நடிகை ஷகிலாவின் மகள் மிலா கர்ப்பமா? தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகை ஷகிலாவின் தத்து மகள் மிலா கர்ப்பமாக இருப்பதாக போட்டோ வைரலாகி வருகிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
மலையாள நடிகை ஷகிலா இவர் சில படங்களில் கேரக்டர் ரோல் நடித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதை அனைவரும் அறிந்ததுதான். சில காலம் திரைத் துறையிலிருந்து விலகியே இருந்த ஷகிலா குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல பெயரே கிடைத்தது. இவரது சமையலை வெங்கடேஷ் பட்டும், தாமுவும் பாராட்டினார்கள். அந்த அளவுக்கு இவரது சமையல் இருந்தது.

திருநங்கை மிலா
இவர் திருநங்கை மிலா என்பவரை தத்தெடுத்து தனது மகளாகவே வளர்த்து வருகிறார். மிலா பேஷன் டிசைனிங் படித்துள்ளார். அவர் திருநங்கையாக மாறுவதற்கு முன்னர் தமிழில் ஒரு சீரியலில் நடித்திருந்தார். இருவரும் அவ்வப்போது செய்யும் சேட்டைகளை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவார்கள்.

மிலா கர்ப்பம்?
இந்த நிலையில் மிலா கர்ப்பமாக இருப்பது போல் ஒரு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதில் அவர் மிகவும் உருக்கமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார். "என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது. இந்த போட்டோ ஷூட் மூலம் எனது கனவு நனவாகிவிட்டது" என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

உருக்கம்
இவர் உருக்கமாக தெரிவித்ததற்கு நிறைய பேர் ஆறுதல் தெரிவித்துள்ளனர். தாய்மை என்பது குழந்தை பெற்றால் மட்டும் இல்லை. நீங்கள் அளவுக்கு அதிகமான அன்பு, பாசம், அக்கறை ஆகியவற்றை காட்டுகிறீர்கள். இதனால் நீங்கள் இப்போதும் தாய், சகோதரி, குழந்தையும் கூட என ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆதரவு
"உரிமையோடும் அன்போடும் அம்மா என்றழைக்கும் அனைவரும் உங்கள் பிள்ளைகள் தான் .... பெற்றால் தான் பிள்ளையா" என நெட்டிசன் ஒருவர் கேட்டுள்ளார். "நீங்கள் தாயாகலாம். ஒரு பிள்ளையை தத்தெடுத்தால்" என்கிறார் இன்னொரு வலைஞர். ஒரு குழந்தையை தத்தெடுத்து உங்கள் கனவை முழுமையாக்குங்கள் என மிலாவுக்கு ஆதரவு கரங்கள் குவிகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications