என்ன அழகு எத்தனை அழகு.. உச்சுக் கொட்டி ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: எங்களைப் பாருங்கள் எங்களுடைய அழகை பாருங்கள் என கலக்கலாக போஸ் கொடுத்து குழந்தை தனமான சிரிப்பினாலும் சேட்டையாலும் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்த ஷிவாங்கி அஸ்வின் புது போட்டோஷூட் கலக்கலாக வெளியாகியுள்ளது.
இவர்களது ஜோடிப் பொருத்தத்தை பார்த்து தற்போது ரசிகர்கள் பொறாமைப்படும் அளவில் கலக்கலாக போட்டோ ஷூட் எடுத்திருக்கின்றனர் .
இவர்களின் இந்த போட்டோஸ்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஷிவாங்கி - அஸ்வின்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரொம்பவே பாப்புலரான சிவாங்கி அஸ்வின் ஜோடியை யாரும் தெரியாமல் இருக்க முடியாது .அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்கள் ஆக இருந்தாலும் சரி சின்னத்திரை யாக இருந்தாலும் சரி இவர்களின் பெயர்தான் பலரின் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தினுசு தினுசாக
எப்போதுமே விஜய் டிவியில் புதுசு புதுசாக பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி கொண்டிருப்பார்கள். அது போலத்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் பலரும் ரசித்து வருகின்றனர். காரணம் சீரியல்களில் அழுகை சீன்களை பார்த்து பார்த்து போரடித்துப் போய் இருந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் ஜாலியாகவும் பார்ப்பவர்கள் மனக்கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் கலகலப்பான நிகழ்ச்சியாக இருந்து வருகிறது.

செம ஜாலிதான்
இதில் கலந்துகொண்டு கொள்ளும் கோமாளிகளாக இருந்தாலும் சரி குக்களாக இருந்தாலும் சரி இவர்கள் விஜய் டிவியில் ஏற்கனவே பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்கிறார்கள் .ஆனால் அதில் எல்லாம் கிடைக்காத பேரும் புகழும் இந்த நிகழ்ச்சி மூலமாக இவர்களுக்கு கிடைத்து இருக்கிறது .அதில் எடுத்துக்காட்டாக ஷிவாங்கியாக இருந்தாலும் சரி அஸ்வின், தர்ஷா, மதுரைமுத்து ,ஷகிலா, சரத், பாலா என பலர் இருந்தாலும் இவர் தனித்து தெரிகிறார்.

மனசுல இடம்
இளைஞர்களின் மனதில் கலக்கல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருக்கும் அஸ்வின் சிவாங்கி பலருக்கும் பிடித்திருக்கிறது .தற்போது சினிமாக்களிலும் காலடி எடுத்து வைத்தாலும் தான் வந்து பாப்புலரான இந்த நிகழ்ச்சியை எந்த நிலையிலும் மறக்கவே மாட்டேன் என கூறியிருக்கிறார் .அதுபோலதான் சிவாங்கியும் இதற்கு முன்னர் இவர் சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு பாதியிலே வெளிவந்திருந்தாலும் இவருக்கு இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பு கொடுத்து இருக்கிறது.

சில பல விருதுகளும்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு தற்போது பல விருதுகளும் கிடைத்திருக்கின்றன .அதுவும் இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு இவருக்கு கடை திறப்பு விழாக்கள் முதல் காலேஜ் பங்க்ஷன்கள் வரை பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் .தற்போது இந்த லாக்டோன் நேரத்தில் இவருக்கு நேரம் போகாமல் இருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவ்விலும் தன்னுடைய ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

காத்தாட போட்டோஷூட்
அதுபோலத்தான் தற்போது சிவாங்கியும் அஸ்வினும் ஒரு இன்டர்வியூக்கு கலந்து கொண்டு அப்படியே காத்தாட வெளியில் நின்று ஒரு போட்டோ ஷூட் எடுத்து இருக்கிறார்கள் .அந்த போட்டோவை சிவாங்கியும் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிடவும் அந்த போட்டோஸ்கள் தற்போது வரும் வைரலாக பரவி வருகிறது. இவர்கள் இருவரின் ஜோடிப் பொருத்தத்தை பார்த்து பலரும் உச்சுக்கொட்டி வசித்து வந்தாலும் இவருடைய ரசிகர்கள் வீட்டில் சொல்லி இவருக்கு திருஷ்டி சுத்தி போட சொல்லி அறிவுரை கூறி வருகின்றனர்.

செம அப்ளாஸ்
அதுவும் இல்லாமல் சிலர் ரீல் ஜோடியாக இருக்கும் நீங்கள் எப்போது ரியல் ஜோடியாக மாறுவீர்கள் எனவும் கேட்டு வருகின்றனர் .ஆனால் அதற்கு புன்னகையை மட்டுமே இருவரும் பதிலாக வழங்கி வருகின்றனர் .இவர்கள் இருவரும் சேர்ந்து பேசிய இண்டர்வியூ வீடியோக்கள் வெளியாகும் முன்பே இந்த போட்டோஸ்கள் வெளிவந்ததும் இவர்களுடைய ரசிகர்களுக்கு ஜாலியாக இருக்கிறதாம். மீண்டும் இருவரும் சேர்ந்து ஜோடியாக வீடியோக்களை போடுங்கள் என கேட்டு வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications