நடிகர் சிவராஜ்குமாருக்கு என்ன ஆச்சு? திருப்பதியில் மொட்டை அடித்து முடி காணிக்கை!
திருப்பதி: திருப்பதியில் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் அவரது மனைவி கீதாவும் சுவாமி தரிசனம் செய்துவிட்டு முடி காணிக்கை கொடுத்துள்ளனர். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அமெரிக்காவில் சிகிச்சை பெறவுள்ளார்.
மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார். இவர் கன்னட திரைப்படங்கள் மட்டுமல்லாது மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அண்மையில் கேப்டன் மில்லர், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பெங்களூரில் மருத்துவமனை மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பலர் சமூகவலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத கருத்துகளை வெளியிட்டிருந்தனர். அது போல் அவருடைய சொத்துகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு எழுதி வைத்ததாகவும் யாரோ வதந்தியை பரப்பினர்.
இந்த நிலையில் சிவராஜ்குமார் தான் நலமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் நானும் மனிதன்தானே, எனக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது சிகிச்சைகளை முடித்துவிட்டேன். இன்னும் இரண்டு கட்ட சிகிச்சைகள் பாக்கி உள்ளன. இந்தியாவிலோ அல்லது அமெரிக்காவிலோ அறுவை சிகிச்சை செய்து கொள்வேன் என்றார்.
சிவராஜ்குமார் சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். சென்னை திரைப்பட கல்லூரியில் படித்தவர். இவர் விரைவில் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் இன்று தனது மனைவி கீதாவுடன் திருப்பதிக்கு வந்து முடி காணிக்கை செலுத்தினார். பிறகு விஐபி பிரேக் தரிசனத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கராயர் மண்டபத்தில் கோயில் பட்டாச்சாரியர்கள் பிரசாதத்தை வழங்கினர்.
நடிகர் சிவராஜ்குமாரே தனக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியிருக்கும் நிலையில் அவருக்கு என்ன ஆனது என கேட்டு ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிவராஜ்குமாரின் தம்பி புனித் ராஜ்குமார் கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இந்த இழப்பு ராஜ்குமார் குடும்பத்தை புரட்டி போட்டுவிட்டது என்றே சொல்லலாம். புனித்திற்கு ஏராளமான ரசிகர்கள். அவரது இழப்புக்கு கதறி அழுதனர். அவர் புகழின் உச்சியில் இருந்த போதிலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் அனைவருடனும் பழகிவந்தார்.
அது போல் சிவராஜ்குமாரும் Down to earth என சொல்லும் அளவுக்கு அவர் பாகுபாடில்லாமல் இனிமையாக பழகுவார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது பெரும் துயரத்தை கொடுத்துள்ளது. எனினும் இதுவரை அவர் தனது உடலுக்கு என்ன பிரச்சினை என்பதை தெரிவிக்கவே இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications