என்னாது.. ஷிவானிக்கு கல்யாணமா.. வைரலாகும் போட்டோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷிவானி பிக் பாஸ் வீட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.. இப்படியும் இருப்பாரா ஒருவர் என்று எல்லோரும் ஆச்சரியப்படுகின்றனர்.

ஒன்றும் பேசாமலேயே .அவரது பொம்மை போன்ற உருவமும், கவர்ச்சிகரமான தோற்றமும், பாலாவுக்கு அவர் கொடுக்கும் ஜால்ரா ஆதரவும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆனால் அவரது அம்மா வந்து போட்ட போட்டைப் பார்த்து ஷிவானி மட்டுமல்ல. ரசிகர்களும் கூட ஆடிப் போய் விட்டனர்

நல்லா போடுங்க ஆன்ட்டி

நல்லா போடுங்க ஆன்ட்டி

.அப்படி கொடுங்க ஆன்ட்டி நல்லா என்று பலரும் கமெண்ட் போட்டு வருகின்றனர். வடிவேலு ஒரு படத்தில் வருவது போல சும்மாவே இருக்கிறார் ஷிவானி .பெரிதாக கருத்து சொல்வதில்லை, பேசுவதில்லை, எதையும் செய்வதில்லை . பாலாவை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார் அவ்வளவுதான்.

சும்மாவே இருக்காரே

சும்மாவே இருக்காரே

ஷிவானி ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் இருக்கிறார் .பெரிதாக எதற்காகவும் அலட்டிக் கொள்ளாமலேயே இருக்கிறார் .இதை பலரும் கூட கேட்டு விட்டனர். நீ ஏம்மா சும்மா வெறும் வெட்டி லக்கேஜா இருக்கியேன்னு .ஆனாலும் அதெல்லாம் ஷிவானி காதுக்குப் போச்சான்னு தெரியலை .அவர் வழக்கம் போலவே சும்மா இருக்கிறார்.

ஷிவானி

ஷிவானி

பாலாஜிதான் ஷிவானியின் மிகப் பெரிய பக்கபலம். அவர் இவருக்கும், இவர் அவருக்குமாக ஆதரவு காட்டிக் கொள்கின்றனர் .இதை வைத்து ஆரி கூட சண்டை போட்டு விட்டார் .அப்பத்தான் தலையணையைத் தூக்கி ஓங்கி அடித்து ரவுடித்தனம் செய்தார் பாலா .அதை கமல்ஹாசன் கூட கண்டித்துப் பேசியிருந்தார் .ஆனால் பாருங்க ரெட் கார்டு போடவில்லை. மாறாக எல்லோரும் என் பிள்ளைகள் என்று கூறி விட்டு போய் விட்டார் கமல்.

பழைய போட்டோ

பழைய போட்டோ

இப்ப அது அல்ல மேட்டர் .ஷிவானியோட இன்ஸ்டாகிராமில் ஒரு கல்யாண பொண்ணு போட்டோ போட்டிருக்காங்க அவரோட டீம் .பழைய போட்டோதான் .ஆனால் அதுதான் டாப்பில் இருக்கு . அப்டியே புதுப் பொண்ணு போல மினுக் மினுக் என ஜொலிக்கிறார் ஷிவானி.. அடடே நம்ம ஷிவானியா இது என்று எல்லோரும் மூக்கின் மீது விரலை வைக்கும் அளவுக்கு செம அழகாக இருக்கிறார் ஷிவானி.

வித்தியாசமான போட்டோ

வித்தியாசமான போட்டோ

இது எதுவோ பங்ஷனுக்கு எடுத்தது போல இருக்கு .ஆனால் ஒருவேளை பிரைடல் போட்டோஷூட் ஏதாச்சும் எடுத்தாங்களான்னு தெரியலை .இந்தப் போட்டவைப் பார்த்து அடடா ஷிவானிச் செல்லத்துக்குக் கல்யாணக் களை வந்திருச்சு போலயே என்று ரசிகர்கள் கொஞ்சலாக சொல்லிக் கொண்டுள்ளனர் .இன்னும் சிலரோ இப்படி வெட்டியாக பிக் பாஸ் வீட்டில் உட்கார்ந்திருப்பதற்கு பேசாமல் கல்யாணம் பண்ணிக் கொடுத்து விடலாம் என்றும் கலாய்த்துள்ளனர்.

அறியாப் பொண்ணு

அறியாப் பொண்ணு

எது எப்படி இருந்தாலும் ஷிவானி வேறலெவல் என்பது பல ரசிகர்களின் கருத்து .பலர் அழகாக இருப்பார்கள் .ஆனால் ஷிவானி அதில் தனிரகமாக இருக்கிறார் .அவர் டான்ஸ் ஆடினால் பக்கத்தில் யாரும் நிற்கக் கூட முடியாது .அப்படி கலக்கலாக ஆடுகிறார் .நல்ல திறமை உள்ளவர்தான் ஷிவானி .அவருக்கு அறிமுகம் இல்லாத பலருடன் ஒரே வீட்டில் இருப்பது சவுகரியமாக இல்லை போல. அதனால்தான் மிரண்டு விட்டார் என்றும் சப்போர்ட் செய்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+