சீரியல் சிஸ்டர் கொஞ்சம் சீரியஸ் சிஸ்டரா இருக்காங்களே...!
சென்னை: சன் டிவியில் நேற்று ஞாயிறு முதல் சூப்பர் சிஸ்டர் என்று ஒரு புதிய நிகழ்ச்சி துவங்கி இருக்காங்க. நிகழ்ச்சி கலகலப்பாவும் சீரியஸாவும் சுவையாத்தான் இருக்கு.
சீரியலில் நடிக்கும் நடிகைகள் தங்கள் சிஸ்டர் அல்லது பிரதருடன் நிகழ்ச்சியில் கலந்துக்கணும். நாயகியில் நடிக்கும் பாப்ரி கோஷ், தன் தங்கையுடன் பெங்காலி ஸ்டைலில் புடவை உடுத்தி வந்திருந்தார்.

தெய்வமகள் சீரியலில் காயத்ரியாக நடிச்ச ரேணுகா அக்காவுடன் வந்திருந்தார். அழகு சீரியலில் பூர்ணாவாக நடிக்கும் சங்கீதா மதுரை பொண்ணாம். இவர் தம்பியோடு வந்திருந்தார்.
சந்திரலேகா சீரியலில் சந்திராவாக நடிக்கும் ஸ்வேதா, தம்பியோட வந்திருந்தார். சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் வம்சம் சீரியலில் விளையாட்டு வீராங்கனையாக நடிச்ச நிஹாரிகா, தங்கையோட வந்திருந்தார்.
பாப்ரிகோஷ் தான் ரெண்டு வயசுல இருந்தப்பவே தன் தங்கைக்கு ரெண்டாவது அம்மாவா இருந்து பார்த்துக்கிட்டதா சொன்னார். இது என் அம்மாவே என்கிட்டே சொன்னதுன்னு சொன்னார். ஸ்வேதாவும் தம்பியை தான் வளர்த்ததாக சொன்னார்.

அழகு குடும்ப பூர்ணா சங்கீதா இருக்காங்களே.. அவங்க தம்பி கூட சண்டை போட்டுக்கிட்டு, 4 வருஷம் பேசாம இருந்தாங்களாம். தம்பி கல்யாணத்துக்கு போகலையாம். அப்புறம் மனசு மாறி தம்பி பொண்டாட்டி வளைக்காப்புக்கு போனாராம்.
அப்பப்போ சண்டை போட்டுக்குவாங்க.. உடனே பேசிக்குவாங்க.. இல்லை சில நாளில் பேசிக்குவாங்க. அது போலத்தான்னு இருந்தேன். ஆனா, வீட்டுல யார் கூடவும்கூட பேசாம இப்படி இருப்பான்னு நினைக்கலைன்னு அவங்க அம்மா சொன்னாங்க. சன் டிவி சங்கீதாவின் தம்பி பொண்டாட்டிக்கு வளைகாப்பு நடத்தி வச்சுது.

நிஹாரிகா இருக்காங்களே.. அவங்க குடும்பத்தோட தூண் மாதிரி பணம் சம்பாதிச்சு குடும்பத்தை காப்பாத்தினவங்களாம். காதல் செய்தப்போ கூட, அம்மாவோட பர்மிஷன் வாங்கித்தான் காதலிச்சங்களாம். திடீர்னு அம்மா காதல் வேணாம்னு சொல்ல, வளர்த்த தம்பியும் நிஹாரிகாவை சகட்டு மேனிக்கு பேசிட்டானாம்.
அம்மா வீட்டை விட்டு வெளியில போன்னு திட்ட, காதல் கல்யாணம் செய்துகிட்டாராம் நிஹாரிகா. குடும்பத்துக்கு பில்லர் மாதிரி இருந்த அக்காவை வெளியில போன்னு சொல்லிட்டீங்க. இனிமே நானும் உங்க வீட்டுல இருக்கமாட்டேன்னு சொல்லிட்டு நிஹாரிகா தங்கையும் வீட்டை விட்டு வெளியில வந்து பாட்டி வீட்டுல வந்து தங்கி அக்கா படிக்க வைக்க +2 படிக்குதாம்.
அம்மாவுக்கு என்ன சொல்ல விரும்புறீங்கன்னு கேட்டப்போ, அம்மா நான் அழறேன்.. சோகத்துல இல்லை. ரொம்ப நல்லா இருக்கேன். என்னை அவர் நல்லா பார்த்துக்கறார். தங்கச்சி என்னோட முதல் குழந்தை அவளை நான் நல்ல பார்த்துக்குவேன். நீங்க சாபம் விட்ட மாதிரி எதுவும் நடக்கலை.. நான் ரொம்ப நல்லா இருக்கேன்னு அழுதுகிட்டே பேசினார்..
வீட்டுக்கு வீடு வாசற்படி.. யார் வீட்டுலதான் பிரச்சனை இல்லை.. அப்படித்தான் வாழ பழகணும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications