Chithi 2: ராதிகா மேம் 2 தடவை கால் பண்ணினாங்க... மாட்டேன்னு சொல்ல முடியலை!
சென்னை: சித்தி 2 சீரியலில் செவ்வந்தியாக நடிக்கும் நேஹா முற்றிலும் புதிய கெட்டப் போட்டு நடிச்சு வருகிறார். கல்லூரி முதலாண்டு படிக்கும் நேஹாவுக்கு முற்றிலும் பழக்கம் இல்லாத உடை பாவாடை தாவணி. சுடிதார் போட்டுக்கலாமான்னு மன்றாடி பார்த்தும் சீரியல் குழுவினரிடம் இவர் பப்பு வேகலை.
Recommended Video
ஸோ..கிராமத்து பைங்கிளி போல செவ்வந்தியை நாம சித்தி 2 சீரியலில் பார்த்துட்டு வர்றோம். ஸ்கூல் பெண்ணா வாணி ராணியில் வாயாடி தேனுவாக நடித்த நேஹா செவ்வந்தியாக எப்படி மாறினார்?
ராதிகா மேம் இந்த கேரக்டர் நீ பண்ணினா நல்லா இருக்கும்னு கூப்பிட்டாங்க. முதலில் மறுத்துட்டேன். ரெண்டாவது முறையும் கால் செய்தாங்க எப்படி அவாய்ட் பண்ண முடியும்..அதனால் இப்போ செவ்வந்தி என்கிறார்.

பள்ளிச் சீருடை
வாணி ராணியில் பள்ளி சிறுமியாக நடித்து இருந்த நேஹா இப்போது பள்ளியைக் கடந்து கல்லூரிக்கும் சென்று விட்டார். ஆனாலும் இப்போதும் இவரைத் தேடி பள்ளி மாணவி கதைகள் வருகிறது என்றால் நம்பத்தான் வேண்டும். விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நேஹா மீண்டும் பள்ளிச் சீருடை அணிந்து பள்ளி மாணவியாக நடித்து வருகிறார். விரைவில் அந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது என்றும் கூறுகிறார் நேஹா.

செவ்வந்தி கேரக்டர்
செவ்வந்தி கதாபாத்திரம் ஒரு அப்பாவியான பொண்ணு.. அமைதியான பொண்ணு என்று சொன்னார்கள். வித்தியாசமான கெட்டப் என்று என்னை பார்க்க எனக்கே புது விதமா தெரிஞ்சுது. ஆனால், இதுவும் எனக்கு பிடிச்ச மாதிரிதான் இருக்கு. எனக்கான இன்னொரு டிராவலிங்க்குக்கு மேம் அடித்தளம் போட்டு குடுத்து இருக்காங்க. செவ்வந்தயா நடிப்பதில் எனக்கு சந்தோஷம்தான்.

பிரேக் விடலாம்
நடிப்புக்கு கொஞ்சம் பிரேக் விட்டு படிச்சுட்டு வரலாம்னு நினைச்சேன். சித்தி 2 சீரியலுக்குப் பிறகு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு இருக்கேன். மறுபடியும் ஸ்கூல் யூனிஃபார்ம்.. ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. இனி நாம நினைச்சாலும் போட முடியாதுன்னு நினைக்கற ஸ்கூல் யூனிஃபார்ம் மறுபடியும் போடணும்னா சந்தோஷமாத்தானே இருக்கும். அதனால், மறுபடியும் பிரேக் இல்லாம நடிக்க துவங்கிட்டேன்.

கூடாது பிரேக்
எப்போதும் நாம் செய்யும் வேலைக்கு பிரேக் விடக் கூடாதுன்னு இப்போ நினைக்கிறேன். சித்தி 2 சீரியலில் ஒதுங்கி இருந்திருந்தால் மீண்டும் நடிக்கும் எண்ணம் இப்போதைக்கு வந்து இருக்காது. அடுத்தடுத்து வாய்ப்புக்களை நான் மிஸ் பண்ணி இருப்பேன். மீண்டும் படிப்பு ஒரு பக்கம், நடிப்பு ஒரு பக்கம்னு டிராவலிங் ஆரம்பமாயிருச்சு.

பாவாடை தாவணி
பாவாடை தாவணி உனக்கு ரொம்ப நல்லாருக்குன்னு ஃப்ரண்ட்ஸ் சொல்றாங்க. செவ்வந்தியா இன்னும் ரசிகர்களை கவரலைன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். கமெண்ட்ஸ்ல செவ்வந்தியா நல்லா நடிக்கிறீங்க, அழகா இருக்கீங்க நேகான்னு நிறைய பேர் கமெண்ட் பண்றாங்க. எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கு என்று சொல்கிறார் நேஹா.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications