டார்லிங் டம்பக்கு.. ஷிவானி ஆட.. ஆஜித் ரசித்து வாயசைக்க.. கிறங்கிய ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தி டாப்பில் கலக்கிக் கொண்டிருந்த ஷிவானி இந்த பிக் பாஸ் வீட்டுக்குள் போன பிறகு அமைதியின் சொரூபம் ஆக மாறிவிட்டார்.

இப்படி நாம சொல்லவில்லை.. அங்கு இருக்கும் போட்டியாளர்களும், ரசிகர்களும் இவரைக் குறை கூறிக் கொண்டிருக்கும் போது நான் யார் என்று நிரூபிக்கும் நேரம் வரும் என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார் ஷிவானி.

எனக்கு தேவைப்பட்டால் நான் எதுவும் செய்வேன் இல்லை என்றால் நான் என் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பேன் என்று அமைதியாக இருந்து கொண்டிருக்கும் இவருக்கு பிக் பாஸ் ஷிவானியின் மனதை அறிந்து அவருக்கு பிடித்த மாதிரி பண்ணி கொண்டிருக்கிறதாம்.

 கொண்டாட்டம்

கொண்டாட்டம்

ஆமாம் நம்ம ஷிவானிக்கு எப்பவுமே ஆட்டம் கொண்டாட்டம் தான். ஏற்கனவே அவருக்கு பிடித்த செல்லம்மா பாட்டை போட்டு அவரிடம் முத்தமழை வாங்கிய பிக்பாஸ் மீண்டும் அவருக்கு பிடித்த டார்லிங் டம்பக்கு பாட்டை இன்று போட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்து ரொம்ப நாளுக்கு அப்புறம் தான் இந்த டான்ஸை அவர்களுடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

 கோடானு கோடி நன்றிகள்

கோடானு கோடி நன்றிகள்

அவர்களும் பிக் பாஸுக்கு நன்றி கூறி வருகின்றனர். அவர் ஆடும் போது கூடவே கன்டஸ்டன்ட் டும் ஆடிக்கொண்டு இருந்தாலும் இவருடைய ஆட்டம்தான் வேற லெவலில் தனியாக தெரிந்து கொண்டிருந்ததாகவும் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். அதை விட கேமராவும் கூட ரொம்பவே ஷிவானியை மட்டும் சூம் பண்ணி பண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.

 நல்லா போறீங்கய்யா ஜூமு!

நல்லா போறீங்கய்யா ஜூமு!

அவருக்கு டான்ஸ் மட்டும் தான் சூப்பராக வருகிறது என்பதால் அடிக்கடி இவர் ஆடும் ஆட்டத்தை மட்டும் ரொம்ப சூம் பண்ணுகிறார்கள். அவர் ஆடும்போது இடுப்பை ஆட்டி கலக்கலான துள்ளல் போடும்போது ஸ்டேஜ் கூட ஆடுகின்றதாம் .அந்த அளவிற்கு ஸ்டேஜில் பர்பாமன்ஸ் பண்ணியிருக்கிறார். அவரை பார்த்ததும் கீழே இருக்கும் அவரது அணியான ஆஜித் அவருக்கு ஜோடியாக கீழே இருந்து ஆடி கலகலப்பை கூட்டுகிறார்.

 ஷிவானி ஆட.. ஆஜித் வாயசைக்க

ஷிவானி ஆட.. ஆஜித் வாயசைக்க

அதையும் கேமராக்கள் காட்டத் தவறவில்லை.. ஜோடி சேர்க்கத் துடிக்கிறாய்ங்க போலயே.. அவருக்கு ஜோடியாக ஆஜித் வாய் அசைத்து பாடியதும் பாக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கிறது என்று அவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதிலேயும் ஆடி முடித்ததும் சொல்லிவைத்தது போல இந்தமுறையும் பிக்பாஸ் கேமராவிற்கு வந்து ரகசியமாக தாங்க் யூ பிக் பாஸ் இந்த முறையும் எனக்கு ரொம்ப பிடித்த பாட்டை எனக்காக போட்டதற்கு என்று முத்த மழை பொழிந்து இருக்கிறார் ஷிவானி.

 உசுப்பேத்துங்க நல்லா

உசுப்பேத்துங்க நல்லா

இந்த மாதிரி முத்தம் கொடுத்து அவரை உசுப்பேற்றினால் அவருக்குப் பிடித்த பாட்டு தானே போடுவார் என்று ரசிகர்கள் மைண்ட் வாய்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் . அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல ஷிவானிக்கு ரொம்ப பிடித்த பாடல்கள் எல்லாம் இந்த பிக்பாஸ் நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார் போல அதனால்தான் அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக பாட்டை போட்டு கொண்டாடி வருகிறார்கள். ரைட் ரைட்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+