செம்பருத்தி பார்வதிக்குப் பிறந்த நாள்.. ராத்திரியில்.. க்யூட் கொண்டாட்டம்.. பாருங்க பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது, கூடவே, டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தில் இருக்கும் செம்பருத்தி சீரியலின் நாயகி, ஷபானா பிறந்தநாள் கலக்கலாக முடிந்திருக்கிறது.

இதுதொடர்பான போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. செம்பருத்தி சீரியலில் மட்டுமல்ல பிறந்தநாள் போட்டோக்களிலும் க்யூட்டாக செமையா போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்த்திருக்கிறார் ஷபானா.

நாளுக்கு நாள் செம்பருத்தியின் முன்னேற்றத்தை பார்க்கும் போது இனி தேசிய மலராக செம்பருத்தியும் சேர்த்து விடுவார்கள் போல. அந்த அளவுக்கு இல்லத்தரசிகள் மனதைக் கொள்ளை கொண்டுள்ளது இந்த செம்பருத்தி சீரியல்.

 ஆதியின் பார்வதி

ஆதியின் பார்வதி

செம்பருத்தி நாயகி ஷபானாதான் இளைஞர்களின் புதுக் கதநாயகி. இவருக்கு அப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு. இளைஞர்கள் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்களாக கூடி வருகின்றார்கள். பொதுவாக பெண்கள் தான் சீரியலுக்கு அடிமையாக இருப்பார்கள். ஆனால் இந்த செம்பருத்தி சீரியலுக்கு இளைஞர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லோரும் அடிமையாக இருக்கிறார்கள்.

 அழகும் நடிப்பும்

அழகும் நடிப்பும்

இந்த சீரியலில் பார்வதியாக நடிக்கும் ஷபானாவிற்கு ரசிகர்கள் நாளுக்குநாள் பெருகி வருகிறார்கள். அவரது ஹோம்லியான முக அழகும் செல்லமான பேச்சும் ரசிகர்களை ரொம்பவே கவர்ந்திருக்கிறது. இந்த சீரியலில் இவர் கூட நடிக்கும் கார்த்தி பெண் ரசிகர்களின் கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தமும் மிக கச்சிதமாக இருப்பதால் இந்த சீரியல் எல்லா சீரியல்களையும் அடித்து தள்ளி விட்டு டி ஆர் டி யில் முதலிடத்தில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

 பார்வதியின் ரொமான்ஸ்

பார்வதியின் ரொமான்ஸ்

நாளுக்கு நாள் இதனுடைய வேகம் அதிகரித்து இருக்கும் போது தற்போது இந்த சீரியலில் ஷபானா கார்த்திக் ஆதி பார்வதி யாக ரொமான்ஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி இந்த சீரியல் இப்போது போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஷபானாவின் பிறந்த நாள் வெகு விமர்சனமாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு ரசிகர் 41 நாளிலிருந்து ஒவ்வொரு நாளாக அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தார்.

 செல்லப் பூனைக் குட்டி

செல்லப் பூனைக் குட்டி

இந்த மாதிரி பல ரசிகர்கள் இவரது பிறந்தநாளை எதிர்பார்த்து இருந்த நேரத்தில் இவர் அழகான பூனைக்குட்டியோடு செம க்யூட்டா பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இந்த பிறந்தநாள் போட்டோஸ்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவரின் பிறந்தநாளின் போது இவரது பிரண்ட்ஸ்களான மூன்றுபேரும் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டி அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

 ஜாலி கொண்டாட்டம்

ஜாலி கொண்டாட்டம்

ஒவ்வொருவரும் மாற்றி மாற்றி கலாய்த்துகொண்டு ஜாலியாக இருக்கிறார்கள். ரேஷ்மா, சைத்ரா ரெட்டி, நட்சத்திரா மூவரும் இவரின் கேர்ள்ஸ் பெஸ்டி. இவர்கள் நால்வரும் சேர்ந்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்கள். அது வைரலாக பரவி வந்தது. அதன்பிறகு சீரியல் ஆரம்பித்துவிட்டதால் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் இவர்கள் அப்பப்போ போட்டோக்களாக போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 தோழிகள் கலக்கல்

தோழிகள் கலக்கல்

அதன் பிறகு ஒவ்வொருவரின் பிறந்தநாளிலும் மாற்றி மாற்றி கலாய்த்துக் கொண்டு இன்னமும் குழந்தைகளாக செம ஜாலியாக இருக்கிறார்கள். இவர்கள் அப்பப்ப செய்யும் சேட்டைகளையும் வீடியோக்களாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அது வைரலாக பரவி வருகிறது சைத்ரா ரெட்டி பிறந்தநாளுக்கு இவர்கள் எல்லாரும் சேர்ந்து செமையாக பார்ட்டி வைத்துக் கொண்டாடினார்கள்.

 வாழ்த்துகள் குவிந்தன

வாழ்த்துகள் குவிந்தன

தற்போது ஷபானாவின் பிறந்த நாளுக்கும் அவர் தேவதை போல அழகாக உடை அணிந்து பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களைக் குவித்திருந்தனர். அதனை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் அவர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து இருக்கிறார். இவர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பதால் விஜய்யின் ரசிகர்களும் இவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+