Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷாலினி தந்த சர்ப்ரைஸ்.. ஆடிப்போன அஜித்.. எஸ்பிபி அன்று அஜித்குமாரிடம் சொன்னது தெரியுமா: பிரபலம் நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக் ரேஸை குறைத்துக் கொண்டு, கார் ரேஸில் அதிகமான ஆர்வத்தை நடிகர் அஜித் செலுத்துவதற்கு காரணமே, மறைந்த பின்னணி பாடகர் எஸ்பிபிதான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு. அஜித்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.

Aagayam Tamil யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றை தந்துள்ளார். அதில், "அஜித்தை இப்போது பார்ப்பதற்கு சீரியஸாக இருக்கிறார்.. ஆனால் பழைய அஜித் அப்படியில்லை..

Television Shalini Ajith kumar

காதல்கோட்டை, வான்மதி, காதல் மன்னன், அமர்க்களம் பட செட்களில் படுகுஷியாக இருப்பார்.. சுற்றி என்ன நடக்குது, லைட்மேனுக்கு என்ன ஆச்சு? பத்திரிகையாளர்கள் யாராவது காத்திருக்கிறார்களா? இதெல்லாம் ஒரு நடிகருக்கு தேவையில்லை என்றாலும், அதை உற்சாகமாக செய்வார் அஜித்..

அசல் படம்: அஜித் மாதிரியான முரடன் யாருமே கிடையாது. ஆனால், இன்று அவர் நிறைய மாறியிருக்கிறார்.. சில முடிவுகளை எல்லாம் பயங்கரமாக எடுப்பார். ஆனால், அசல் படத்துக்கு பிறகு, மீடியாவை சந்திப்பதில்லை.. என்ன வேணும்னாலும் எழுதிக் கொள்ளுங்கள், புரமோஷன், ஆடியோ லான்ச் எதுக்குமே வர மாட்டேன், மைக் முன்னாடி நிற்க மாட்டேன் என்று சொன்னதெல்லாம் உச்சக்கட்ட திமிரா? அல்லது உச்சக்கட்ட தன்னம்பிக்கை என்றே சொல்லலாம்.

இப்படி இதுதான் தன்னுடைய பாலிசி என்று சொன்னவர், இன்று ஒரு வெற்றி என்றதுமே, தேசியக்கொடியை தூக்கிட்டு ஒரு குழந்தை மாதிரி துள்ளி குதித்து வந்ததை பார்க்க, அப்படியே பழைய அஜித் மாதிரியே இருந்தது. அதுக்கு காரணம், தனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான விஷயத்தை செய்து முடித்ததுதான்.,

துபாய்: பணக்காரர்கள் மட்டுமே விளையாடி கொண்டிருந்த கார் ரேஸ் பந்தயத்தில், அன்று சாதாரண மிடில் கிளாஸை சேர்ந்த அஜித்தும் அதில் ஈடுபட்டபடியே இருந்தார். 3வது இடத்தை பெற்றதும், தேசிய கொடியை காட்டியதை பார்த்ததுமே, அங்கிருந்த வர்ணனையாளர், "இது துபாயா? இந்தியா? அல்லது துபாயா, தமிழ்நாடா?" என்று கேட்டார்.

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குனர்களும் கொண்டாடினார்கள்.. நடிகர் மாதவன் லைவ் போட ஆரம்பிச்சிட்டாரு. அந்த நேரத்தில் மாதவனை யாரோ போட்டோ எடுக்க, "ஏங்க, நானே அஜித்தின் ரசிகராக வந்திருக்கேன்.. நீங்க அவரை வீடியோ எடுங்க" என்று சொன்னதெல்லாம் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பாக பார்க்கிறேன். 90 சதவீதம் பேருக்கு ஒரு நபரை பிடிக்கிறதென்றால், அது அஜித்தான் என்பது, இப்போதுதான் தெரிகிறது.

அமராவதி: ஆரம்ப கட்டத்திலிருந்தே பைக் மீது பிரியம் உள்ளவர்.. மாடலிங்கிலும் ஆர்வம் இருந்தது.. அஜித்தின் அமராவதி படத்துக்கு எஸ்பிபிதான் காரணம்.. அஜித்திடம் ஒருமுறை எஸ்பிபி, "பைக் ரேஸில் உங்கள் ஆர்வம் புரிகிறது. ஆனால், அதிக விபத்துக்குள்ளாக கூடியது பைக்தான். உங்களை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு இதனால் பாதகம் வரக்கூடும்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

செம எனர்ஜி: இதை அஜித்தும் உணர்ந்திருக்கிறார்.. அதுக்கு பிறகு பைக் ரேஸை குறைத்துக் கொண்டு, கார் ரேஸில் ஆர்வத்தை அதிகப்படுத்தினார். 53 வயதில் இப்படியொரு கிரேஸ் அவருக்கு எப்படி வந்தது? இந்த எனர்ஜி அவருக்குள் இருந்திருக்கிறது.

அஜித், ஷாலினி காதலித்து கொண்டிருந்த சமயம், அஜித்துக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அப்போது நடந்த சம்பவத்தை டைரக்டர் சரண் அடிக்கடி சொல்லி உள்ளார்.

அதாவது, ஒரு ஆர்ட் டைரக்டரிடம் சொல்லி, பைக்கை மினியேச்சராக தயாரித்து, அதை அஜித்தின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு சென்றாராம் ஷாலினி. கதவை திறந்ததும் நவீன பைக் இருப்பதை பார்த்து ஷாலினிதான் இப்படி சர்ப்ரைஸ் கிப்ட் தந்திருக்கிறார் என்று அஜித் சரியாக யூகித்தாராம். இப்போது கார் ரேஸில் வெற்றி பெற்றபோதுகூட, "எனக்கு இந்த பந்தயத்துக்கு அனுமதி தந்த ஷாலுவுக்கு நன்றி என்றார்" என்றெல்லாம் செய்யாறு பாலு சொல்லி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+