"ராபின்ஹுட்" சேனாபதியை தரை லோக்கலுக்கு இறக்கிவிட்ட அனிருத்! தமிழர்களை ஏமாற்றிய ஷங்கரின் இந்தியன் 2

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியன் 2 படத்தை எடுத்து தமிழக மக்களை இயக்குநர் ஷங்கர் முட்டாளாக்கிவிட்டார் என யூடியூபர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சேனாதிபதியின் வீரத்தை துடைப்பத்தால் பெண்கள் துரத்துவதன் மூலம் அந்த கேரக்டரையே காமெடியாக்கிவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: இந்தியன்-1ல நாட்டில் எல்லோருமே லஞ்சம் வாங்குவார்கள். அதனால் வெகுண்டெழுந்து இந்தியன் தாத்தா கோபப்பட்டு தண்டனை கொடுப்பார்.

television indian 2 kamal haasan 2

இந்தியன்-2 ல சித்தார்த் உட்பட நாலு நண்பர்களின் குடும்பமும் தங்கள் குடும்பத்தாரின் தவறுகளை சுட்டிக் காட்டி புகார் கொடுத்ததும் ஒரு பெரிய போலீஸ் படையே அவர்களை கைது செய்கிறது. கோர்ட் தண்டனை தருகிறது. It Means இந்தியன் தாத்தாவோட அவசியமே தேவை இல்லை என்று ஆகிறது.

இந்தியன் தாத்தா சேனாதிபதி தன் தாய்நாட்டை சுதந்திரமாக ஆள வேண்டும் என போராடியவர். அது நேர்மையான அரசாங்கமாக செயல்பட வேண்டும் என விரும்புபவர். ஆனால் அவர் தான் அடி உதை பட்டு சுதந்திர நாடாக்கிய இந்தியாவுக்குள் நுழைய போலி பாஸ்போர்ட் எடுத்து, மேக்கப் போட்டு வேறு பெயரில் வருகிறார். தாத்தா அரசாங்கத்தை ஏமாற்றலாம். அது அரசுக்கு எதிரானதல்ல.

ஆனா ஒரு மீனுக்குள்ள கோலி குண்டை போட்டு வெயிட்டை கூட்டி மீன் விற்கும் பெண் செய்வது பெருங்குற்றமாம். இந்தியன் 1ல் தப்பித்த தாத்தா எங்கோ வெளிநாட்டில் இருப்பதாக முடித்திருப்பார்கள். நமக்கு படம் துவங்கியதுமே தாத்தா எங்கிருந்தார்? எப்படி சென்றார் என்பது முதல் காட்சிகளாக இருந்திருக்க வேண்டும். தைவான் நாட்டுக்கு சேனாபதி எப்படி போயிருக்க முடியும்?. போலி பாஸ்போர்ட் மூலம் தானே.

இந்தியன்-1ல் இந்தியன் தாத்தாவின் உடையை fashion paradeல் எல்லாம் போட்டு அதை பெரிதாக நேசிப்பதாக காட்சி வரும். சேனாபதி என்கிற அந்த கேரக்டர் ஒரு ராபின்ஹூட் போன்ற கேரக்டர். ஆனால் அனிருத் அதை ஏதோ 'தாத்தா வர்ராரு. கதற விட போறாரு. செதற விட போறாரு..' என்று தரை லோக்கலுக்கு இறக்கி விட்டு விடுகிறார்.

படத்திலும் Go back Indian என்கிற Hashtag கண்டதும் மக்கள் அவரை விரட்டுகிறார்கள். கொடுமை என்ன வென்றால் ஒரு பெண் துடைப்பத்தை எடுத்துக் கொண்டு ஓடி வருவார். ஒரு படத்தில் வடிவேலுவை தியாகு தன் அடியாட்களுடன் நான்கு முனை சந்திப்பில் ரௌண்டு கட்டுவார். அப்படி சேனாபதியின் வீரத்தை காமெடியாக்கி விட்டிருக்கிறார்கள்.

இந்தியன் தாத்தா வரும் முன்பே சித்தார்த் அநியாயத்தைக் கண்டு பொங்கி எழுந்து யூடியூபில் வீடியோ போடுபவர். அவர் காதலி அமெரிக்கா அழைத்தும் மாற்றத்திற்காக போகாதவர். அவர் தன் அம்மா இறந்ததால் இந்தியன் தாத்தா தான் காரணம் என துரத்துவாராம். என்ன திரைக்கதையோ? இதில் தாத்தா வேறு உன் அம்மா நேர்மையானவர் இல்லை என்பது போன்று சஸ்பென்ஸ் வைக்கிறார்.

இந்தியன் தாத்தாவே ஒரு பிராஸ்தடிக் மேக்கப் ஆசாமி. அவர் அதற்கு மேல் மாறு வேடம் போட்டுக் கொண்டு உலவுவதாக வருகிறது. கைது செய்யும் போது இருந்த மீசை ஜட்ஜிடம் போகும் போது காணவில்லை. இந்தியன்-1ல் கமல் தானா என மேக்கப் சந்தேகம் எழுப்பும். இதில் கமல் தான் என நன்றாக தெரிகிறது.

உடல்மொழியில் மாற்றமேயில்லை. Eddie murphy பிராஸ்தடிக் மேக்கப்பை எப்படி உபயோகித்து ஹாலிவுட் படங்கள் எடுத்திருக்கிறார் என்பதை படக்குழு பார்த்திருக்கலாம். சுதந்திர போராட்ட சுகன்யா Flashback கருப்பு வெள்ளையில் இந்தியன்1ல் சொல்லியாகிவிட்டது. இனி அதை கலரில் திரும்பவும் சொல்ல அவசியம் என்ன எனத் தோன்றுகிறது.

அனிருத்தின் மூதாதையர்களில் ஒரு தாத்தா வெள்ளை அரசில் திவானாக இருந்தவர். சேனாபதியை அனிருத் செய்திருக்கும் தாத்தா வர்றாரு... நிச்சயம் அவர் எள்ளுத் தாத்தாவுக்குமானதாகவே தோன்றுகிறது. சுதந்திரம், சுதந்திர போராட்ட வரலாறு, செய்த தியாகங்கள் இது எதன் அருமையும் தெரியாத ஒரு சமூகம் வளர்கிறது.

அது நம் எல்லா பெருமைகளையும் குலைத்து கீழே போடும் மனநிலையை சினிமா மூலம் வளர்த்து விடுகிறது. குருவை 'வாத்தி' என அழைக்கும் மாணவர் சினிமா.... குடித்து விட்டு மட்டையாகி தூங்கும் ஆசிரியரை எழுப்பும் மாணவர்கள் என பெருமைகள் சிறுமைப்படுகின்றன. ஒரு கேரள யூடியூப் ரிவ்யூவில் இந்தியன்-2ல் தமிழ் மக்களை சங்கர் முட்டாள்களாக காட்டுவதாக சொன்னார். அதில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+