சீன் எடுக்க லேட்டுனு சொன்ன உதவி இயக்குநர்! முகத்திலேயே ஓங்கி குத்திய கண்ட நாள் முதல் சீரியல் நடிகர்
சென்னை: சென்னை மதுரவாயலில் சின்னத்திரை சீரியல் ஷீட்டிங்கின் போது உதவி இயக்குநரை சீரியல் ஹீரோ நவீன் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மதுரவாயல் அருகே கிருஷ்ணா நகர் 1-ஆவது தெரு பகுதியில் ஷூட்டிங் நடத்துவதற்கென்றே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சீரியல் நிர்வாகத்தினர் ஷூட்டிங் நடத்தி வருகிறார்கள்.
இந்த வீட்டில் சின்னத்திரை சீரியலான கண்ட நாள் முதல் என்ற தொடரின் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதில் கதாநாயகனாக நவீன்குமார் நடித்து வருகிறார். இவர் அண்மையில் செய்தி வாசிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

சீரியல் உதவி இயக்குநர்
இந்த நிலையில் சீரியலின் உதவி இயக்குநரான குலசேகரனை நவீன் தாக்கியுள்ளார். இதில் குலசேகரனுக்கு மூக்கு மற்றும் கன்னம் ஆகியவற்றில் ரத்தம் வெளியேறியது. இதுகுறித்து குலசேகரன் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

குலசேகரன்
இதுகுறித்து குலசேகரன் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கண்ட நாள் முதல் எனும் சீரியலில் நான் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். இதில் நவீன் ஹீரோவாக நடித்து வருகிறார். ஒரு குறிப்பிட்ட சீனுக்கு பிறகு பிரேக் விடப்பட்டது. அந்த முடிந்ததாக அறிவிக்கப்பட்டும் நவீன் அடுத்த ஷாட்டுக்கு ரெடியாகவில்லை.

சீன் எடுக்க லேட்
இதனால் நான் அவரிடம், சீன் எடுக்க நேரமாகிவிட்டது, உடனே வாருங்கள் என அழைத்தேன். அதற்கு நவீனோ எனக்கு எல்லாம் தெரியும் என கூறி என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். இதற்கு நான் தட்டி கேட்டதற்கு என்னை ரத்தம் வரும் வரை தாக்கிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் குலசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

மதுரவாயல்
இதையடுத்து இரு தரப்பையும் அழைத்து மதுரவாயல் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நாங்கள் எங்களுக்கான சங்கத்தில் பேசித் தீர்த்துக் கொள்வதாக கூறிவிட்டு இருவரும் கிளம்பிவிட்டனர். ஷீட்டிங்கில் உதவி இயக்குநரை தாக்கியதாக சொல்லப்படும் நடிகர் நவீன் பூலோகம் ,பட்டாசு, மிஸ்டர் லோக்கல், போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலர்ஸ் தமிழ்
இந்த சீரியல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நவீன் குமார் குமரன் என்ற ரோலில் நடித்து வருகிறார். உடன் தர்ஷனா அசோகன், ராஷ்மிதா ரோஜா, அருண் ராஜன், ரிஷி கேசவ், மீனா குமாரி ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications