பிக்பாஸ் சீசன் 6.. யாரு இந்த சர்ச்சை நடிகை கலந்துக்க போறாங்களா?.. ஒரே அக்கப்போராயிருக்குமே!
சென்னை: பிக்பாஸ் சீசன் 6 இல் அண்மையில் சர்ச்சையில் சிக்கிய நடிகை ஒருவர் கலந்து கொள்ள போகிறாராம்.
விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிகழ்ச்சியின் 5ஆவது சீசன் நடந்து முடிந்தது. இவற்றை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். 24 மணி நேரமும் இந்த நிகழ்ச்சியை காணும் வகையில் பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சியும் தொடங்கி முடிந்தது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 2 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக போட்டியாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்களுமே ஜூன் மாதம் தொடங்கியது.

கொரோனா தொற்று
ஆனால் கொரோனா தொற்று, போட்டியாளர்களை தனிமைப்படுத்திவிட்டு பின்னர் பிக்பாஸ் வீட்டுக்கு அழைப்பது உள்ளிட்டவைகளால் கடைசி இரு சீசன்கள் அக்டோபரில் தொடங்கியது. 6ஆவது சீசன் நிகழ்ச்சியை சிம்பும் கமல்ஹாசனும் தொகுத்து வழங்குவார்கள் என கூறப்பட்டது.

கமல்ஹாசன்
ஆனால் இந்த சீசனை கமல்ஹாசன் மட்டும் தொகுத்து வழங்குவார் என கூறப்பட்டுள்ளது. இந்த சீசன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியிடப்படும். இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்ற பேச்சு கடந்த சில தினங்கள் அடிப்பட்டு வருகிறது. அதன்படி விஜே ரக்சன், சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, நடிகர் கார்த்திக் குமார், மாடல் அஜய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

சர்ச்சை
இவர்களுடன் அண்மையில் சர்ச்சையை கிளப்பிய சீரியல் நடிகை ஸ்ரீநிதி கலந்து கொள்கிறார் என தகவல்கள் கூறுகின்றன. சிம்புவை தான் காதலிப்பதாக கூறிய ஸ்ரீநிதி அவதை திருமணம் செய்து கொள்ள அவரது வீட்டு முன்பு தர்ணா போராட்டம் செய்தார்.

ஸ்ரீநிதி
பின்னர் அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த சக சீரியல் நடிகை நட்சத்திரா திருமணம் செய்து கொண்ட நபர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களை தெரிவித்தார். தனது மகள் போட்ட ட்வீட்டை யாரும் நம்ப வேண்டாம் என ஸ்ரீநிதியின் தாயார் கேட்டுக் கொண்டார். மேலும் தன்னுடனேயே இருந்து நட்சத்திரா பிரிந்து விட்டாரே என்ற விரக்தியில் இப்படி ட்வீட் போட்டதாகவும் தெரிவித்தார். எனவே இவர் பிக்பாஸில் கலந்து கொண்டால் என்னென்ன அக்கப்போர்கள் நடக்க போகிறதோ தெரியவில்லை.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications