மச்சான் அம்மா திட்டிட்டாங்கடா.. கொஞ்சிய ஷிவானி.. அலட்டிக்காத பாலா.. ரொம்பத்தான்!
சென்னை: மச்சான் எங்க அம்மா உன்னை ரொம்பக் கேவலமா திட்டிட்டாங்கடா என்று ஷிவானி சொல்ல.. பரவால்ல விடு மச்சான் என்று பாலா சொல்ல.. அந்த வீடியோதான் தற்போது வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து பல சீசன்களில் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் அதில் கலந்து கொண்ட கன்டஸ்ட்டண்ட் லைஃப் நன்றாகவே வளர்ச்சி அடைந்திருக்கிறது .
இதற்கு முன்பு அவர்கள் யாரென தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள் .

அவர்களா இவர்கள்
அவர்களா இது என அடையாளம் தெரியாத வகையில் மாறி போனவர்களும் இருக்கிறார்கள். ஆனால் கடைசியாக ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் இதற்கு முன்பு உள்ள சீசன்களில் இருந்தவர்களை விடவும் ஒற்றுமையாக இருந்து வருகின்றனர். இந்த வீட்டிற்குள் இருக்கும் போது கூட இவர்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு அடித்துக்கொண்டு இருந்தனர்.

பிரண்ட்ஸ்தான்
இருந்தாலும் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு நாங்கள்தான் பெஸ்ட் பிரண்டு என அடிக்கடி மீட்டிங் போட்டு தங்களுடைய நட்பை அனைவருக்கும் தெரியப்படுத்தி வருகின்றனர். அதிலும் இந்த சீசனில் கலந்துகொண்ட பாலாஜி ஷிவானியை பற்றி அனைவருமே பேசிக்கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு இவர்களின் காதல் சேட்டைகள் இந்த சீசனில் அனைவரும் ரசிக்கும்படி இருந்தாலும் ஷிவானியின் ரசிகர்கள் இதனை பார்த்து கோபப்பட்டு கொண்டிருந்தனர்.

அம்மாவின் என்ட்ரி
ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவருடைய அம்மாவும் இந்த வீட்டிற்குள் சென்று என்ட்ரி கொடுத்ததும் மாசாக கெத்து காட்டிவிட்டு ஷிவானியை லெப்ட் ரைட் வாங்கிவிட்டு வந்துவிட்டார். அதுவுமில்லாமல் பாலாஜியிடம் பேசாமலேயே அவருக்கு மீதுள்ள கோபத்தையும் காட்டிவிட்டார். ஆனால் இவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியே வந்து மீண்டும் தங்களுடைய பிரெண்ட்ஷிப் பை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஷிவானி வெளியிட்ட வீடியோ
இதனால் இவர்களுடைய ரசிகர்கள் மீண்டும் ஷிவானிக்கு அட்வைஸ் செய்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது ஷிவானி வெளியிட்ட வீடியோஸ்கள் வைரலாக பரவி வருகிறது. அடிக்கடி இவர்கள் ஜாலியாக டான்ஸ் ஆடி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்ட வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் படிக்காதவன் படத்தில் உள்ள கருணாஸ் தனுஷின் காமெடியை ரீல்ஸ் வீடியோக்களாக வெளியிட்டிருக்கின்றனர்.

பொருத்தமாக இருக்கே
.அது கரெக்டாக இவர்களின் கேரக்டருக்கு பொருந்துகிறது என பல ரசிகர்கள் கமெண்டுகளை போட்டு வருகின்றன. அதிலும் பலருக்கு பாலாஜி மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர் .சிலர் இந்த மாதிரி வீடியோ வெளியிட்டு எங்களை மேலும் வெறுப்பேத்தாதீங்க எனவும் தங்களுடைய கோபத்தை தெரிவித்து வருகின்றனர் .ஆனாலும் நெட்டிசன்கள் இவர்கள் இருவரையும் கலாய்த்து வருகின்றனர் .

எங்களுக்கென்ன
ஆனால் யார் என்ன சொன்னாலும் எங்களுக்கு கவலை இல்லை .இப்படித்தான் நாங்கள் இருப்போம் என இவர்கள் பலரின் வயித்தெரிச்சலை சம்பாதித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் ஷிவானி இன்ஸ்டாகிராமில் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருந்தார். சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இவருடைய ரசிகர்கள் பட்டாளம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தனர்.

நல்ல நெருக்கம்
அதிலும் இவரை வைத்து கலாய்த்து மீம்ஸ் போடும் நெட்டிசன்கள் இவரால் நன்றாக லாபம் சம்பாதித்து வந்து கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு அனைவருக்கும் வாய்ப்புகளை வாரி வழங்கி வந்த இவர் தற்போது நாலு மணிக்கு போஸ்ட் போடுவதில்லை .அதுவும் ரசிகர்களின் மனதை அறிந்து அதற்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளவில்லை எனவும் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகிறார்கள். இந்த நிலையில் இவர் பாலாஜி உடன் நெருக்கமாக வெளியிட்ட வீடியோவை பார்த்ததும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications