Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிம்பு கெத்து பிடிக்கும்.. விஜய்க்கு நான் தங்கச்சிங்க.. செம போடு போடும் பார்வதி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமாவே பார்க்காத மக்களும் கூட செம்பருத்தி சீரியலில் ஷபனாவின் அழகைப் பார்த்து "பார்வதி"க்காகவே சீரியல் முன்பு தவம் கிடக்கிறார்கள். இது போதாது என்று இவர் இணையதளங்களிலும் வைரலாக பரவிக் கொண்டு வருகிறார்.

இவர் சீரியல்களில் படு பவ்வியமாக அமைதியின் சொரூபமாக நடித்துக் கொண்டிருந்தாலும் செம வாலு மற்றும் க்யூட் பொண்ணு. இவர் கூட நடிக்கும் நடிகர்களை ஒரு பாடு படுத்துவதில் செம கில்லாடி.

சூட்டிங் ஸ்பாட்டில் இவர்தான் எல்லாரையும் அழவைத்து அராஜகம் பண்ணிக்கொண்டு இருக்கிறாராம். இவரை கண்ட்ரோல் பண்ண முடியாது என்று இவர் கூட நடிக்கும் நடிகர்கள் தான் அமைதியாக இருப்பார்களாம்.

செம வாலு

செம வாலு

ஷபானா அந்த அளவுக்கு வாலு பொண்ணாம். புடிச்ச விஷயத்தை பண்றதுக்கு எவ்வளவு ரிஸ்க் வேணாலும் எடுக்கலாம் என்று தனக்குப் பிடித்த தமிழ் மொழியில் நடிக்க வேண்டும் என்பதற்காக மும்பையிலிருந்து சென்னை வந்து நடித்து விட்டு போய் கொண்டிருக்கிறாராம். இவர் சீரியல்களில் கலக்கிக் கொண்டு இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக ரொம்ப ஆசையோடு காத்திருக்கிறாராம்.

அஜீத் விஜய்க்கு தங்கச்சி

அஜீத் விஜய்க்கு தங்கச்சி

அஜித் மற்றும் விஜயின் தங்கையாக தான் நடிக்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறாராம். அஜித்தும் இவரும் ஒரே கலர் என்பதால் இருவருக்கும் சீக்கிரத்தில் மேட்ச் ஆகிவிடும் இதனால் நான் அஜித்தின் சகோதரியாக நடிப்பதில் ரொம்பவும் பெருமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமில்ல விஜய்யை இவர் அண்ணாக பாவித்து வருகிறாராம்.

நல்லா கலாய்ப்பார்

நல்லா கலாய்ப்பார்

எப்பவும் சூட்டிங் ஸ்பாட்டில் விஜயின் தங்கச்சி நான்தான் என்று அனைவரையும் கலாய்ச்சு இருக்கிறாராம். சில நேரம் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க போவதாக கூறி வெறுப்பேற்றி இருக்கிறாராம் சிலரை. இவர் கூட செம்பருத்தி சீரியலில் வில்லியாக வனஜா கேரக்டரில் நடித்து கொண்டிருப்பவரை இந்த மாதிரி அடிக்கடி குட்டி குட்டி போய்ச் சொல்லி ஏமாற்றவும் செய்திருக்கிறாராம்.

விஜய்யோட டயலாக் பிடிக்கும்

விஜய்யோட டயலாக் பிடிக்கும்

விஜய்யின் டயலாக் இவருக்கு ரொம்ப பிடிச்சது. 'லைஃப்ல எல்லாருக்கும் நம்மள புடிச்சிருந்தா வாழ்க்கை நல்லா இருக்காது. போர் ஆகிரும். அதுவும் சிலருக்கு நம்மளை பிடிக்கலனா தான் ஒரு கெத்தா வாழனும் என்று தோணும்' அப்படின்னு சொல்ற வார்த்தைதான் இவரின் மனதில் அடிக்கடி வந்து வந்து போகுமாம். இவருக்கு நண்பர்கள் பட்டாளம் அதிகமாக இருக்கிறதாம். அதுங்களும் செம வாலுங்கதான்.

வாலுகளின் கோஷ்டி

வாலுகளின் கோஷ்டி

பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்கும் ரேஷ்மா, யாரடி நீ மோகினி சீரியல் நடிக்கும் சைத்ரா மற்றும் நட்சத்திரா இவர்கள் அனைவரும் நெருங்கிய தோழிகள் இணையதளத்தில் இவர்கள் போட்டோஸ்கள் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. இந்த லாக்டோன் டைம் இல்ல போட்டோ ஷூட் நடத்தி அதை இணையதளத்தில் அப்லோட் பண்ணி இருக்கிறார்கள். இது இவர்களது ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கிறது.

நாங்க ரொம்ப பிசி

நாங்க ரொம்ப பிசி

இப்போ சூட்டிங் ஆரம்பித்து இவர்கள் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோக்களாக எடுத்து இணையதளத்தை பத்த வைத்து வருகிறார்கள்.

ஷாபானாவுக்கு சிம்புவும் ரொம்பவும் பிடிக்குமாம். அவருடைய கெத்து இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். அவரு மாதிரி கெத்தொட இருக்கிற ஆண்களை இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். இவரு குட்டி வயசுல இருக்கும்போது இவங்க அம்மா கிட்ட பொய் சொல்லி சொல்லி அடி எல்லாம் வாங்கி இருக்காங்களாம்.

சிம்பு மாதிரி கெத்து

சிம்பு மாதிரி கெத்து

இருந்தாலும் அதையும் கெத்தோடு ஒத்துக்கிட்டார். இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்தாலும் இந்த சீரியலில் இவர் பிஸியாக இருப்பதால் அடுத்ததாக எந்த படத்திற்கும் ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறார். சூட்டிங்கில் பிஸியாக இருந்து கொண்டு மாதத்தில் நாலு நாள்தான் பிரீ கிடைக்கும்போது நல்ல தூங்குறதுக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது என்று பீல் பண்ணி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+