இந்தியன் 2 வச்சி முடிவு பண்ணிறாதீங்க.. ஷங்கர் எப்படி இருந்தவர் தெரியுமா.. ஜென்டில்மேன் பிளாஷ்பேக்!
சென்னை: இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த மோசமான விமர்சனங்களாலும், மீம்ஸ், கேலி வீடியோக்களாலும் இயக்குநர் ஷங்கர் ரசிகர்கள் வெறுத்துப் போய் இருக்கலாம். இந்த கேலி கிண்டலால் மட்டுமல்ல, 1993ல் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் தொடங்கி இதுவரை அவரது படங்களை பார்த்து சிலாகித்த ரசிகர்களுக்கு இயல்பாகவே இந்தியன் 2 பிடிக்கவில்லைதான்.
இந்தியன் 2 மட்டுமல்ல, அவரது திரைப்படம் காண்பிக்கும் சமூக நிலைப்பாடு காரணமாகவும், சமீபத்திய காலங்களில் ஒரு பிரிவு ரசிகர்களிடையே ஷங்கரின் படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அதேநேரம், ஷங்கர் தமிழ் சினிமாவை வேறு கட்டத்திற்கு தூக்கி சென்றவர் என்பதை மறுக்க முடியாது.

"பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க.." என்ற பாட்ஷா பட கேள்வி போல ஷங்கரின் பிளாஷ்பேக்கும் மாஸானது. அர்ஜுன் மற்றும் மதுபாலா நடித்த ஜென்டில்மேன் படம், சென்னையில் வெளியானது 5 தியேட்டர்களில். ஆனால் அடுத்தடுத்த நாட்களில் ஐந்து திரையரங்குகளிலும் நிரம்பி வழிந்தது.
செம விளம்பரங்கள்: தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோனின் புதுமையான விளம்பர யுக்திகள் படத்திற்கு கூடுதல் கவனத்தை ஈர்த்தன. புறநகர் ரயில் நிலையங்களில் உள்ள டிவிகளில் டிரெய்லர்களை திரையிடுதல் மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரங்களை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தன. வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவ, மாணவிகள், ரயில் நிலையங்களில் ஒளிபரப்பான வீடியோக்களை ஆவலோடு பார்த்தனர். இணையதளம் இல்லாத அந்த காலகட்டத்தில், வீடியோவை பார்ப்பது என்பதே குதிரை கொம்புதான். பல ஆண்டுகள் கழித்த பழைய படங்கள்தான் தூர்தர்ஷனில் வரும். சாட்டிலைட் டிவிகளில் கூட உடனுக்குடன் புதுப்படங்கள் வராது. ஆனால், ரிலீசாகப்போகும் படத்தின் வீடியோ டிரைலரை அடிக்கடி ரயில் நிலையங்களில் பார்த்தது ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருந்தது.

இசை விருந்து: ஏ.ஆர். ரஹ்மானின் இசை படத்தின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது. "உசிலம்பட்டி" போன்ற பாடல்கள் உடனடியாக ரசிகர்களின் இதயத்தை கவர்ந்தன. சிக்குப் புக்கு ரயிலே பாடலில், பிரபுதேவாவின் கேமியோ தோற்றம், ஒரு முக்கிய நடனக் கலைஞராகவும் பின்னர் ஒரு நாயகனாகவும் அவரது பயணத்திற்கு வித்திட்டது. இசைப் புயலும், நடனப் புயலும் இணைந்து கலக்கிய அந்த பாடலை 90ஸ் கிட்ஸ் மறக்கவே மாட்டார்கள். அதில் பயன்படுத்திய அம்பு விடுவது, கண்ணீர் துளி போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் வாயை பிளக்க வைத்தன. ஜென்டில்மேன் பாடல்கள் வெற்றிக்கு பின்,கே.டி.குஞ்சுமோன் தன்னுடைய படங்களின் ஆடியோ ரைட்ஸை யாருக்கும் கொடுக்காமல் 'ஜென்டில்மேன் ஆடியோஸ்'ங்கிற பெயரில் தானே வெளியிட்டார். அதுவும் ஆடியோ பைரஸி இருக்கக்கூடாது என்பதற்காக, 'காதலன்' படத்தின் ஒவ்வொரு கேசட்டுக்கும் தனி நம்பர் போட்டே ரிலீஸ் செய்தார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிராண்ட் ஷங்கர்: ஷங்கரின் படங்கள் எப்போதும் சமூக பிரச்சினைகளை கையாண்டாலும், "ஜென்டில்மேன்" ஒரு சாதாரண மனிதனும் ஒரு ராபின் ஹூட் போன்ற நபரும் என நாயகனின் இருமைத்தன்மையை அழகாக சித்தரித்தது (கிட்டத்தட்ட ஸ்ப்லிட் பர்சனாலிட்டியை அப்பவே காட்டியிருப்பார்). இந்த சமூக காப்பாளர் கதைக்களம் பின்னர் ஷங்கரின் படங்களின் அடையாளமாகவே மாறியது.

ஒரு தலைமுறையை பாதித்த படம்: "ஜென்டில்மேன்" வெறும் வணிக வெற்றியை விட அதிகமாக இருந்தது. அது 'பிராண்ட் ஷங்கர்' ஐ உருவாக்கியது. இந்த படம் ஊழலுக்கு எதிராக போராடும் ஒற்றை மனித ராணுவம், அதே தீவிர நபர் தனது காதலுக்கும் நேரம் ஒதுக்குவது, இனிமையான பாடல்களை இடம்பெறச் செய்வது என 3 வகை மசாலாக்களை ஒரே படத்தில் தூவுவது போன்ற கருப்பொருட்களை அறிமுகப்படுத்தியது. இந்த ஃபார்முலா பின்னர் பல இளம் இயக்குநர்களை பெரிதும் பாதித்தது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications