Sembaruthi Serial: ஆதி பார்வதி கல்யாணம் அகிலாண்டேஸ்வரிக்கு எப்போ தெரியறது!
சென்னை: ஆதி பார்வதி ரகசிய கல்யாணம் செய்துகிட்டது அகிலாண்டேஸ்வரிக்கு எப்போ தெரியறது...அதுக்கப்புறம் நாங்க எப்போ கல்யாணம் பண்ணிக்கறதுன்னு உமா சொல்றாங்க.
யாரு இந்த உமா..ஆதி பார்வதி உலகத்துக்கே தெரியும் ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியல் நாயகன் நாயகி. இந்த சீரியலில் உமாவாக நடிப்பவர் ஜெனிஃபர். இவரை ஆதிக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்பது அகிலாண்டேஸ்வரி விருப்பம்.
உமா அதாவது ஜெனிஃபர் சரவணன் என்கிற கார் ஓட்டுனரை காதலிக்கிறார். செம்பருத்தி சீரியல் முடிந்த பிறகு கல்யாணம் செய்துக்கலாம் என்றால் சீரியல் இப்போதைக்கு முடியாது போலிருக்கிறது.

ஜீ தமிழ் டிவி
ஜீ தமிழ் டிவியில் ரேட்டிங்கில் முதலிடத்தில் இருப்பது செம்பருத்தி சீரியல். இதில் பிரியா ராமன் அகிலாண்டேஸ்வரியாக நடிக்கிறாரா. பெரும் தொழிலதிபர். இவரது மகன் ஆதி என்கிற கார்த்திக். இவன் அகிலாண்டேஸ்வரியின் கார் டிரைவர் மகள் அதோடு வீட்டின் வேலைக்காரி பார்வதியை காதலித்து அம்மாவுக்குத் தெரியாமல் கல்யாணமும் செய்துக்கறான்.

தெரியாது அகிலாண்டேஸ்வரிக்கு
இவர்கள் திருமணம் செய்து நிஜத்திலேயே கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகுது.இன்னமும் அகிலாண்டேஸ்வரிக்குத் தெரியாமலே காப்பாற்றி வருகின்றனர். இது எப்போது அவங்களுக்கு தெரிவது, அதற்குப் பிறகான கதை எப்படி நகரும், எத்தனை வருடங்கள் நீளும் என்று கண்ணைக் கட்டிவிட்டது ஜெனிஃபருக்கு.

கல்யாணத்தை செய்துக்கலாம்
சரி நம்ம காதல் கல்யாணத்தை செய்துக்கலாம்னு முடிவெடுத்த உமா என்கிற ஜெனிஃபர் சீரியலில் ஆதி பார்வதி கல்யாணம் செய்துக்கிட்டது போல எளிய முறையில் கோயிலில் கல்யாணம் செய்துகிட்டாங்களாம். கணவர் பெயர் சரவணன்.இவர் கார் டிரைவராக அறிமுகம் ஆனவர். ஆனால், சாதாரண ஆள் இல்லையாம். இன்ஜியரிங் முடிச்சுட்டு தானே டிராவல்ஸ் வச்சு நடத்தி பெரிய ஆளாக வந்துவிட்டாராம் சரவணன்.

குடும்ப விருதுகள்
ஜீ தமிழ் டிவி நடத்திய குடும்ப விருதுகள் விழாவில் கூட ஆதி பார்வதி விருது வாங்கினார்கள்.ஜீ தமிழ் டிவியில் சக்கை போடு போட்டு மக்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் இது. ஆதியும், பார்வதியும் கூட மக்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரங்கள்.ஆதிக்கு தனி பெண் ரசிகை .பட்டாளமே உண்டு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications