என்னது 90'ஸ் ஹீரோவும் ‘பூமர் அங்கிளும்’ ஒரே ஆளா? - பாய்ந்த நெட்டிசன்கள்.. சக்திமானுக்கு நேர்ந்த கதி!
மும்பை : 90'ஸ் கிட்ஸின் சூப்பர் ஹீரோவான 'சக்திமான்' கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற முகேஷ் கன்னாவின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரது கருத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
முகேஷ் கன்னா ஒரு யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், உடலுறவை விரும்பிக் கேட்கும் பெண்கள் பெண்கள் அல்ல, பாலியல் தொழிலாளர்கள் என்று கூறியிருந்தார்.
இந்த குறிப்பிட்ட கருத்தால் இணையவாசிகள் கடும் கோபமடைந்துள்ளனர். நடிகர் முகேஷ் கன்னாவை "செக்ஸிஸ்ட்" என்றும் 'பூமர் அங்கிள்' என்றும் விமர்சித்துள்ளனர்.

சக்திமான்
90'ஸ் கிட்ஸின் ஃபேவரிட் சூப்பர் ஹீரோ சக்திமான். 90களின் இறுதி மற்றும் 2000த்தின் ஆரம்ப கால கட்டத்தில் பிரபலமான தொலைக்காட்சித் தொடராக தூர்தர்ஷனில் சக்கைப்போடு போட்டது சக்திமான். இந்தத் தொடர் அன்றைய சிறுவர்களின் அபிமான நிகழ்ச்சியாக இருந்தது. அதற்காகவே காத்திருந்து தொலைக்காட்சி பார்த்த தலைமுறையினர் இன்றைக்கு இளைஞர்களாக இருக்கிறார்கள். இந்தியாவின் சூப்பர் ஹீரோவான சக்திமான், ஒட்டுமொத்த சிறார்களின் மனதையும் குத்தகைக்கு எடுத்திருந்தார்.

முகேஷ் கன்னா
சக்திமான் தொலைக்காட்சி தொடரில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். 90'ஸ் கிட்ஸின் மறக்க முடியாத ஹீரோவான சக்திமான் கதாபாத்திரத்தில் நடித்த முகேஷ் கன்னா தான் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். முகேஷ் கன்னா யூ-ட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

சர்ச்சை பேச்சு
முகேஷ் கன்னா தனது யூடியூப் சேனலில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். "பாலியல் உறவுக்கு ஆசைப்பட்டு, ஆண்களை அழைக்கும் பெண்கள் பாலியல் தொழிலாளர்களே. ஏனென்றால், நாகரிக சமுதாயத்தைச் சேர்ந்த எந்தவொரு கண்ணியமான பெண்ணும் இப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்" என்று முகேஷ் கன்னா தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் கண்டனம்
பெண்கள் பற்றிய முகேஷ் கன்னாவின் இந்தக் கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "90'ஸ் கிட்ஸின் ஆஸ்தான ஹீரோவான சக்திமானும் பூமர் அங்கிள் தான்" என்றும், "முகேஷ் கன்னாவின் இந்த லாஜிக்கை கேட்டால் படிப்பறிவே இல்லாதவர்களும் சிரிப்பார்கள்" என்றும் "சக்திமான் இந்த முறை நிற்பது அநீதியின் பக்கம்" என்றும் நெட்டிசன்கள் பலவாறாக விமர்சித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்க வேண்டும்
சிறுவர்கள் மத்தியில் பிரபலமான முகேஷ் கன்னா போன்றவர்கள் பொதுவெளியில் கருத்துக்களைத் தெரிவிக்கும் முன் யோசித்துப் பேச வேண்டும் எனவும், பெண்கள் பற்றி இழிவாகப் பேசிய முகேஷ் கன்னா தனது கருத்துக்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications