச்சு செம்பா, இதெல்லாம் எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு போன்னு சொல்றான்.

    ரெட்டை குழந்தை

    ரெட்டை குழந்தை

    சின்னையா உங்களுக்கு தெரியுமா...எங்கே சொல்லுங்க பார்ப்போம்னு கேட்கறா. இதெல்லாம் ஓரு சாஸ்திரம்,சம்பிரதாயம் செம்பா. இந்த வாழைப் பழம் இருக்குதே..அது ரெட்டையா ஒட்டி இருந்தா ரெட்டை குழந்தை பொறக்குமாம்ன்னு சொல்றான்..

    ஜாங்கிரி

    ஜாங்கிரி

    அப்படியா சின்னையா..இந்த ஆப்பிள் சாப்பிட்டான்னு கேட்கறா. என்னை மாதிரி கொழுக்மொழுக்னு பொறக்கும்னு சொல்றான்.இந்த ஜாங்கிரியை சாப்பிட்டான்னு கேட்க உன்னை மாதிரி சாஃப்டா இருக்கும்.

    மாதிரி குழந்தை

    மாதிரி குழந்தை

    இப்பொ சொல்லு உனக்கு எந்த மாதிரி குழந்தை வேணும்னு கேட்கறான் கார்த்திக். அவனை பிடிச்சு பெட்டில் தள்ளிவிட்டு போங்க சின்னையான்னு சொல்லிட்டு ஓடிடறா செம்பா.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+