சரண்யா மடியில் சாய்ந்து.. ஆஹா.. ரசனைக்கார காதலரய்யா... சூப்பர்!
சென்னை: சின்னத்திரையில் சூப்பர் நடிகைகளில் நம்ம சரண்யா துராடியையும் சேர்க்க வேண்டும். உண்மையிலேயே நல்ல நடிகைதான். அதை விட முக்கியமானது அழுகாச்சி வேடங்களில் நடிக்க பிடிக்காதவர் இவர்.
பெண்கள் குறித்த ஆண்களின் கருத்துக்களையும் கூட சரண்யா நிராகரிக்கிறார். அதிலும் டிவியில் வரும் பெண்களை வைத்து இப்போதைய பெண்களை எடை போடாதீங்கன்னு எச்சரிக்கை வேறு விடுகிறார்.
ஆண்களுக்கு சற்றும் இளைத்தவங்க நாங்க கிடையாது. நாங்களும் ஸ்டிராங்தான் என்றும் மார் தட்டிச் சொல்கிறார் சரண்யா துராடி. உண்மையிலேயே இவரும் நிஜத்தில் போல்டான கேரக்டர்தானாம்.

நெஞ்சம் மறப்பதில்லை
சரண்யா துராடி இப்போது டிவியில் பிரபலமாக உள்ளழர். நெஞ்சம் மறப்பதில்லை, ரன் என சீரியல்களில் தனது முத்திரையை அழுத்தமாகவே பதித்துள்ளார். ஆயுத எழுத்து இவருக்கு இன்னொரு பெயர் வாங்கிக் கொடுத்த சீரியல். அதில் இந்திரா என்ற கேரக்டரில் கலெக்டராக நடித்துள்ளார் சரண்யா துராடி.

நான் ரொம்ப போல்டு
எப்போதுமே போல்டான ரோல்களில் நடிப்பதையே விரும்புகிறாராம் சரண்யா. என்னால் எப்போதும் அழுது வடியும் பெண்ணாக நடிக்க முடியாதுங்க. எல்லாத்தையும் தியாகம் செய்யும் பெண்ணாகவும் நடிக்க முடியாதுங்க. இப்போதைய பெண்கள் எல்லாம் ரொம்ப ஸ்டிராங். டிவியில் வருவதை வச்சு யாரும் பெண்களை ஈஸியா எடை போட்டுராதீங்க என்று சொல்லிச் சிரிக்கிறார் சரண்யா.

போலித்தனம் கூடாது
நாடகத்தனம் இல்லாத, போலியானதாக இல்லாத ரோல்கள்தான் இவருக்குப் பிடிச்சிருக்காம். இவர் நடித்த சீரியல்களில் கூட அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில்தான் நடித்துள்ளாராம். கொஞ்சமாவது இயல்பு இருக்கணும். அப்பத்தான் என்னால் லயிச்சு நடிக்க முடியும் என்று சொல்கிறார் சரண்யா. இன்ஸ்டாகிராமிலும் பிசியாக இருக்கிறார் சரண்யா. அவருக்கு ஒரு அருமையான காதலரும் உண்டு. அவருடன் எடுத்த போட்டோக்களைப் போட்டு அவை வைரலாகி விட்டன.

காதல் மணம் வீசும் சரண்யா
அதிலும் காதலர் மடியில் கிடக்க புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ள சரண்யா போட்டுள்ள கவிதை இருக்கே.. அது வேற லெவல்ங்க. மடி சேர்ந்த பூரணமே.. மனதில் வீசும் மாருதமே என்று ஒரு கவிதை போட்டுள்ளார். கருத்துக்களைக் குவித்து விட்டனர் நம்ம ரசிகர்கள். சும்மா சொல்லக் கூடாது.. செமையாக இருக்கிறது இந்த ஜோடிப் பொருத்தமும்.

கலகல கமெண்ட்
அப்புறம் இன்னொரு படம். அதிலும் காதலருடன்தான் இருக்கிறார். அதற்கு கன்னத்தில் முத்தமிட்டால் என்று கேப்ஷன் கொடுக்கப் போய்.. படம் தாறுமாறு வைரலாகி விட்டது. அதில் ஒருவர் வந்து கன்னத்தில் முத்தமிட்டால் எங்களுக்கு வயிறு எரியும் என்று செல்லமாக கருத்திட.. அதற்கு விழுந்து விழுந்து சிரித்து வைத்துள்ளார் சரண்யா.

முத்தமா கேட்கிறேன்
அதேபோல இன்னொரு போட்டோ. அதிலும் ஜோடியாக இருக்கிறார்கள். அந்த போட்டோவுக்கு, நான் தேடி திரியும் வாழ்வே நீ தானே!
தென்றலே வா முன்னே முத்தமா கேட்கிறேன்? முறுவல் தான் கேட்கிறேன் என்று காதலை பிழிந்து கொடுத்து வாய் விரியச் சிரித்துள்ளார். பார்க்கவே படு குயூட்டாக இருக்கிறார்கள் இருவரும். ரொம்ப ரசிச்சு ரசிச்சு காதலிக்கிறாங்க போல இருவரும்.

ஜாலிதான்
இப்படி்ததான் போய்க் கொண்டிருக்கிறது சரண்யாவின் இந்த பொழுதுகள். அதுபோலவே ஒரு லேட்டஸ்ட் போஸ்ட்டில் குசும்புத்தனத்தையும் வெளிக்காட்டியுள்ளார். இப்போது லாக்டோன் என்பதால் எல்லோருமே வீட்டுக்குள்தான் முடங்கிப் போயுள்ளனர். பலர் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து கொண்டுள்ளனர். இதை வைத்து கடைசியாக எனக்கு மார்ச்தான் ஞாபகத்தில் இருக்கு.. இடையில் வந்த மாதங்களெல்லாம் மறந்து போன மாதிரி இருக்கு. உங்களுக்கும் அப்படித்தான் இருக்கா என்று கிண்டலடித்துள்ளார்.
Recommended Video

ரொம்பப் படுத்தாதீங்கப்பா
பிறகு இன்னொரு கலர்புல் போட்டோ போட்டுள்ளார். கலர் குடைக்குள் நல்ல சிரிப்புடன் ஜாலியாக இருக்கிறார். கூடவே, ஹலோ செப்டம்பர், தயவு செய்து எங்களுக்கு இரக்கம் காட்டு. நல்ல செய்தியை கொண்டு வா, வளர்ச்சியை கொண்டு வா. புதிய வாய்ப்புகளைக் கொடு. ஆசிர்வாதம் செய். கண்மணிகளே உங்களுக்கு எனது பாசிட்டிவ் வைப்ஸ்களை அனுப்புகிறேன் என்று ஹேப்பியாக கூறியுள்ளார் இந்த செல்லக் கண்மணி.. பிறகென்ன நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோட இருப்போம்.. சரிதானே.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications