Minnale serial: ரடான் தயாரிப்பில் இப்படி ஒரு டயலாக்கா?
சென்னை: நடிகை ராதிகாவின் தயாரிப்பு நிறுவனமான ரடானில் இப்போது ஒரே ஒரு சீரியல் மட்டும்தான் சன் டிவிக்கு தயாரித்து தருகிறார்கள்.
பகலில் ஒளிபரப்பாகும் மின்னலே சீரியல்தான் அது. அதில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார். நிரோஷாவை போலீசார் கைது செய்ய வருகிறார்கள்.
அப்போது எதுக்கு என்னை கைது செய்கிறீர்கள் என்று கேட்கும்போது, எதுக்குன்னு சொன்னாதான் வருவீர்களா என்று போலீசார் கேட்கிறார்கள்.

ராதிகா சன் டிவி
நடிகை ராதிகா சன் டிவிக்கு லட்டு மாதிரி சீரியல்களை கொடுத்தவர். தங்க வேட்டை, கோடீஸ்வரன் போன்ற பல அருமையான நிகழ்ச்சிகளை கொடுத்தவர். அவரின் சந்திரகுமாரி சீரியல் அவருக்கு ஏனோ கை கொடுக்கவில்லை.

சந்திரகுமாரி நேரம்
சந்திரகுமாரி நேரம் மாற்றம் செய்த நிலையில் அந்த சீரியலில் கதைப்படி ராதிகா காணாமல் போனார். ராதிகா இதோ வருவார் அதோ வருவார் என்று சீரியல் ஆர்வலர்கள் காத்திருந்த நிலையில் சீரியலில் இருந்து விலகிக் கொண்ட ராதிகா தனக்கு பதில் விஜி சந்திர சேகரை நடிக்க வைத்தார். பின்னர் சீரியலையும் மிக விரைவில் முடித்துக் கொண்டார்.

இன்றுவரை மின்னலே
அப்படி இருந்தும் சன் டிவியில் மதிய நேரத்தில் ரடான் தயாரிப்பில் உருவாகி ஒளிபரப்பாகி வரும் மின்னலே சீரியல் ஒரு தடையும் இன்றி ஒளிபரப்பாகித்தான் வருகிறது. இதில் ராதிகாவின் தங்கை நிரோஷா ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

கவனமின்மை காரணமா
ரடான் தயாரிப்பில் ராதிகாதான் கிரியேட்டிவ் ஹெட் என்று டைட்டில் கார்டில் போடப்படும். இப்போது டைட்டில் போடப்படுவதில்லை,. இதில் நிரோஷாவை கைது செய்யும்போது ஒரு டயலாக் வருகிறது. நிரோஷா நான் எந்த தவறும் செய்யவில்லையே என்னை எதற்காக கைது செய்கிறீர்கள் என்று கேட்பார்.

இது கூட தெரிந்து
ஏன் எதுக்குன்னு காரணம் சொன்னால்தான் வருவீர்களா என்று ஒரு போலீஸ்காரர் கேட்கிறார். வீட்டில் சும்மா நின்று கொண்டு இருக்கும் ஒரு பெண்மணியை எதுவும் சொல்லாமல் ஒரு போலீஸ்கரர் அரெஸ்ட் என்று சொன்னால் காரணம் கேட்க மாட்டார்களா? காரணம் சொல்வது ஒரு போலீஸ்காரரின் கடமை இல்லையா? இது கூட வசனம் எழுதுபவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றால் என்ன சொல்வது?
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications