ஷபானா, ரேஷ்மா திருமணத்தில் கலந்து கொள்ளாத நட்சத்திரா... ரசிகர்களுக்கு ஏமாற்றம்
சென்னை: பெஸ்ட் ஃப்ரெண்ட் திருமணத்தில் நட்சத்திராவை பார்க்காததால் அவருடைய ரசிகர்கள் குழப்பமடைந்து இருக்கின்றனர்.
இணைபிரியாத நான்குபேரும் தற்போது ஒன்றாக இல்லையே என்று ரசிகர்கள் அவருடைய சந்தேகங்களை கேட்டு வருகின்றனர்.
அடுத்த திருமணம் நட்சத்திராவிற்க்கு தானா??என்று ரசிகர்கள் ஆர்வத்தை காத்திருக்கின்றனர்.

நான்கு கதாநாயகிகளின் நட்பு
ஜீ தமிழில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரா, சைத்ரா ரெட்டி, ஷபானா, ரேஷ்மா நான்கு பேரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளத்தை அலற விட்டு வருகின்றனர். நட்புக்கு இலக்கணம் இவர்கள்தான் என்று பலர் இவர்கள் மீது பொறாமைப்பட்டும் கொண்டிருக்கின்றனர். பெண்கள் பொதுவாக ஒரு வயதுக்கு மேலே நட்பாக சந்தோஷமாக இருக்க முடியாது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இவர்களின் சந்தோஷம் ஆறுதலாக இருந்து கொண்டிருந்தது.

நட்சத்திராவை காணவில்லையே
நண்பர்கள் தினத்தில் கூட இவர்களுடைய போட்டோக்கள் தான் பலருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும். அந்த அளவிற்கு எப்போதும் ஒன்றாக சுற்றி கொண்டிருக்கும் இவர்களில் தற்போது ஒருவரை காணவில்லை என்பதை ரசிகர்கள் அதிகமாக தேடி வருகின்றனர். காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருக்கின்றனர்.

ஜாலியான என்ஜாய்மென்ட்
ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த நட்சத்திரா மற்றும் அவருக்கு வில்லியாக சீரியலில் மிரட்டிக் கொண்டிருந்த சைத்ரா ரெட்டி, பூவே பூச்சூடவா சீரியின் கதாநாயகி ரேஷ்மா மற்றும் செம்பருத்தி சீரியலின் கதாநாயகி ஷபானா. இவர்கள் நான்கு பேரும் விடுமுறை நேரங்களில் அடிக்கடி சுற்றுலா சென்று ஜாலியாக வாழ்க்கையை என்ஜாய் பண்ணி கொண்டிருந்தனர். அப்படி வெளியே செல்லும் இடங்களில் எல்லாம் ஃபோட்டோ சூட்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது தான் இவர்களுடைய வழக்கமாக இருந்தது.

அவரை மட்டும் காணவில்லையே
தற்போது முதல் முறையாக சைத்ரா ரெட்டி திருமணம் முடிந்து இருக்கிறது. அவர் காதலித்து திருமணம் செய்த அடுத்து ஒரு வருடம் கழித்து அதே அவருடைய திருமண நாளில் ஷபானா, ஆரியனை திருமணம் செய்திருக்கிறார். அதற்கு அடுத்த மூன்று நாட்களில் ரேஷ்மா, மதனை திருமணம் செய்திருக்கிறார். அடுத்தடுத்து இவர்களின் திருமணத்தில் நட்சத்திராவை மட்டும் காணவில்லை என ரசிகர்கள் தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் சைத்ரா ரெட்டியின் திருமணத்தில் செய்த அளப்பறைகள் வைரலாகி வந்தது. ஆனால் ஷபானா மற்றும் ரேஷ்மா திருமணத்தில் நட்சத்திரா கலந்து கொள்ளவில்லை இதனால் அவருடைய ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications