Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் "களத்தில்" குதித்த ஷிவானி.. இடுப்பு மெலிஞ்சிருச்சே.. ரசிகர்கள் குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்ஸ்டாகிராமில் நாலுமணி இளவரசி மீண்டும் அவருடைய ரசிகர்களுக்காக பழைய பாணியில் தரிசனத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்.

இதனைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் பல மடங்காக பெருக ஆரம்பித்தது மட்டுமல்லாமல் அவருக்காக சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று வருகின்றனர்.

பிக் பாஸுக்கு முன்னாடி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை இன்ஸ்டாகிராமில் வைத்திருந்த ஒரு சின்னத்திரை நடிகை என்றால் அது ஷிவானி தான்.

ஷிவானி நாராயணன்

ஷிவானி நாராயணன்

எத்தனை பேர் வந்தாலும் இவருடைய இடத்தை அசைக்க முடியாது என்பதற்கு போல நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்தே வந்தனர். நெட்டிசன்கள் இவரை நன்றாகவே கலாய்க்தும் வந்தனர். ஆனால் ரசிகர்கள் இவரை கொஞ்சி தீர்த்தனர். இவருக்காகவே பல ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ணி வந்து இருக்கிறார்கள்.

மறக்காமல் போஸ்ட்

மறக்காமல் போஸ்ட்

அந்த அளவிற்கு இவர் இணையதளங்களில் ஆக்டிவாகவும் கடமை, கண்ணியம் தவறாமல் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு இவருடைய ரசிகர்களை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று எங்கேயும் போக விடாமல் இழுத்து வைத்துக் கொண்டிருந்தார். அதனால்தான் இவரது ரசிகர்கள் இவருக்காக இன்ஸ்டாகிராமில் ஃபேன்ஸ் பேஜ் எல்லாம் ஓபன் பண்ணி இவருக்காக ஆர்மி அமைத்து வந்தனர்.

குடும்ப குத்துவிளக்கு

குடும்ப குத்துவிளக்கு

இவர் நடித்து வந்த சீரியல்கள் முடிவடைந்தாலும் இரட்டை ரோஜா சீரியலில் இருந்து இவர் திடீரென்று விலகியதும் சில ரசிகர்களுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்திருக்கிறது. சீரியலில் இவரை குடும்ப குத்துவிளக்காக பார்த்த ரசிகர்கள் கூட இன்ஸ்டாகிராமில் இவருடைய போஸ்ட்டை பார்த்து அவரா இவர் என்று ஷாக் ஆகி இருக்கிறார்கள்.

பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் பிரபலம்

திடீரென்று ஒரு நாள் ஷிவானி பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறார் என்று செய்தி வெளியானதும் அவருடைய ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டார்கள் .இந்த வீட்டிற்குள் இவர் சென்றுவிட்டால் நாலு மணிக்கு டைம் தவறாமல் நமக்கு எப்படி போஸ்ட் போடுவார் என்று பலர் கேள்விகளை கேட்டு வந்தனர் .ஆனால் இவரை இரண்டு மணி நேரம் டிவியில் பார்க்கலாம் என்று மனதை தேற்றிக் கொண்டனர் .

பாசக்கார ரசிகர்கள்

பாசக்கார ரசிகர்கள்

இவருடைய ரசிகர்களின் பாசத்தினால் தான் இவர் இத்தனை நாட்கள் இந்த வீட்டிற்குள் இருந்திருக்கிறார் .இவர் பாலாவின் பின்னால் சுற்றிக் கொண்டிருப்பதை ரசிகர்களால் பொறுக்க முடியாமல் சமூக வலைத்தளங்களில் கமெண்டுகளை போட்டு வந்தனர் .ஷிவானிக்கு பாலா ஏற்ற ஆள் இல்லை என்றுதான் பல்வேறு தரப்பினரின் கருத்தாக இருந்து வந்தது.

மீண்டும் போட்டோஷூட்

மீண்டும் போட்டோஷூட்

கடைசியில் இவர் இந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு கூட இவருடைய ரசிகர்கள் இவருக்கு அறிவுரைகளை கூறி கமெண்டுகளை போட்டு வந்தனர். அதனால்தான் இவர் மீண்டும் இந்த வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்றபோது பாலாவை கண்டுக்காமல் சுத்த விட்டார் என்று சிலர் கூறி வருகின்றனர். தற்போது இவருடைய ரசிகர்களின் வேண்டுதலுக்காக மீண்டும் ஃபோட்டோஷூட்டை ஆரம்பித்துவிட்டார்.

கொட்டும் கமெண்ட்டுகள்

கொட்டும் கமெண்ட்டுகள்

அதுவும் பழைய படி விட்ட இடத்தை தொடங்கியிருக்கிறார். நான் எங்கும் போகவில்லை மீண்டும் அதே இடத்தில் இருந்து தொடங்குகிறேன் என்று இவர் போட்டோக்களை அப்லோட் பண்ண இவருடைய ரசிகர்கள் மீண்டும் ரசிக்கத் தொடங்கி கமெண்டுகளை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதுவும் இவர் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நல்லா புசுபுசுன்னு மாறிவிட்டார் .

எடை குறைந்த இடுப்பு

எடை குறைந்த இடுப்பு

ஆனால் மீண்டும் வெளியே வந்த பிறகு பழையபடி உடம்பை குறைத்து சிக்கென்று இடுப்பு தெரிய விதவிதமாக போட்டோஸ்கள் எடுத்து குவிக்க ஆரம்பித்துவிட்டார். நான் மட்டும் இல்லை என்னுடைய அம்மாவும் எனக்கு மேல என்று இவரும் இவருடைய அம்மாவும் எடுத்த போட்டோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+