ராஜா ராணி 2.. சிறந்த மகன் விருது பெற்ற "சரவணன்".. விருதை யார் கொடுத்தது தெரியுமா? உருகிய சித்து
சென்னை: விஜய் டெலி அவார்ட்ஸ் விருது வழங்கும் விழாவில் சிறந்த மகனுக்கான விருதை நடிகர் சித்து தனது மனைவி ஸ்ரேயாவிடம் இருந்து பெறுகிறார். இது குறித்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.
தமிழ் சேனல்கள் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. இதில் சிறந்த சீரியல், சிறந்த நடிகை, சிறந்த நடிகர், சிறந்த வில்லி, சிறந்த வில்லன், சிறந்த மகன், சிறந்த மகள், சிறந்த மாமியார் உள்ளிட்ட விருதுகள் என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
முன்னரெல்லாம் சினிமாவில் மட்டுமே இந்த விருது வழங்கும் விழா இருந்து வந்த நிலையில் தற்போது சீரியல்களிலும் இது போன்று நடைபெறுவது உண்மையில் அந்த கலைஞர்களை ஊக்கப்படுத்துவதாகவே இருக்கும்.

விஷயங்கள்
இந்த விருது வழங்கும் விழாவில் நிறைய விஷயங்கள் இருந்தாலும் நடிகர் சித்து விருது வாங்குவதுதான் ஹைலைட்டாகவே உள்ளது. விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் அம்மா பேச்சை தட்டாத பிள்ளையாக சரவணன் என்ற கேரக்டரில் சித்து நடித்து வருகிறார். அது போல் மனைவி சந்தியாவின் விருப்பத்தையும் போராடும் கணவராக இருப்பார்.

சிறந்த மகன்
இந்த நிலையில் சிறந்த மகன் விருதுக்காக சித்துவை மேடைக்கு அழைத்தனர். அப்போது அவருக்கு விருது கொடுப்போரை அழைப்பதற்கு முன்னர் "உனக்காக பொறந்தேனே எனதழகா" எனும் பாடல் ஒலித்தது. இதனால் சித்து யார் வர போகிறார்கள், விருதை தர போகிறார்கள் என ஆர்வத்துடன் காத்திருந்தார்.

சித்து மனைவி ஸ்ரேயா
அப்போது பின்னால் இருந்து சித்து மனைவி ஸ்ரேயா வந்தார். இதனால் திக்குமுக்காடி போனார் சித்து. உடனே அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்த சித்துவிடம் விருது வாங்கியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் என் வாழ்க்கையில் ஸ்ரேயா வரவில்லை என்றால் தவறான வழியில் சென்றிருப்பேன்.

நல்ல பெண்
நல்ல பெண், என்னை அன்பாக பார்த்துக் கொள்கிறார், குழந்தைத்தனம் அதிகம்.. இதற்கெல்லாம் அவரது அப்பா, அம்மாவுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். கடந்த முறை விருது வாங்கும் போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஸ்ரேயாவை அழைத்து வரமுடியவில்லை. இது எனக்கு மனதுக்குள் வருடி கொண்டே இருந்தது.

ஸ்ரேயா மறுப்பு
இந்த முறை விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைத்த போது ஸ்ரேயா மறுத்துவிட்டார். எனக்கு வருத்தமாக இருந்தாலும் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதே போல் ஏன் வரவில்லை என்றும் நான் விரும்பவில்லை. கடைசியில் இவர் கையால் நான் விருது வாங்கியுள்ளேன். என உருக்கமாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications