ஐ... லட்சுமி ஸ்டோர்ஸ்ல குறும்படம்... இதுவும் நல்லாத்தாய்யா இருக்கு....!
சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகா லட்சுமி குறும்படம் போட்டு காமிக்கறாங்க.
லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் மகாலட்சுமி.இளைய மருமகள் சுதா...டாக்டர் பாப்பா.
சுதா, மினிஸ்டர் சகுந்தலா தேவி, அவங்க மகள் தேஜா இவங்க கூட சேர்ந்துக்கிட்டு,சொந்த குடும்பத்துக்கே கெடுதல் நினைக்கறவ.

பாக்கியலட்சுமி
மகாலட்சுமியின் லட்சுமி ஸ்டோர்ஸில் வேலை பார்க்கறவதான் பாக்கியலட்சுமி. இவளை மகாலட்சுமிக்கு ரொம்ப பிடிக்கும். அதோடு மகாவின் கொழுந்தன் ரவிக்கும் பிடிக்கும்.

தேஜா ரவியை
சகுந்தலா தேவியின் மகள் தேஜா ரவி மேல ஆசைப்படறா.அவ சுதாவுக்கு பணத்தாசை காமிச்சு, பாக்கியலட்சுமியை கடையை விட்டும், வீட்டை விட்டும் துரத்த ஐடியா பண்ண சொல்றா.

மாமனாரின் பொக்கிஷம்
மாமனார் பொக்கிஷமாக பாதுகாத்து வச்சிருக்கும் மஞ்சள் பையை எடுத்து, பாக்கிய லட்சுமி ஹேண்ட் பேக்கில் வச்சுடறா சுதா. மாமனார் அந்த மஞ்சள் பையை காணலைன்னு பார்த்த உடனே அவருக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுது.

கவலையில்
மாமனாருக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்ன உடனே குடும்பமே கவலையில் இருக்க, சுதா பாக்கிய லட்சுமிதான் அந்த பையை எடுத்தான்னு சொல்றா. பாக்கியலட்சுமி அந்த பையை வீட்டில் வச்சுட்டு வந்துடறா.

பையை தாத்தா
அந்த ஹேண்ட் பேக்கை தாத்தா பாக்கிய லட்சுமிகிட்ட குடுக்க எடுத்துக்கிட்டு வர்றார்.சுதா ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன்னு சொல்லிட்டு, அந்த பையை திறக்க..உள்ளே மாமனார் பொக்கிஷமா மதிக்கற அந்த மஞ்சள் பை இருக்கு.

பெரியவரிடம்
சுதா பெரியவரைப்பார்த்து உங்க குடும்பமே திருட்டு குடும்பம்னு திட்டறா.பாக்கிய லட்சுமியின் தாத்தா கண்ணீர் விட்டு நிற்க... சுதா போதும் நிறுத்து. பை கால் முளைச்சு போச்சான்னு கேட்டியே.. விசாரிக்கலாம் இருன்னு மகாலட்சுமி சொல்றாங்க.

குறும்படம் ரவி
ரவி அந்த குறும்படத்தை போடுன்னு மகாலட்சுமி சொல்ல,அது வேற ஒண்ணும் இல்லை அண்ணி... நம்ம கடை சிசிடி குறும் படம்தான்னு சொல்லி போடறான். சுதா லாக்கரைத் திறந்து அந்தப் பையை பாக்கியலட்சுமி பேக்கில் வைத்தது தெரிந்து விடுகிறது.

பொன்னம்மா
ஏன் டாக்டரு பாப்பா... வடிவேலு அந்த மண்டையிலிருந்த கொண்டையை மறந்த மாதிரி.. நம்ம கடையில கேமிரா இருக்கறதை மறந்துட்டியே பாப்பான்னு கேலி பண்றாங்க.

குறும் படம்
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் குறும் படம் என்றால் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே இருக்கறவங்க பதட்டம் ஆகிருவாங்க. பார்வையாளர்கள் நாம் குஷியாகிருவோம். அந்த பாணியில் லட்சுமி ஸ்டோர்ஸ் மகாலட்சுமி குறும் படம்னு சொன்னதும் பார்க்கறவங்களுக்கு குஷியாகிருச்சு.

கமல் போல
குஷ்பூவும் நடிகர் கமல்ஹாசன் போல ரவி அந்த குறும் படத்தை போடுன்னு தில்லா சொன்னது ரொம்ப நல்லா இருந்தது.லட்சுமி ஸ்டோர்ஸில் குஷ்பூ ,சகுந்தலா தேவிக்கு குடுத்து வரும் வசனங்கள் அவ்வப்போது அனல் பறக்கறதா இருக்கு. வசன கர்த்தாவை பாராட்டலாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications