4 ஆண்டுக்கு முன்பு! இதே நாளில் உங்களை அப்பா என அழைத்த குழந்தை..ஆனால் இன்று! சேதுராமன் மனைவி உருக்கம்
சென்னை: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே தந்தையர் தினத்தில் குழந்தை முதல் முறையாக உங்களை அப்பா என்று அழைத்தது என நடிகர் சேதுராமனின் மனைவி உமையாள் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பிரபல மருத்துவரும் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவருமானவர் டாக்டர் சேதுராமன். இவர் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
சேதுராமனுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உமையாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் தேதி சேதுராமன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவர் இறந்த போது உமா இரண்டாவது முறையாக 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இளம் வயதிலேயே சேதுராமன் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஒவ்வொரு முறையும் திருமண நாள், சேதுராமனின் பிறந்தநாள், மறைந்த நாள் போன்ற நாட்களில் மனைவி உமையாள் உருக்கமான பதிவை போடுவார். அந்த வகையில் இந்த ஆண்டு மூன்றாவது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
அப்போது உமையாள் தனது பதிவில் கூறியிருப்பதாவது: வாழ்க்கை நியாயமற்றது, கடினமானது, எனக்கு ஏன் இவ்வளவு இளம் வயதில் ஒரே இரவில் வாழ்க்கை இருளாக மாற வேண்டும்? நமக்கு இப்படியான ஒரு சம்பவம் நடப்பதற்கு நாம் யாருக்கு என்ன மோசம் செய்தோம். எல்லாம் முடிந்துவிட்டது என்று என் கண்ணீர் தீரும் வரை அழுதேன். இனி என்னை சுற்றி இருக்கும் நபர்களை பற்றி நான் கவலைப்பட போவதில்லை. உங்கள் இறப்புக்கான நான் நான் தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருந்தேன். அப்பா எங்கே என்று என் குழந்தைக்கு கேட்டால் நான் என்ன சொல்லுவேன். தந்தை அவனுக்கு கொடுத்த அன்பை என்னால் கொடுக்க முடியுமா ? நீங்கள் என்னை பிரிந்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
karma is a boomarang, நாம் என்ன கொடுக்கிறோமோ அதையே பெறுவோம். கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை எனக்கும் சேதுவிற்கும் ஒரு சின்ன மனஸ்தாபமோ சண்டையோ ஏற்பட்டதில்லை. மிகவும் சாதாரண நாளாக தான் இருந்தது. நமக்குள் இருக்கும் சிறு சிறு வேறுபாடுகளை மறக்க வேண்டும். என்னை சுற்றி இருப்பவர்களையும் என்னுடைய குழந்தைகளையும் சந்தோஷமாக வைப்பேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் சேது' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் இன்றைய தினம் தந்தையர் தினத்தையொட்டி உமா ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் இன்று தந்தையர் தினம். கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் குழந்தை முதல் முறையாக அப்பா என்று அழைத்தது. நாங்கள் உங்களுடன் அழகான நினைவுகளை உருவாக்கினோம்; அதை நாங்கள் எப்போதும் போற்றுவோம். லவ் யூ டாடி.. சஹானா மற்றும் வேதாந்த் என்று பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications