அந்த விஷயத்தை விட ரொம்ப கஷ்டப்பட்டேன்.. மனம் திறந்த ஷெரீன்.. ஓபன் டாக்!
சென்னை: பிக் பாஸ் ஷெரீன் மனம் திறந்து ஒரு சூப்பர் மேட்டரைப் பற்றிப் பேசி வீடியோவும் போட்டுள்ளார். மறக்காம கேட்டு அதை பாலோ பண்ணப் பாருங்க மக்களே.
இப்ப இருக்கிற இந்த சூழ்நிலை எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். வீட்டோடு முடங்கிப் போய்க் கிடக்கிறோம். லாக்டவுன் நம்மை முடக்கிப் போட்டுள்ளது உடம்பாலும், மனதாலும். ஆனால், நம்ம உடம்ப நாமதான் பார்த்துக்கணும். ஆரோக்கியமாக இருந்தால் தான் இந்த கொரானா கிருமியை எதிர்த்து போராட முடியும்.
அரசு எவ்வளவுதான் செய்தாலும் நம்முடைய உடல்நிலையை நாமதான் பார்த்துக்கணும். அந்த நிலைமையில் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் ஆரோக்கியமாக வாழ வைக்கும் தேவையில்லாத கொழுப்பை குறைப்பதற்கும் நம்ம பிக்பாஸ் ஷெரின் இணையதளத்தில் வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

பிக் பாஸ் வெளிச்சம்
புதுப்புது நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் விஜய் டிவியின் ஹிட் புரோகிராம்தான் பிக்பாஸ். கமல்ஹாசனின் தொகுப்பும், நிகழ்ச்சியின் கலகலப்பும் சேர்ந்து பிக் பாஸை மெகா ஹிட்டாக்கியது. சீசன் 3 முடித்தாயிற்று. இப்ப சீசன் 4க்கான வேலை நடந்து கொண்டிருக்கிறதுன்னு சொல்லிட்டு இருக்காங்க.

ஓ ஷெரீனே
இதில் கலந்து கொண்டவர்கள் மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்கள். அந்த வகையில் தான் ஷெரின் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறார். திரைப்படம் கொடுத்த பிரபல்யத்தை விட பிக் பாஸ் அவருக்கு நிறையவே கொடுத்தது. துள்ளுவதோ இளமை, நண்பன் என சில படங்களில் நடித்திருந்தாலும் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சினிமாவை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

சினிமாவில் இல்லை
கொஞ்ச காலமாக சினிமா பக்கம் இல்லாததால் மக்கள் இவரை மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி இருந்த நேரத்தில்தான் பிக்பாஸ் மூலம் நேரடியாக மக்களை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது பிக் பாஸ் மூலமாக. பிக் பாஸ் வீட்டுக்குள் இவர் நுழையும்போது இருந்ததற்கும் வெளியே வரும்போது இருந்ததற்கும் ஏகப்பட்ட மாற்றங்கள்.

காதல் காதல்
பிக்பாஸ் வீட்டிற்குள் இவருக்கும் அங்கு இருந்த தர்ஷனுக்கும் காதல் அப்படி என்று கிசுகிசுக்கள் வந்தாலும் அவரை பற்றி கவலைப்படவே இல்லை. வெளியே வந்ததும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் முழுமையாக கவனத்தை செலுத்த ஆரம்பித்துவிட்டார். கொழுகொழுன்னு புசுபுசுன்னு இருந்த ஷெரின் இப்போ கவர்ச்சிப்புயல் பழைய செரின்னா மெருகேறி இருக்கார். படு ஸ்லிம்மாக காட்சி தருகிறார்.

கொழுப்பு குறைஞ்சிருச்சு
அவர் இந்த அளவிற்கு மாறியதற்கும் தன்னுடைய ரசிகர்களுக்கு தேவையில்லாத கொழுப்பை குறைப்பதற்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் உடல் எடை குறைப்பு ஒரு நாளிலோ இரண்டு நாளில் ஏற்பட்டு விடாது. அதற்காக கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உண்ணும் உணவை ரசிச்சுசி உண்ணவேண்டும். தேவைக்கு அதிகமாக உண்ணக்கூடாது. வீட்டு வேலைகளை முழுமையாக நாமளே பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

படுத்துட்டே டிவி பார்க்காதீங்க
மேலும் பெட்டில் அமர்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடுவது கூடவே கூடாதாம். அவருக்கும் இந்த பழக்கம் ரொம்ப நாளா இருந்துச்சாம். அதை விடுவதற்கு ரொம்ப கஷ்டப்பட்டாராம். தேவைக்கு மட்டும் சாப்பிடுங்கள். நாம டிவியோ செல்லையா பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது நம்முடைய சாப்பாடு அளவே கவனிக்காமல் அதிகமாக சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

குறைச்சுக்கலாமே
அதை கொஞ்சம் குறைத்துக் கொண்டாலே ரொம்ப நல்லது அப்படின்னு சொல்லி இருக்கார். சாப்பிடும் போது கீழே அமர்ந்து குடும்பத்தோடு சாப்பிட ரொம்ப நல்லதாம். இப்ப இருக்கிற பிசி லைஃப்ல யாருக்கும் பொறுமையாக உட்கார்ந்து வீட்டில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு சாப்பிடுவதற்கு டைம் கிடைக்கவில்லை. ஓடிக்கொண்டே இருக்கோம். ஆனால் இந்த லாக்டோன் டைம்ல எல்லாரும் வீட்டில் தான் இருக்கிறோம்.

டைம் கிடைக்கலை
இப்படி கிடைக்கிற கொஞ்ச நேரத்திலே நம்ம உறவுகளுடன் பாசத்தை ஏற்படுத்தி இனிமையானது பேசிக்கொண்டே சாப்பிடலாமே அப்படின்னு சொல்லி இருக்காங்க. இவருக்கு நாய்கள் என்றால் கொள்ளைப் பிரியம். சின்ன வயசுல இருந்தே நாய்கள் , பறவைகள் ,பூனை வளர்ப்பது தான் இவருக்கு கொள்ளை பிரியம். அம்மா திட்டுவாங்க ஸ்கூல் போயிட்டு வரும்போது ஏதாவது நாயோ பூனையோ அடிபட்டிருந்தால் அப்படியே வீட்டுக்கு தூக்கிட்டு வந்துருவாங்களாம்.

நாய்கள் பிரியை
வீட்டுக்கு தூக்கிட்டு வந்து அதை கொஞ்சிகிட்டு இருக்கு இருப்பாங்களாம். அவங்க அம்மா வந்ததும் மொத வேலையா கேட்கிறது இன்னைக்கு எத்தனை பேர் வந்துருக்காங்க உன் கூட அப்படி தான் கேட்பாங்களாம். அந்த அளவுக்கு இவர்களுக்கு பிற உயிர்களிடம் பாசமாம். வீட்டு வேலைகள் எல்லாம் எல்லாத்தையுமே இவங்க வீட்டுல இவருதான் செய்வாங்களாம். இவங்க வீட்டில் வீட்டு வேலை செய்வதற்கு ஆட்களே கிடையாது.

எனக்கு நானே ஹெல்ப்
அதுவும் உடல் எடையை குறைப்பதற்கு ஒரு காரணம் என்று சொல்லி சிரிக்கிறார். மேலும் தன்னை அழகாக ஒருவர் நினைத்து சிரித்த முகமாக இருந்தாலே தன் மனதிற்கு பிடித்த மாதிரி அழகாய் விடுவார்களாம். தற்போது சினிமா வாய்ப்பு இல்லாதனால் வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். அவருக்கு கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு கமெண்ட் போட்டு ரசிகர்களிடம் நல்ல மரியாதை இவருக்கு கிடைத்திருக்கிறது. இவரின் வெயிட் லாஸ் வீடியோவிற்கு ரசிகர்கள் கமெண்ட் மழையை பொழிகிறார்கள்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications