Web Series: ஷி.. மீண்டும் அதிரடி காக்கி கதை.. இந்த முறை பெண் கான்ஸ்டபிளின் கலக்கல் அடி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: நெட்ஃபிளிக்ஸ் இணைய தளம் ஹிந்தி மொழியில் ஷி..அதாவது அவள் என்று ஒரு வெப் சீரீஸை மார்ச் 20 அன்று ஒளிபரப்ப இருக்கிறது. ஷி டிரெயிலர், அதிரடி ஆக்ஷன் என்று மிரட்டலாக இருக்கிறது.

பெண் போலீஸ் அதுவும் கான்ஸ்டபிள் லெவலில் இருக்கும் பெண் போலீஸ் எந்த விதத்தில் சிறப்பாக சித்தரித்து காண்பிக்கப்படுவார்கள்.. இவர்களுக்குள் என்னென்ன திறமைகள் ஒளிந்து கிடக்கின்றன...

இந்தத் நேரத்தில் எப்படி சமயோசிதமாக பெண் கான்ஸ்டபிள் செயல்படக் கூடும் என்று சமூகத்துக்கு உணர்த்தும் விதமாக ஷி வெப் சீரிஸின் முன்னோட்டம் இருக்கிறது.

 வைஜயந்தி ஐபிஎஸ்

வைஜயந்தி ஐபிஎஸ்

பெண் போலீஸ் என்றாலே நமது நினைவுக்கு வருவது வைஜயந்தி ஐபிஎஸ் படத்தில் நடித்த விஜயசாந்திதான். அதிரடி ஆக்ஷன் என்று பெண் போலீஸ் அதிகாரியாக இவர் கதையில் சித்தரிக்கப்பட்டது சினிமா உலகத்துக்கு புதிய கோணத்தில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து இல்லை

அடுத்து இல்லை

விஜயசாந்திக்கு அடுத்தபடியாக போலீஸ் வேடத்துக்கு கன கச்சிதமாக பொருந்தும் நடிகைகள் இல்லை என்று சொல்லிவிட முடியாது. சினிமா உலகம் அப்படி ஒரு கதையில் வைஜயந்தி ஐபிஎஸுக்குப் பிறகு கவனம் செலுத்தவில்லை என்றுதான் கூற வேண்டும்.

பெண் போலீஸ்

பெண் போலீஸ்

பெண் போலீஸ் குறித்த கதைகள் கான்ஸ்டபிள் லெவலில் இருந்து அதிகாரிகள் வரை இப்போது நிறைய குவிந்து கிடக்கின்றன. என்றாலும், அதை படமாக்க யாரும் கவனம் செலுத்தவில்லை என்று வருத்தம் இருந்தாலும், இந்தி மொழியில் இதை கான்செப்ட்டாக வைத்து ஷி என்கிற வெப் சீரிஸை நெட்ஃபிளிக்ஸ் இணைய தளம் வெளியிட இருக்கிறது என்பதை அறியும்போது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

கிரைம் திரில்லர்

கிரைம் திரில்லர்

போலீஸ் சப்ஜெக்ட் அதுவும் ஒரு பெண் கான்ஸ்டபிள் தனது கையில் அதிகாரத்தை எடுத்து தூள் பறக்கும் கதை.. அதோடு மட்டும் அல்ல.. ஒரு பெண் கான்ஸ்டபிள் எப்படி எல்லாம் பிரச்சனைகள், சோதனைகள், பின்னர் சாதனைகள் என்று மாற்றி மாற்றி சந்திப்பதை சித்தரித்து காண்பிக்கும்போது அதில் கிரைம்.. திரில்லர்.. அதிரடி.. ஆக்ஷன் என்று இல்லாமல் இருக்குமா?

 மஃப்டி உடை

மஃப்டி உடை

போலீஸ் என்றாலே மஃப்டி உடையில் என்ன செய்வார்களோ என்கிற எதிர்பார்ப்பு வரும். இதில் போதை மருந்து கடத்தல் கும்பலை கண்டு பிடிக்க பெண் கான்ஸ்டபிள் ஒரு பாலியல் தொழிலாளி போல (Undercover operation) அனுப்பி வைக்கப்படுகிறார். இவர் அந்த மஃப்டி உடை பாலியல் தொழிலாளியாக போதை மருந்து கடத்தல் கும்பலில் கலக்கும்போது என்னென்ன சந்திக்கிறார்...

இதெல்லாம்தான் ஷி வெப் சீரீஸின் கதை... மார்ச் 20 முதல் இந்த வெப் சீரீஸை இந்தி மொழியில் கண்டு களிக்கலாம்..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+