ஷிவானி காலையே சுத்திச் சுத்தி வந்த நாய்க்குட்டி.. அதைப் பார்த்தீங்களா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கவலையை மறக்க வடிவேலின் பாட்டுக்கு மீண்டும் பாத்ரூமுக்குள் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்ட ஷிவானி அதை பார்த்து விழுந்து விழுந்து ரசிக்கும் அவருடைய ரசிகர்கள் வம்புக் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அத்தோடு நில்லாமல் தாறுமாறாக கேள்விகளை கேட்டு வருகிறார்கள். இந்த மாதிரி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்து தான் இப்படி போஸ்ட் போட்டாரா இல்ல தெரியாம போட்டு விட்டாரா எனவும் நெட்டிசன்கள் கலாய்க்கிறார்கள்.

பகல் நிலவு சீரியலில் மூலமாக ரசிகர்களின் மனதில் பச்சக்கென்று குடும்ப குத்து விளக்காக ஒட்டிக்கொண்ட ஷிவானி இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் தூங்கவிடாமல் பண்ணிக் கொண்டிருக்கும் இளமை பதுமையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

வெறித்தனமான ரசிகர்கள்

வெறித்தனமான ரசிகர்கள்

நாளுக்குநாள் இவருக்கு வெறித்தனமான ரசிகர்கள் சங்கங்களை அமைத்து வந்தாலும் இவர் தன்னுடைய செல்லமான சிரிப்பாலும் கடமை தவறாத நாலுமணி போஸ்ட்னாலும் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். தன்னுடைய ரசிகர்கள் தன்னை தவிர இந்தப் பக்கம் அந்தப் பக்கம் எங்கும் சென்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.

ரசிகர்களின் ரசனை

ரசிகர்களின் ரசனை

ரசிகர்களின் ரசனையை நன்றாக அறிந்து இணையதளங்களை கலக்கி வருகிறார் .இதில் தனது திறமையை காட்ட முடியாது என்றுதான் சீரியல்களில் இருந்து ஒதுங்கி மீண்டும் விட்ட இடத்துக்கு வந்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவருடைய ரசிகர்களை பார்த்து தான் பிக்பாஸில் இவரை கூப்பிட்டு இருக்கிறார்கள் .இவருடைய ரசிகர்களால் தான் இவர் இவ்வளவு நாட்கள் அந்த வீட்டிற்குள் இருக்க முடிந்தது.

தவிக்கும் ரசிகர்கள்

தவிக்கும் ரசிகர்கள்

பல ரசிகர்கள் இவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடாததால் தவித்துப் போய் இருந்திருக்கின்றனர். அவர்களின் தவிப்பினை புரிந்துகொண்ட ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் மீண்டும் தன்னுடைய வேலையை ரசிகர்களுக்காக பார்க்க ஆரம்பித்துவிட்டார் .மீண்டும் உடம்பை குறைத்து வெடுக் வெடுக்கெனஇருக்கும் இடுப்பை லபக் லபக் என ஆட்டி வாடி பொட்ட புள்ள வெளியே என்னும் பாட்டுக்கு தனது நாய்க்குட்டியோடு ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

நாயுடன் கொஞ்சல்

நாயுடன் கொஞ்சல்

கொஞ்சிக் கொண்டிருந்த நாயை டக்குன்னு கீழே இறக்கி விட்டு விட்டு குத்தாட்டத்தைத் தொடங்குகிறார் ஷிவானி. இதை எதிர்பார்க்காத அந்த நாய்க்குட்டி ஷிவானியை விட்டுப் போக முடியாமல் அவரது காலையே தொட்டுத் தொட்டு முகர்ந்து பார்த்து சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஷிவானி ஆட்டம் போடுவதையும் அது ரசித்துப் பார்க்கிறது. அதையும் பார்த்து ரசிகர்கள் கமெண்ட் போடத் தவறவில்லை.

சூப்பர் பிளேஸ்

சூப்பர் பிளேஸ்

அவரது வீட்டிற்குள் அந்த இடம் தான் அவருக்கு ஹைலைட் .அதே இடத்தில் பல வீடியோக்களை வெளியிட்டாலும் அவர் போஸ்ட் போட்டதும் அவருடைய ரசிகர்கள் இனிப்புகளை மொய்க்கும் எறும்புகள் போல ஓடி வந்து விடுகிறார்கள். அதனாலேயே அவர் அதே இடத்தில் இருந்து டான்ஸ் போட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பொட்டப் புள்ள வேளியே

பொட்டப் புள்ள வேளியே

இதற்கு முன்பாக இவர் செல்லம்மா பாட்டுக்கு ஆடிய ஆட்டத்தை பலரும் மறக்காத நிலையில் மீண்டும் வாடி பொட்ட புள்ள பாட்டுக்கு வடிவேலுக்கு டப் கொடுத்திருக்கிறார். இவரது ஆட்டத்தை பார்த்து பலர் நீங்க டிவி சீரியல்களில் ஆடிய ஆட்டத்தை விடவும் இந்த ஆட்டம் தான் வேற லெவல் இருக்கிறது .அதுவும் இவ்வளவு நாளைக்குள்ள இடுப்பை குறைத்து மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டீர்கள் எப்படி என்று டிப்ஸ் கேட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+