sembaruthi serial: அச்சு அசல் ஒரே கை ரேகை 2 பேருக்காமே.. எப்புடி நம்புனீங்க அகிலாண்டேஸ்வரி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பார்வதிக்கும், மித்ராவுக்கும் அச்சு அசல் ஒரே கை ரேகைன்னு ஜோதிடர் சொல்றார். பெரிய புத்திசாலி அகிலாண்டேஸ்வரி அம்மாவும் அதை நம்பிடறாங்க.

இப்போவெல்லாம் உலகத்துல எல்லாருக்கும் ஒவ்வொருவித கை ரேகை. கண் கருப்பு விழி இருக்கும்னு ஆதார் மூலமா குழந்தைகளே தெரிஞ்சுக்கறாய்ங்க...

நீங்கதான் அகிலாண்டேஸ்வரி அம்மா அதி புத்திசாலின்னு காண்பிக்கறீங்க. அதே அகிலாண்டேஸ்வரி அம்மாவை நீங்களே அடி முட்டாள்னும் பதிவு செய்யறீங்களா?

 செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியல்

செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி அம்மா பெரும் தொழிலதிபர். ரொம்ப புத்திசாலி. தன் புத்திசாலித்தனத்தால் தொழிலை மென்மேலும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். ஆதி கடவுள் பரம்பரையைச் சார்ந்த பெண்தான் தனக்கு மருமகளாக வரணும்னு நினைக்கறாங்க. ஆதி கடவுள் பரம்பரை என்று சொல்லி மித்ரா அந்த வீட்டுக்குள் நுழைஞ்சுடறா. இதை கண்டுபிடிக்க தெரியலை அகிலா அம்மாவுக்கு.

 ஆதி உண்மை

ஆதி உண்மை

அகிலா அம்மாவின் மகன் ஆதி உண்மையை நிரூபிச்சு, தான் காதலிக்கும் பார்வதிதான் ஆதிக் கடவுள் பரம்பரை என்று சொல்லி நிரூபிப்பதற்கான ஆதாரங்களை தேடி வருகிறான். இதற்குள் ஆதிக்கும் மித்ராவுக்கும் கல்யாண ஏற்பாடுகளை செய்யறாங்க அகிலா அம்மா. பார்வதி ஜாதகத்தை வச்சுத்தான் மித்ரா தன்னுடைய ஜாதகம்னு பொய் சொல்றா.இதை நிரூபிக்க ஜோதிடரை கூப்பிடும்போதுதான் ஒரே கை ரேகைன்னு ஜோதிடர் சொல்றார்.

 கை ரேகை

கை ரேகை

ஜோதிடர் மித்ரா, பார்வதி ஜாதகத்தை பார்க்க உட்காருகிறார். இருவர் ஜாதகமும் ஒன்றாக இருக்கிறது. சரி கை ரேகை ஏற்கனவே வைத்து இருப்பதை பார்க்கிறார். அதுவும் ஒன்றாக இருக்கிறதாம். அதனால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது.அகிலாண்டேஸ்வரியும் இதற்கு ஒப்புதல் தெரிவிச்சுட்டு, குறித்த தேதியில் ஆதி மித்ரா கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டு போறாங்க.

 ஒரு சந்தேகம்

ஒரு சந்தேகம்

அகிலாண்டேஸ்வரிக்கு ஒரு சந்தேகம் வர வேணாமா? இரு பெண்கள் ஜாதகம் ஒரே மாதிரி இருக்கட்டும். இரு பெண்கள் கை ரேகையும் ஒரே மாதிரியா இருக்கும்? சந்தேகப்பட்டு கேள்வி கேட்க வேண்டாமா? இத்தனை புத்திசாலி பெண், நான் குறிச்ச படி ஆதி பொறந்தநாள் அன்னிக்கு மித்ரா ஆதி கல்யாணம் நடக்கும்னு சொல்லிட்டு போறாங்க. என்ன கொடுமை இது?!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+