இப்போ சீரியலில் சிக்குன்னு சின்ன பொண்ணுங்கதான் வேணுமாம்...!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவி தெய்வமகள் சீரியலில் ஆரம்பிச்சுது ஒரு புது டிரண்ட். ஸ்லிம்மா சின்னப்பொண்ணு மாதிரி அல்லது சின்ன பொண்ணுங்கதான் கதைக்கு நாயகின்ற டிரண்ட்.

முன்பெல்லாம் சினிமாவில் மார்க்கெட் போனவங்களுக்கு சின்னத்திரையில் கதாநாயகி வாய்ப்பு. இதை ஆரம்பிச்சு வச்சவர் ராதிகா, ரேவதி, சுஹாசினி இவங்கதான்.

Serial producers and viewers look for young actresses nowadays

இந்த டிரண்டாலதான் கோலங்கள் சீரியலில் நடிச்ச தேவயானி உச்சத்துக்கு போனாங்க. சீரியலும் நல்ல ரேட்டிங் பிடிச்சுது. ராதிகா பத்தி சொல்லவே வேணாம்.. ராதிகா சீரியல்கள் சூப்பர் ஹிட் ஆயிரும்.

இப்படி வந்தவங்கதான் சுகன்யா, சங்கவி,குஷ்பூ உள்ளிட்ட பலபேர். இங்க மார்க்கெட் போனா அங்க வந்துதானே ஆகணும்.. டிவி ஆர்டிஸ்ட்னா உங்களுக்கு அவ்வளவு கிண்டலான்னு கூட சத்யராஜ் படத்துல ஒரு காமெடி வரும்.

Serial producers and viewers look for young actresses nowadays

ஆனா, இப்போ நிலைமை தலை கீழா மாறிப் போச்சுங்க. சினிமாவில் ரசிகர்கள் திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா,காஜல் அகர்வால்ன்னு வயசான பொண்ணுங்களையே ஹீரோயினா பார்த்து ரசிக்கறாங்க.

ஆனா, டிவியில் இப்படிப்பட்ட ரசிகர்களை கட்டிப்போட்டு உட்கார வைக்க முடியலை. அதனாலதான் புதுசா, ஃபிரஷா சின்ன பொண்ணுங்களை களம் இருக்கணும்னு டிரண்ட் உருவாக்கி இருக்காங்க.

Serial producers and viewers look for young actresses nowadays

இதை ஆரம்பிச்சு வச்சது விகடன் டெலிவிஸ்டாஸ் தெய்வமகள் சீரியல் இயக்குனர் குமரன்தான். வாணி போஜன், எம் ஏ ஆங்கில இலக்கியம் படிச்சுட்டு, நீலகிரியில் இருந்து, ஏர்ஹோஸ்டர்ஸ் வேலைக்கு செலக்ட் ஆகி வந்தவர்.

Serial producers and viewers look for young actresses nowadays

அஞ்சு வருஷம் வேலை பார்த்துட்டு, பின்னர் விளம்பர படங்களில் நடிச்சவர். இவரைத்தான் குமரன் தெய்வமகள் சீரியலுக்கு அழைச்சுக்கிட்டு வந்தார். அவ்ளோ சின்ன வயசு பொண்ணு இல்லை என்றாலும், வாணி போஜன் தோற்றம் அப்படித்தான் இருந்துச்சு.

Serial producers and viewers look for young actresses nowadays

அதன் பிறகு இப்போ பாருங்க சன் டிவி சீரியல் எல்லாத்துலயும் சின்ன பொண்ணுங்க புதுமுகங்கள்தான் அதிகம் இருக்காங்க. இதில் புடவை கடை, நகைக்கடை விளம்பரத்துல நடிச்ச பெண்கள் அதிகம்னும் சொல்றாங்க.

Serial producers and viewers look for young actresses nowadays

இப்போ வாணி போஜனையே எடுத்துக்கோங்க.. தெய்வமகள் சீரியல் முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு...ஆனா, அடுத்த சீரியல் அவருக்கு இன்னும் புக் ஆகலை. ஜனங்களை வீட்டுல கட்டிப் போட்டு சீரியல் பார்க்க வைக்க இந்த யுக்தி தேவைப்படுது.

Serial producers and viewers look for young actresses nowadays

விஜய் டிவி, ஜீ தமிழ் சேனல் கூட சன் டிவியின் இந்த பாணியைத்தான் கடைபிடிச்சு வர்றாங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+