Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சரண்யா துராடி மடியில்.. ஜாலியா படுத்துக்கிட்டு.. அப்படியே பாவம் போல.. சூப்பர்ல!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சரண்யா துராடி.. இவர் ஒரு நல்ல நடிகை.. தமிழ் சீரியல்களில் முன்னணியில் உள்ள சூப்பர் நடிகையும் கூட. இவர் நடித்து வந்த ஆயுத எழுத்து சீரியலை திடீரென முடித்து விட்டார்கள்.

என்ன கொடுமைன்னா இந்த சீரியலை ஏன் நிறுத்தினார்கள் என்று இவருக்கே தெரியாதாம்.. அதுதான் ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ஹீரோயினுக்கு கூட தெரிவிக்காமல் ஏம்ப்பா இப்படி முடிச்சீங்க என்று அனைவரும் அங்கலாய்க்கின்றனர்.

ஆனால் தனக்கு காரணம் தெரிந்தால் கண்டிப்பாக உங்க கிட்ட சொல்வேன்.. அதுவரை பொறுத்திருங்க. இதை விட பெட்டரான சீரியலில் விரைவில் என்னைப் பார்க்கலாம் என்று சரண்யா தனது ரசிகர்களை ஆசுவாசப்படுத்தி வைத்துள்ளார்.

ஆயுத எழுத்து

ஆயுத எழுத்து

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த சீரியல்களில் ஒன்று ஆயுத எழுத்து சீரியல். தற்போது சுபம் என்று என்று போட்டு முடித்து விட்டார்கள். எதனால் இப்படி திடீர் என்று முடித்தார்கள் என்று இந்த சீரியல் ரசிகர்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறதாம். அதனைப்பற்றி முதல்முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் சீரியலின் கதாநாயகி சரண்யா துரோடி வெளியிட்டிருக்கிறார்.

அடங்கிப் போகும் மருமகள்

அடங்கிப் போகும் மருமகள்

இந்த சீரியல் ஒரு மாமியார் மருமகள் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் சில மாமியார்களிடம் எவ்வளவு படித்த பெண்களாக இருந்தாலும் சரி கிராமப்புறங்களில் இருந்தாலும் சரி சில இடங்களில் மாமியார்கள் மருமகள்களின் கொடுமை படுத்துவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருப்பதையே விரும்புகிறார்கள் என்பதையும் இந்த சீரியல் மூலமாக எடுத்துக் கட்டி இருந்தார்கள்.

கலெக்டர் இப்படி பண்ணலாமா

கலெக்டர் இப்படி பண்ணலாமா

ஆரம்பத்தில் இருந்து சிறிய அளவில் பலரும் கலாய்த்துக் கொண்டுதான் இருந்தார்கள். இந்த சீரியலில் இவர் காதலித்து திருமணம் செய்வார். ஆனால் அவர் யாருடைய மகன் என்று கூட தெரியாத அளவிற்கு காதலிப்பாரா என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஏனென்றால் இந்த சீரியலில் கதாநாயகி சரண்யா துராடி ஒரு கலெக்டராக நடித்திருப்பார். அவர் கலெக்டராக அந்த ஊருக்குள் வந்ததும் அந்த ஊரில் நிறைய மாற்றங்கள் செய்வார்.

ரொம்ப பொறுமைக்காரர்

ரொம்ப பொறுமைக்காரர்

ஏழைகளுக்கு உதவுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது சீக்கிரமாகவே திருமணம் செய்துகொண்டு மாமியார் வீட்டிற்குள் வருகிறார். வந்ததும் அந்த வீட்டிற்கு மாமியார் கொடுமைக்கு ஆளாகிறார். இவர் ஒரு கலெக்டர் ஆக இருந்தாலும் பொறுமையின் சிகரமாக வீட்டில் அவ்வளவு கஷ்டங்களையும் தாங்கி கொள்வார். ஆரம்பத்தில் இவரை ரோல்மாடலாக எடுத்த பெண்கள் கூட ஏன் இந்த மாதிரி அடிமையா இருக்கீங்க என்று கூட இவரிடம் கேட்க செய்தனர்.

கலெக்டர் சாணி அள்ளலாமா

கலெக்டர் சாணி அள்ளலாமா

அந்த அளவிற்கு இவர் மாமியாருக்கும் பயந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இவரது பணிவும், அடக்கமும் என்னடா இந்த சீரியல் என்று பலருக்கு சலிப்பு தட்ட தொடங்கிவிட்டது. அந்த அளவிற்கு படு மொக்கையாக போய்க் கொண்டிருந்தது கதை. இவ்வளவு படித்து கலெக்டர் ஆக இருந்தாலும் தன்னுடைய குணத்தை நிரூபிப்பதற்காக கோயிலில் அங்கபிரதட்சணம் பண்ணுவது தீக்குழி இறங்குவது இல் தொடங்கி மண்சோறு சாப்பிடுவது மாட்டுக் கொட்டகையில் சாணி அள்ளுவது என்று அப்படியே முழுவதுமாக மாறிவிட்டார் சரண்யா.. அதாவது கதை நாயகி.

பொசுக்குன்னு நிறுத்திட்டாங்களே

பொசுக்குன்னு நிறுத்திட்டாங்களே

இந்த நிலையில் சமீபத்தில்தான் இது திடீரென டிராக் மாறி சூடு பிடிக்க ஆரம்பித்தது. மாமியார் மருமகள் கேரக்டரை கொஞ்சம் புரிந்து கொள்ள ஆரம்பித்து இருந்தார். இப்பதான் இந்த சீரியல் ரசிகர்களுக்கு நன்றாக இருந்தது. எப்பவும் அழுகாச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் என்ஜாய்மென்ட் பார்க்கும்போது நன்றாக இருந்த நேரத்தில், திடீரென இந்த சீரியலை முடித்து விட்டார்கள் இது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக தான் அமைந்திருக்கிறது.

என்னாச்சு சரண்யா

என்னாச்சு சரண்யா

ஆனால் திடீரென்று என்ன காரணத்தினால் இப்படி முடித்தார்கள் என்று தெரியாமல் இருந்த நேரத்தில் பல ரசிகர்களும் இன்ஸ்டாகிராமில் வாட்ஸ் அப்பிலும் சரண்யாவிடமே கேட்க ஆரம்பித்தனர். அவரும் கேள்விகள் அதிகரித்துக் கொண்டே வந்ததால், ஒரு வீடியோவே போட்டு பதில் கொடுத்துள்ளார். இந்த சீரியலை இவ்வளவு சீக்கிரமாக முடிப்பதற்கு காரணம் எனக்கும் தெரியவில்லை.

 சரண்யாவுக்கே தெரியலையாம்

சரண்யாவுக்கே தெரியலையாம்

அவர்களிடமிருந்து எனக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் கண்டிப்பாக அதை உங்களிடம் வந்து சேர்ப்பேன். அதுமட்டுமல்லாமல் நான் இது மட்டுமில்லாமல் வேறு சீரியல்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருப்பேன் .அதற்கு உங்களுடைய ஆதரவை தொடர்ந்து தாருங்கள் என்றும் கூறியிருக்கிறார். சரி அதை விடுங்க.. உற்சாக ஊற்றாக திகழும் சரண்யாவின் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு நாய்க்குட்டி அவரது மடியில் படுத்திருக்கு பாருங்க.. செம க்யூட்டான போட்டோங்க அதை.. சூப்பரா இருக்குல்ல.. !

சரி சரி சரண்யா மேடம்.. சீக்கிரமாவே ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுங்க.. நாங்கெல்லாம் வெயிட்டிங்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+