நடிகை காயத்ரி யுவராஜுக்கு குழந்தை பிறந்தாச்சு..குழந்தை குறித்து உருக்கமான பதிவு.. இப்படி ஒரு அதிசயமா
சென்னை: சரவணன் மீனாட்சி சீரியலில் முத்தழகு கேரக்டரில் நடித்து பிரபலமடைந்த நடிகை காயத்ரி யுவராஜுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
குழந்தை பிறந்ததும் தன்னுடைய குழந்தை குறித்து உருக்கமான சில பதிவுகளை காயத்ரி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் காயத்ரியின் குழந்தையும் காயத்ரி பிறந்த அதே நாளில் பிறந்திருக்கிறது என்று சந்தோஷத்தை காயத்ரியின் கணவர் பகிர்ந்து இருக்கிறார்.
மானாட மயிலாட என்ற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை காயத்ரி இந்த நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்தி அதை தொடர்ந்து சில சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் என்ற சீரியலில் நிலா என்ற கேரக்டரில் அறிமுகமாகி தன்னுடைய தனித்துவமான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.
அதை தொடர்ந்து காயத்ரிக்கு அடுத்தடுத்த சீரியல் வாய்ப்புகள் வந்திருந்தது. அதன்படி தான் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் ஆரம்பத்தில் கதாநாயகி போன்று பாசிட்டிவான கேரக்டரில் இருந்த முத்தழகு கேரக்டர் பிறகு சரவணன் தன்னை விட்டு விட்டு மீனாட்சியை திருமணம் செய்ததும் நெகட்டிவ் ஆக மாறிவிடும்.
வில்லியாகவே அந்த சீரியலில் நடித்து வந்த காயத்ரியை பலர் திட்டி இருந்தாலும் அதைத்தொடர்ந்து தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து மேடு, மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் அடுத்தடுத்து காயத்ரி பல கேரக்டரில் நடித்துக் கொண்டே இருந்தார். அதிலும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அமைதியின் சொரூபமாக இவர் நடித்து பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
அதில் நடிகர் ராஜூவிற்கு மனைவியாக இவர் நடித்திருப்பார். இந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க என்ற சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தார். அதுபோல காயத்ரி நடன இயக்குனரான யுவராஜை தான் திருமணம் செய்திருந்தார். இந்த ஜோடிக்கு தருண் என்கிற 12 வயதில் மகன் இருக்கிறார்.
இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து சமீபத்தில் கர்ப்பமாக இருந்த காயத்ரி அது குறித்த தகவலை ஐந்து மாதத்திற்கு பிறகு தான் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அப்போது இருந்தே இவருக்கு வாழ்த்துக்கள் குவிய தொடங்கி இருந்தது. அதிலும் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்று தாங்கள் ரொம்பவே ஆசையோடு காத்திருப்பதாகவும் இந்த தம்பதி கூறி இருந்தனர்.
அதுபோலவே இப்போது இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை காயத்ரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் காயத்ரி பிறந்த அதே நாளிலே அவருடைய மகள் பிறந்திருக்கிறார் என்ற மகிழ்ச்சியை யுவராஜ் அனைவருக்கும் சந்தோஷத்தோடு பகிர்ந்து இருக்கிறார். அதற்கும் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications