Sembaruthi Serial: கடைசியில் கல்யாணமானதை சொல்லவே இல்லையே...புஸ் பட்டாசு!
சென்னை: சுந்தரத்துக்கு இன்னொரு பேரு விசுவாசம். இப்படித்தான் அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு ஆகாதவங்க கார் டிரைவர் சுந்தரத்தை இப்படித்தான் கிண்டல் அடிப்பாங்க.
ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் பத்தித்தாங்க சொல்றோம். ஆதி பார்வதி கல்யாணத்தை பொறுத்துக்க முடியாத சுந்தரம், இந்த விஷயத்தை அம்மாகிட்டே சொல்லியே தீருவேன்னு வைராக்கியமா கிளம்பறார்.
அகிலாண்டேஸ்வரி அம்மாகிட்ட சொல்லலாம்னு போனால், அவங்க கோயிலுக்கு போயிகிட்டே பேசலாம்னு சொல்றாங்க.அப்போதும் பேச முடியலை.

இந்த எபிசோடும்
கடந்த எபிசோடில் கடைசியில் சுந்தரம் பார்வதி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டா என்று ஆரம்பிச்சு...நம்ம பெரிய தம்பிதான் தாலி கட்டி இருக்கார்னு குண்டைத் தூக்கிப் போடறார். அகிலாண்டேஸ்வரி அம்மாவும் பரம்பரை கவுரவம்தான் முக்கியம்னு துப்பாக்கியை எடுத்துக்கிட்டு வர்றாங்க.

என்னையும் சுடுங்க
அம்மா பார்வதி தப்பு செய்திருந்தா அதில் பாதி என் மேலயும் இருக்கு.என்னை முதலில் சுட்டுடுங்கன்னு சொல்ல, பிள்ளையை இருந்தாலும் பார்க்க மாட்டேன் ஆதி.எனக்கு பரம்பரை கவுரவம்தான் முக்கியம்னு சொல்லும் அகிலாண்டேஸ்வரி குறியை மாத்தவில்லை. வேணாம் அகிலா.. வேணாம் அகிலான்னு சொன்ன கணவர் மயங்கி விழுந்துடறார்.

உயிரே போச்சு
மயங்கி விழுந்தவருக்கு உயிரே போயிருச்சு. என் புருஷன் என்னாலதான் இறந்துட்டார்னு அகிலாண்டேஸ்வரியும் தன்னைத் தானே சுட்டுக்கறாங்க. அய்யோன்னு பார்த்தா...ஆதியும், அப்பாவும் சுந்தரத்தை தனியா கைப்பிடிச்சு அழைச்சு..நீங்க சொன்னால் இதெல்லாம் நடக்கும்.பரவா இல்லையான்னு கேட்கறாங்க.

நான் சொல்லலை
ஆடிப்போன சுந்தரம் என்னால அம்மாகிட்டே எதையும் மறைக்க முடியாது. ஆனால், நான் சொன்ன குடும்பத்துக்கே கஷ்டம்னா நான் சொல்லலை பெரிய தம்பின்னு சொல்றார். கடைசியா வெடிக்காத புஸ பாட்டாசா ஆகிப் போச்சுங்க விஷயம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications