உண்மை தெரியாமல் வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்! நேத்ரன் மகள் வெளியிட்ட பதிவு.. குவியும் ஆறுதல்
சென்னை: சீரியல் நடிகர் நேத்ரன் மறைவு பற்றி யூடியூப் சேனல்களில் சிலர் தவறான தகவல்கள் தெரிவித்து வருவதை நிறுத்த சொல்லி அவருடைய மகள் அபிநயா எமோஷனலாக ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
சீரியல் நடிகர் யுவராஜ் நேத்ரன் 22 வருடங்களுக்கு மேலாக சினிமா மற்றும் சீரியல்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். சீரியல் நடிகை தீபாவை தான் காதலித்து திருமணம் செய்து இருந்தார். தீபா சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் முதல் விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்களிலும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தீபா மற்றும் நேத்ரன் தம்பதிக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

அதில் மூத்த மகள் அபிநயா நேத்ரனுடன் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார். நேத்ரன் போலவே அவருடைய மூத்த மகளும் டான்ஸிலும் நடிப்பிலும் கெட்டிகாரி. அது போல டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிஸில் நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் அதிகமாக கஷ்டப்பட்டு இன்று தனக்கென்று ஒரு இடத்தை நேத்ரனின் குடும்பத்தினர் பெற்றிருக்கின்றனர். நேத்ரன் தனக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற ஒரு வருத்தத்தில் இருந்தார். ஆனால் எதிர்பார்க்காத சூழ்நிலையில் அவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாசிட்டிவானது.

புற்று நோய்க்கான ஆபரேஷன் செய்யப்பட்ட பிறகும் சிகிச்சை பலன் இன்றி கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காலமானார். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புவரைக்கும் நான் மீண்டு வந்து விடுவேன் என்று தன்னுடைய சக நண்பர்களிடம் நேத்ரன் தன்னம்பிக்கையோடு சொல்லிக் கொண்டிருந்தார். தன்னுடைய இரண்டாவது மகளின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வரவேண்டும் என் கையால் நான் எல்லோருக்கும் பிரியாணி சமைத்து தருவேன் என்று பாசிட்டிவாக பேசி இருந்தார்.

நேத்ரனின் மூத்த மகள் அபிநயா கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தந்தைக்கு புற்றுநோய் பாசிட்டிவ் என்று வந்துவிட்டதாகவும், அதற்கு ஆப்ரேஷன் செய்த பிறகும் அவர் ஐசியூவில் இருக்கிறார். அவர் விரைவில் நலம் பெற எல்லோரும் வேண்டிக் கொள்ளுங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
அதை தொடர்ந்து சில மாதங்கள் கழித்து ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது அப்பா இப்போது முன்பை விட உடல் நிலையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். விரைவில் நலம் பெற்றதும் அவர் ரசிகர்களிடம் பேசுவார் என்று கூறியிருந்தார். ஆனால் அவருடைய நண்பர்கள் குடும்பத்தினர் ரசிகர்கள் எல்லோருடைய நம்பிக்கை பொய்யாய் போகும்படி அவர் இயற்கை எய்திவிட்டார்.
ஆனாலும் அவர் குறித்து சில youtube சேனல்களில் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது அந்த விஷயத்தால் தான், இந்த விஷயத்தை எல்லாம் என்று சிலர் கற்பனை கதைகளை திறந்து விடுகிறார்கள். இதைப் பார்த்து வருந்திய அவருடைய மகள் தன்னுடைய அப்பாவின் புகைப்படங்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
அதோடு "உங்களை ஒரு ஹீரோவாக பார்க்க இந்த உலகம் தவறிவிட்டது..!! ஆனால் எங்களுக்கு அப்பா நீங்கள் எப்போதும் எங்கள் மிகப்பெரிய மற்றும் பிடித்த ஒரே ஹீரோவாக இருந்தீர்கள். உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியாமல் போனது உங்கள் தவறல்ல...!! நாங்கள் செய்வோம்!! என்று கூறியிருக்கிறார்.
அதுபோல "சில youtube சேனல்கள் உண்மை தெரியாமல் தேவையற்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்திவிட்டு பொறுப்புடன் செயல்படுங்கள்!" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார். அபிநயாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்டில் ஆறுதல் தெரிவித்து வருகிறார் என்றனர்.

எப்போதுமே பெண் பிள்ளைக்கு அவர்களுடைய அப்பாக்கள்தான் ஹீரோ. இப்போது இரண்டு பெண் பிள்ளைகள் ஒரு தந்தையை இழந்து நிற்கின்றனர். காதலித்து கல்யாணம் செய்த மனைவி ஆறு மாதமாக தன்னுடைய கணவரை மீட்டுக் கொண்டு வந்துவிடலாம் என்று போராடி இருந்தார். ஆனால் அந்த போராட்டமும் ஏமாற்றமாக இருக்கிறது.
குடும்ப தலைவனை இழந்து ஒரு குடும்பமே வருத்தத்தில் இருக்கும்போது கூட ஒரு சிலர் தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களை மேலும் கஷ்டப்படுத்துவது வேதனைக்குரியது. இந்த குடும்பத்தினர் நேத்ரன் இறப்பு வலியில் இருந்து மீண்டு வந்து அவருடைய கனவுகளை நிறைவேற்ற நாம் வேண்டிக் கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications