கை காலெல்லாம் நடுங்குது ஷிவானி.. ரசிகர்கள் இப்படி கெஞ்சறாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்படியாவது 4 மணிக்கு போட்டோஸ் போட்ருங்க.. போட்டோ வராட்டி கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிக்குது என்று ரசிகர்கள் ஷிவானி நாராயணனுக்கு அன்பு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

ஏடாகூடமாகவே போட்டோஸ் போட்டு ஏகத்துக்கும் ரசிகர்களை வாரிக் குவித்து வைத்திருப்பவர் ஷிவானி நாராயணன். எல்லாப் போட்டோவும் ஒரு மார்க்கமாகத்தான் இருக்கிறது. வளைந்தும் நெளிந்தும் ஒரு மாதிரிதான் காட்சி தருகிறார்.

எடுக்கிற போட்டோக்கள் எல்லாத்துலயும் இப்படித்தான் வளஞ்சு நெளிஞ்சு நிப்பீங்களா இடுப்புல ஏதும் சுளுக்கா ஷிவானி ரசிகர்களும் விடாமல் கலாய்க்கத்தான் செய்கிறார்கள்.

 ஷிவானியின் நெளிவு சுளிவு

ஷிவானியின் நெளிவு சுளிவு

தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கலான ஹேர் கலரிங் செய்துகொண்டு தொடை தெரியும் அளவில் உடை உடுத்தி இவர் வெளியிட்டிருக்கும் போட்டோஸ் வைரலாக பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருக்கும் ஷிவானிக்கு எப்பவுமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது . இவர் போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் வந்து மொய்த்து விடுகிறார்கள்.

 நாலு மணிக்கெல்லாம்

நாலு மணிக்கெல்லாம்

எப்பவுமே பங்க்சுவலாக தவறாமல் நாலு மணிக்கு போஸ்ட் போட்டுக் கொண்டே இருப்பதால் ரசிகர்கள் இவரை நாலுமணி பஸ் என்று கிண்டல் பண்ணினாலும் இவரது போஸ்ட் களுக்கு லைக்கும் கமெண்டும் போடுவதற்கு மட்டும் தவறுவதில்லை. அதிலும் பல போட்டோக்களில் இவரது அழகை புகழ்ந்து கவிதை மழை பொழிவதையும் தவறாமல் சிலர் இடம்பிடித்து விடுகிறார்கள்.

 பெரும் கூட்டம்

பெரும் கூட்டம்

இவருக்கு சீரியலில் ரசிகர்கள் இருப்பது போலவே பெரிய நெட்டிசன்கள் பட்டாளமும் இருக்கிறது. அவர்களாலேயே இவர் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு வருகிறார் என்று தான் கூறவேண்டும். இவரை வைத்து மீம்ஸ் போட்டு போட்டு அவர்களும் வளர்ந்துகொண்டு இவரையும் வளர்த்து விடுகிறார்கள். மீம்ஸ் கிரியேட்டர்கள் இவரால் நன்றாக சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இவரை வைத்து மீம்ஸ் போட்டு யூடியூப் சேனல்கள் கூட ஓடிக்கொண்டிருக்கிறது.

 ஒரே மாதிரி முக பாவனை

ஒரே மாதிரி முக பாவனை

எப்போதுமே விதவிதமான போஸ்கள் கொடுத்து போட்டோ எடுத்து இருந்தாலும் அதில் ஒரே முகபாவனை மட்டும் காட்டி போட்டோ எடுக்கிறார் என்று ரசிகர்களிடம் இவருக்கு ஒரு சின்ன வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. உடையில் மட்டும்தான் மாற்றத்தை கொண்டு வருகிறாரே தவிர முகத்தில் எந்த எக்ஸ்பிரஷன் காட்டாமல் ஒரே போலதான் இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். ஆனால் அதைப் பற்றி ஷிவானி கண்டுகொள்ளவே இல்லை.

 ஆனாலும் ரசிப்போம்

ஆனாலும் ரசிப்போம்

அடுத்த நாளும் அதே போஸில் தான் முகத்தை வைத்து போட்டோ போடுகிறார். இது சிலருக்கு சலிப்பு தட்டினாலும் அந்த வளைவு சுளிவுக்காகவே வருத்தத்தை மறந்து சந்தோஷமாக ரசிக்கிறார்களாம். உடையில் கவனத்தை செலுத்துவது போல எக்ஸ்பிரஷன்லும் கவனத்தைச் செலுத்தினால் ரசிகர்களுக்கு கூடுதல் பிளஸ் ஆக இருக்குமாம். ஷிவானி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்று வதந்தி பரவி கொண்டிருக்கும் நிலையில் இன்று வரையிலும் அதற்கு அதிகாரப்பூர்வமாக தனது வாயிலிருந்து ஆமாம் இல்லை என்று ஒன்றும் கூறவில்லை.

 போட்டோ போடுங்க

போட்டோ போடுங்க

டிவியில் இருந்து அதிகாரபூர்வமாக கூறவில்லை. ஆனால் சிலர் ஷிவானி கலந்து கொள்ளப் போகிறார் என்று வதந்தியை கிளப்பி வருகிறார்கள். அதை நம்பிய சில ரசிகர்களும் இவருக்கு இன்ஸ்டாகிராமில் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். தயவு செய்து நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதாக இருந்தால் 100க்கும் மேற்பட்ட போட்டோக்களை எடுத்து உங்கள் அட்மின் இடம் கொடுத்து விட்டு சென்று விடுங்கள்.

 கையெல்லாம் நடுங்குது

கையெல்லாம் நடுங்குது

அவர் தினமும் நாலு மணிக்கு உங்கள் சார்பாக போஸ்ட் பண்ண சொல்லி விடுங்கள். உங்கள் போஸ்ட்டை நாலு மணிக்கு பார்க்காமல் எங்களுக்கு கை நடுக்கம் வந்துவிடும். தயவு செய்து இதை மட்டும் செய்து விடுங்கள் என்று கெஞ்சி கமெண்ட் போட்டு இருக்கிறார். இவரை கலாய்த்து பல ரசிகர்களும் கமெண்ட் போட்டு கொண்டே இருந்தாலும் இவர் ஜாலியாக அவர்களுக்கு பதிலும் தெரிவித்து வருகிறார்.

Recommended Video

    Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu
     ஒரே ஜாலிதான்

    ஒரே ஜாலிதான்

    இந்த அளவிற்கு ஷிவானியை நாலு மணிக்கு ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் ஷிவானி தனது உடையை மேலே ஏற்றிக் கொண்டே வருகிறார். இது இவரது ஜொள்ளு ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. இவரை புகழ்ந்து சூம் செய்து பார்த்து வருகிறார்களாம். ஆனாலும் நாளுக்கு நாள் இவர் கவர்ச்சியைக் கூட்டிக் கொண்டு தான் இருக்கிறார் .சில நாட்களில் திடீரென்று ஆட்டமும் போட்டு ரசிகர்களை கலங்க வைக்கிறார். ஆமா, இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படியே இருப்பாரோ ஷிவானி..!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+