ஆத்தீ! ரசம் சாதத்திற்கு ஜிஎஸ்டியுடன் ரூ 11 ஆயிரம் பில்லா?.. நடிகை வினோதினி சொல்ற கணக்கை பாருங்க!
சென்னை: மத்திய அரசு எதற்கெல்லாம் ஜிஎஸ்டி போட்டுள்ளார்கள் என்பதை நகைச்சுவையாக விவரித்துள்ள நடிகை வினோதினியின் வீடியோ வைரலாகி வருகிறது.
அரிசி, பால், தயிர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்தி 47 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பேக் செய்யப்பட்ட பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியாக விதித்து ஜூலை 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அது போல் அரிசி, கோதுமை மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் தற்போது 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி வந்த அரிசி, கோதுமை, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டதால் இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளன.

சின்னத்திரை
இதுகுறித்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகை வினோதினி வெளியிட்ட வீடியோவில், "சாப்பீட்டீங்களா வாங்க! எப்பா பில்லை போடு! என்ன சாப்பீட்டீங்க! ரசம் சாதமா, ரசத்திற்கு ஜிஸ்டி, சாதத்திற்கு ஜிஎஸ்டி, ரசத்தில் ஊற்றின நெய்க்கு ஜிஎஸ்டி, நெய்யில் கலந்த டால்டாவிற்கு ஜிஎஸ்டி, ரசத்திற்கு கடுகு தாளித்தோமே அதுக்கு ஜிஎஸ்டி போடுங்கள்.

ஜிஎஸ்டி
தாளித்த எண்ணெய்க்கு ஜிஎஸ்டி, எண்ணெய் ஊற்றப்பட்ட பாத்திரத்திற்கு ஜிஎஸ்டி, பாத்திரத்தை வைத்த ஸ்டவ்விற்கு ஜிஎஸ்டி, ஸ்டவ்விற்கு அடியில் இருக்கும் சிலிண்டருக்கு ஜிஎஸ்டி.. போட்டு முடிச்சிட்டியா! சார் விரலை காட்டுங்கள்... 1, 2, ,3 ,4 5, 6, 7, 8, 9, 10 ஆஹா சார் 10 விரல் வச்சிருக்காரு.

10 விரலுக்கும் ஜிஎஸ்டி
10 விரலுக்கும் ஜிஎஸ்டி போடு.. என்னாது இது உங்க விரல்லா, சாப்பிட யூஸ் செய்தீர்களே. என்னாது வலது கையை மட்டும் யூஸ் செய்தீர்களா, ஏன் இலையை அட்ஜஸ்ட் செய்ய இடது கையையும் தானே யூஸ் செய்திருப்பீர்கள். என்ன ஏமாற்ற பாக்குறீங்களா, அப்பறம் அந்த மூக்குக்கு ஜிஎஸ்டி போடு!

மூக்குக்கு ஜிஎஸ்டியா
என்னாது மூக்குக்கு ஜிஎஸ்டியா, ஆமா சாப்பாட்டை எடுத்து முகர்ந்து பார்த்தீர்களே! அதுக்குத்தான்! அந்த மூச்சுக் காற்றுக்கு ஜிஎஸ்டி போடாம இருக்கோமேனு சந்தோஷப்படுங்க! பில் எவ்வளவு ஆச்சு ரூ10,325.35 காசுகள்! ரவுண்டா ரூ 11 ஆயிரம் பில் போடுங்கள். மேலே இருக்கிறது அவங்க போட்ட ஜிஎஸ்டி, நாங்கள் போட வேண்டாமா. என்னாது காசு இல்லையா. போங்க சார் போய் கோடீஸ்வரனாய்ட்டு வாங்க, அப்பதான் வாழ முடியும். நீங்க கோடீஸ்வரனா பொறக்காதது உங்கள் தப்பு! என்னாது உழைத்து கோடீஸ்வரனாக போறீங்களா! அப்பாவி! உன் கிட்ட போய் பேசின பாரு போ வேலையை பாரு! 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறேன் 30 நாளைக்கு! போய் முக்கி முக்கி வேலையை பாரு என வினோதினி நகைச்சுவையாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications