Sembaruthi serial: மித்ரா நான் பார்த்து வச்ச மருமகள்.. பார்வதி நீ பேசாதே!
சென்னை: ஒரு பணக்கார புத்திசாலி தொழிலதிபர் அகிலாண்டேஸ்வரி. ஆனால், அவர்களுக்கு வீட்டில் நடப்பதும் தெரியவில்லை.தன்னைச் சுற்றி இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றும் தெரியவில்லை.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் பற்றித்தான் சொல்ல வரோம்னு எல்லாருக்கும் புரிஞ்சு இருக்கும். தனது மகன் ஆதிக்கு என்று ஒரு மருமகளை தேர்வு வச்சு தொழில் கத்துக் கொடுக்கறாங்க அகிலா அம்மா.
அவங்க தேர்வு செய்திருக்கும் மருமகள் மித்ரா, ஆதி கடவுள் வம்சத்தை ஒழிக்க வந்தவள் என்று வீட்டில் இருக்கும் அகிலாவின் எதிரிகளுக்கு நல்லா தெரியும். அவங்க சொல்ல மாட்டாங்க.

பார்வதி ஆதி
வீட்டுக்குள் டிரைவரின் மகள் பார்வதியும், தனது மகன் ஆதியும் காதலிப்பது தெரியவில்லை. இவ்வளவு ஏன் கல்யாணமே செய்துகிட்டாங்க அதுவும் வருஷம் ஆகியும் தெரியலை. வீட்டில் இருப்பவர்கள் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இதை எல்லாம் கதைக்கு என்றாலும் சகிச்சுக்க முடியலை.

ஆதி மகன்
இந்த சீரியலை மக்கள் விரும்பிப் பார்க்க ஆரம்பிச்சதே முதலில் நடிகர் கார்த்திக் ராஜுக்காகத்தான். ஆனால், இவர் கடந்த ஒரு மாதத்தில் எத்தனை காட்சிகளில் வந்து போனார் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவுக்கு கதையின் முக்கிய நாயகனான ஆதியை பார்ப்பது அரிதாகி கதை எங்கெங்கோ போகிறது.

மாத்தின கதையை
மக்கள் விரும்பும் ஆதிக்கு என்ன பிரச்சனையோ.. அதனால் அவர் இல்லாத மாதிரி.. ஆனால் அவருடன் தொடர்புடையது போல காட்சிகளை அமைத்து சீரியலை தம் கட்டி நகர்த்துவது நன்றாகவே புரிகிறது. இருந்தாலும் மக்கள் செம்பருத்தி சீரியல் நேரம் என்றால், எந்த வேலையையும் விட்டுவிட்டு ஜீ தமிழ் டிவி சேனலைத்தான் பார்க்கிறார்கள்.

ஆதிக்கடவுள் வம்சத்தை
மித்ரா ஆதிக் கடவுள் வம்சத்தை அழிக்க வந்தவள் என்று நிரூபிக்க பார்வதி, அகிலாண்டேஸ்வரி அம்மாவை அவங்க ரூமுக்கு அழைச்சுட்டு வர்றா. அங்கே மித்ரா அகிலாம்மாவின் லேப்டாப்பை வைத்து எதோ செய்துகொண்டு இருக்கிறாள். மித்ரா என் ரூமில் என் லேப்டாப்பை வைத்து என்ன பன்றேன்னு கேட்க..

லேப்டாப் சர்வீஸ்
இல்லை ஆன்ட்டி.. என் லேப்டாப் சர்வீசுக்கு கொடுத்து இருக்கேன். அவசரமா ஒரு மெயில் அனுப்பணும்.அதுதான்னு மாட்டிக்கிட்ட மித்ரா உளற... இல்லம்மா இவங்கள் பொய் சொல்றாங்க. வேணும்ன்னுதான்னு பார்வதி இழுக்க. ம்ம்ம் பேசாதே... நீ யாரைப்பத்தி கம்பளைண்ட் பண்ணிக்கிட்டு இருக்கே தெரியுமா? நான் தேர்ந்து எடுத்த மருமகள் மித்ரா.. அவளைப் பத்தி பேசறியா..ரூமை விட்டு வெளியில போன்னு திட்டறாங்க. இப்படி இருந்தால் எப்படி தன்னைச் சுற்றி நடப்பது தெரியும்?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications