Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Kanmani pregnant: சிங்கப்பூர் போய் குட் நியூஸ் சொன்ன நடிகை கண்மணி! அப்பாவாக போகும் விஜே அஸ்வத்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை கண்மணி மனோகரன் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அறிவித்துள்ளார். அது போல் அஷ்வத்தும் தான் அப்பாவாகும் மகிழ்ச்சியிலஸ் காத்திருக்கிறார். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் இருந்தபடியே இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா எனும் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் பட்டையை கிளப்பியது. இந்த தொடர் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்பாக சென்றது. இந்த சீரியலில் கண்ணம்மாவுக்கு வில்லியாக நடித்தவர் கண்மணி மனோகரன்.

kanmani aswath

இவர் இந்த சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக நடித்தாலும் பின்னர் இவருடைய அஞ்சலி எனும் ரோல் பாசிட்டிவ்வாக மாறும். இந்த சீரியலால் தினமும் மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர். இன்னும் சொல்ல போனால், திட்டு வாங்கிக் கொண்டே இருந்தார்.

பாரதி கண்ணம்மா

பின்னர் திருந்தி கண்ணம்மாவுக்கு உதவும்போதுதான் இவரை மக்கள் பாராட்டினர். பொதுவாக சீரியலில் யார் திட்டு வாங்குகிறார்களோ அவர்கள் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்களது கேரக்டர் பேசப்படுகிறது என்பதாகும்.

சீரியலில் இருந்து விலகிய கண்மணி

எனினும் இந்த சீரியலில் இருந்து இவர் பாதியிலேயே விலகிவிட்டார். பின்னர் ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் ஹீரோயினாக நடித்தார். பின்னர் அந்த சீரியலும் மெகா சீரியல் போல் ஓடாமல் சீக்கிரமாகவே முடிந்துவிட்டது.

சன் டிவி ஆங்கர்

இதையடுத்து அவர் எந்த சீரியலிலும் கமிட்டாகாமல் இருந்தார். பிறகு மகாநதி சீரியலில் நடித்துவிட்டு அதிலிருந்தும் விலகினார். இவர் சன் டிவி ஆங்கர் அஷ்வத்தை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர் சன் டிவியில் வணக்கம் தமிழா எனும் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார்.

மகாபலிபுரத்தில் திருமணம்

அதன் பிறகு இவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

வெப் சீரிஸில் அஷ்வத்

அஷ்வத், இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் சீரியலிலும் நிலா நிலா ஓடி வா எனும் சீரியலிலும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு கண்மணி கணவர் அஷ்வத்துக்கு காரை பரிசாக கொடுத்திருந்தார். இந்த புகைப்படங்கள் வைரலானது. இவர்கள் இருவரும் ஒரு கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்திலும் நடித்திருந்தனர்.

சிங்கப்பூரில் கர்ப்பம் அறிவித்த கண்மணி- அஷ்வத்

இந்த நிலையில் கோடை விடுமுறைக்காக இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றனர். அப்போது விமானத்தில் இருந்து மார்பளவு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் சிங்கப்பூரில் கண்மணி தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார்.

போட்டோஷூட்

இதற்காக பிரத்யேக போட்டோஷூட் நடத்தியிருந்தனர். கண்மணி திரும்பி கொண்டிருப்பார். அப்போது அஷ்வத் வந்து அவரை அழைத்ததும் கண்மணி திரும்பும் போது அவருடைய வயது பெரியதாக இருக்கும். உடனே அஷ்வத் மகிழ்ச்சியில் ஓடி சென்று வயிற்றில் இருக்கும் தனது வாரிசை வருடிவிட்டு கண்மணியின் நெற்றியில் முத்தமிட்டார்.

குவியும் வாழ்த்துகள்

இந்த வீடியோ வைரலான நிலையில் அஷ்வத்- கண்மணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகைகள் நக்ஷத்திரா நாகேஷ், ஃபரீனா, சைத்ரா ரெட்டி, ஸ்ருதி சண்முகப்பிரியா, ஜோவிதா லிவிங்ஸ்டன், மோனிஷா பிளஸ்ஸி, ஹரிபிரியா, கேபிரில்லா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஃபரீனா பதிவு

மேலும் ஃபரினா தனது பதிவில், நீண்ட நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். "கின்னி கொண்டு வா, குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து சர்க்கரை வாங்கிக் கொண்டு போ" என தெரிவித்துள்ளார். கேபியும் கர்ப்பமாக இருக்கிறார். அது போல் ஷாரிக்கின் மனைவி மரியாவுக்கு நேற்று முன் தினம் வளைகாப்பு நடந்தது. அண்மையில்தான் இந்திரஜா ரோபோ சங்கருக்கும் சீரியல் நடிகர் கார்த்திக்- காயத்ரி தம்பதிக்கும் குழந்தை பிறந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+