Naam Iruvar Namakku Iruvar Serial: பிழிய பிழிய சென்டிமென்ட்.. மாயனை வதைக்குதே!
மாயன் கலர் கலர் கலரான ஜிங்குச்சான் லுங்கி, சட்டை, கண்ணாடி என்று ஆடிய ஆட்டம் என்ன, சொட்டப்பு, சித்தப்பு, நெட்டப்பு, என்று கலாய்ச்சு ஆடிய ஆட்டம் என்ன என்று இருந்தவன், இப்போது தங்கை கல்யாணம் என்று வந்த நிலையில் சென்டிமென்ட வலையில் மாட்டிக்கொண்டு திண்டாடி வருகிறான்.
மாப்பிளையாக வந்த தேவியின் தம்பி அதாவது மாயன் நெட்டப்பு என்று கலாய்த்த மாப்பிள்ளை மாயனை கல்யாணத்தில் இருக்க கூடாது என்று கண்டிஷன் போட ஐயோ பாவம் என்று ஆகி விட்டான் மாயன்.

பழி வாங்கும் விதமாக
மாப்பிள்ளை மாயனை பழி வாங்கும் விதமாக உன் தங்கை கல்யாணத்தை நீ பார்க்க கூடாது என்று கூறி மண்டபத்தை விட்டு வெளியில் போக வேண்டும் என்று கண்டிஷன் போட்டு விடுகிறான், எங்காவது ஒரு மூலையில் இருந்து தங்கச்சி கல்யாணத்தை பார்த்துவிட்டு போயிடறேன்னு மாயன் மாப்பிள்ளையிடம் கெஞ்ச. மாப்பிள்ளை ஒரேயடியாக முகத்தை திருப்பிக் கொள்கிறான்.

பாடாத குறை
சோக கீதம் பாடாத குறையாக மண்டபத்தை விட்டு வெளியேறும் மாயன் தங்கச்சியை நினைச்சுகிட்டு இருக்க தேவி மாயனை காணோமே என்று தேடிக்கொண்டே இருக்கிறாள். மாயனோ தங்கச்சியின் நினைவில் கல்யாணம் நடந்து இருக்குமோ.. தாலி கட்டி இருப்பானோ... ஒரு போன் செய்து பார்க்கலாமோன்னு நினைச்சுட்டு இருக்கான். அண்ணன் தங்கச்சி பாசம்னா என்னன்னு இது ஒரு விதமா காண்பிச்சு இருக்காங்க .

கல்யாணம் நடக்குமா?
மாயன் இல்லாம கல்யாணம் நடக்குமா என்று எதிர்பார்ப்பில் இருக்கும் சீரியல் ஆர்வலர்களுக்கு எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும்படி விஜய் டிவியின் ட்வீட்டர் வலைத் தளத்தில் இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோடின் முன்னோட்டத்தை பதிவிட்டு உள்ளார்கள். அதில், மாயனின் தந்தை பொறுக்க முடியாமல் மகளின் கல்யாணத்தை நிறுத்தி விட்டு மகளை மண மேடையில் இருந்து எழும்படி உத்தரவிடுகிறார்.

அவள் வருவாளா?
மாயனின் தங்கை தேவியின் தம்பியை காதலித்து திருமணம் செய்து கொள்வதால், அப்பா இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லும்போது அவள் வரமாட்டாள் என்று சொல்ல, மாயனின் தங்கை எழுந்து வருவாளா மாட்டாளா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications