12 வருஷம் கழிச்சி மீண்டும் கர்ப்பம்.. ஏம்மா காயத்ரி இப்படியா செய்வது.. பதறி போய் ரசிகர்கள் அட்வைஸ்
சென்னை: கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் சீரியல் நடிகை காயத்ரி என்ன செய்தார் தெரியுமா, வீடியோவை பார்த்து ரசிகர்கள் பதறியும் அறிவுறுத்தியும் வருகிறார்கள்.
திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு திருமணமாகி குழந்தை பிறக்கும் நிகழ்வுகள், என்ன குழந்தை, பெயர் என்ன உள்ளிட்ட விஷயங்களை ரசிகர்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்கள். குழந்தையின் முகத்தை காண வேண்டும் என்றும் சில ஆர்வகோளாறுகளாக இருப்பர்.

அது போல் அண்மைக்காலமாக சீரியல் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அவர்களும் தங்கள் திறமைகளை ரீல்ஸ் உள்ளிட்ட சமூகவலைதளம் மூலம் நிரூபித்து வருகிறார்கள். ஒரு சிலர் மேக்கப், சமையல் குறிப்புகள், வீட்டு குறிப்புகளையும் வீடியோவாக பதிவிடுகிறார்கள்.
அது போல் தங்கள் வாழ்வில் நடக்கும் நல்லது கெட்டது என எதுவாக இருந்தாலும் அவற்றை இவர்கள் சமூகவலைதளம் மூலம்தான் ரசிகர்களுக்கு தெரிவிக்கிறார்கள். நடிகர், நடிகைகளின் திருமணம் , சீமந்தம், காதல், காதல் முறிவு, குழந்தை பிறப்பு, வீடுகளில் நடக்கும் துக்க சம்பவம், உடல்நலம் பாதிப்பு போன்றவைகளை ரசிகர்கள் அறிய நடிகர், நடிகைகளுக்கும் அவர்களுக்கும் சமூகவலைதளங்கள் ஒரு பாலமாக இருக்கின்றன.
அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் என்றாலே தனி பாசம் மக்களுக்கு இருக்கிறது. அந்த வகையில் மக்கள் மனங்களை கவர்ந்தவர் சரவணன் மீனாட்சியில் நடித்த காயத்ரி. இந்த சீரியலில் அறிமுகமான இவர் அரண்மனை கிளி, சித்தி 2, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கனவு உள்ளிட்ட ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
தற்போது ஜீ தமிழில் மீனாட்சி பொண்ணுங்க என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் நடன இயக்குநரான யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே இவர்களுக்கு 12 வயதில் தருண் என்ற மகன் இருக்கிறார். இந்த நிலையில் அண்மையில்தான் காயத்ரி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறோம் என மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் நடிகை காயத்ரி ஒரு துணிக்கடையின் விளம்பரத்திற்காக கர்ப்பிணிகள் அணியும் வகையில் இதமாக இருப்பதாக நடனம் ஆடி ரீல்ஸ் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பதறி போய் கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படியெல்லாம் டான்ஸ் ஆடலாமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதிலும் பார்ப்பதற்கு 5 மாதம் போல் இருக்கிறது. ஜாக்கிரதையாக இருக்க வேண்டாமா என கேட்டு வருகிறார்கள்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications