Nayagi Serial: கட்டிக்கறதும்... ஒட்டிக்கறதும்...பார்க்க சொல்றதும்...சீரியலுக்கும் சென்சார் தேவை!
சென்னை:சன் டிவியின் நாயகி சீரியல் கடந்த ஒரு வாரமாகவே அடுத்தவங்க பெட்ரூமை எட்டிப் பார்க்கற மாதிரியான ஒரு உணர்வை ஏற்படுத்தி கூச்சப்பட வைக்குது.
புருஷன் பொண்டாட்டி இடையில சண்டையை மூட்டி விடறேன் பாருன்னு சவால் விடறதும்.. சண்டைக்கு அப்புறம் சமாதானத்துக்கு என் புருஷன் கொஞ்சுவார் பாருன்னு சொல்றதும்..
அதை வீடியோ கால் போட்டு பார்க்கறியாடின்னு கேட்கறதும்.. அநாகரீகத்தின் உச்சம்..

முழுக்க அடுத்தவள்
நாயகி சீரியல் முழுக்க அடுத்தவள் புருஷனுக்கு ஆசைப்படும் கதைதான். இதில் உச்சம் என்னவென்றால், அனன்யா ஒரு படி மேலே போயி, தான் ஆசைப்படும் திருவின் உயிரணுக்களை அவனுக்கு தெரியாமலே எடுத்து, தனது கரு முட்டையில் சேர்த்து ஒரு குழந்தையாக பெற்று எடுத்து வளர்ப்பதுதான்.

ரூம் போட்டு
திரு தனக்கு கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும் அவனையும் விடா முயற்சியாக அஸ்த்திரங்களை வீசி, அவனது குடும்பத்துக்கு தொந்திரவு கொடுத்து, அவனை அடைய நினைப்பது என்பது.. படு கேவலமாக இருக்கிறது. இது போல ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை சித்தரிப்பது என்பதை எப்படித்தான் ரூம் போட்டு யோசித்தார்களோ தெரியவில்லை.

சண்டை போடுவாண்டி
உன் புருஷன் உன் கூட சண்டை போடுவாண்டி என்று அனன்யா சொல்ல, சொன்னபடி திரு ஆனந்தியிடம் சண்டை போட... சண்டை போட்டபிறகு என் புருஷன் என்கிட்டே கொஞ்சுவாரு பாரு..அதை நீயும் பாருடின்னு சொல்லிட்டு ஐஸ் கிரீம் பார்லருக்கு போயிட்டு. வீடியோ கால் போட்டு ரெண்டு கண்ணை வச்சுக்கிட்டு பாருடீன்னு புருஷனை ஐஸ்கிரீம் ஊட்ட சொல்லி பார்க்க சொல்ல..

முடியலடா சாமி
வீட்டு வரவேற்பறையில் 8 மணிக்கு இந்த கூத்து நடந்தால்.. குடும்பத்தோட எப்படிங்க உட்கார்ந்து சாப்பிடுவது.. டிவி பார்ப்பது?தயவு செய்து டிவி சானல்களுக்கு ஒரு சென்சார் போர்டு வச்சு தொலைங்கப்பா! தாங்க முடியலை.. டிவி சீரியல்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதறவங்க பொம்பளைங்க இல்லேங்க...
என்னவோ பொம்பளைங்க இப்படித்தான் இருப்பாய்ங்கன்னு நீங்களா கற்பனை பன்னிப்பீங்களா?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications