இதுவல்லவா காதல்... மொட்டை மாடியில் லைட் போட்டு.. அசத்திட்டாரே ஸ்ரேயா!
சென்னை: இதுவரைக்கும் எங்களுக்குள் ஒன்றுமில்லை வெறும் பிரண்ட்ஸ் தான் என்று கூறிக் கொண்டிருந்த திருமணம் சீரியல் கதாநாயகனும் கதாநாயகியும் ஆன ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து ஷெரின் ஜானு இவர்கள் இருவரும் தற்போது தங்களது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த திருமணம் சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது. சித்து பலருடைய கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதேபோல ஸ்ரேயா இளைஞர்களின் மற்றும் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த ஜோடிக்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும் வரவேற்பு இருக்கிறது. ஸ்ரேயா முதல் முதலாக இந்த சீரியலில் அறிமுகமாகியிருக்கிறார்.

அ ஆ சொல்லிக் கொடுத்த சித்து
ஆனாலும் இவருக்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று அவர் முதலில் நம்பவே இல்லை. அவருக்கு கொஞ்சம் கூட தமிழ் பேசவும் வராது. ஆனால் சூட்டிங் ஸ்பாட்டில் மற்றும் பிற நேரங்களிலும் சித்து தான் அவருக்கு தமிழை சொல்லிக் கொடுத்திருக்கிறார். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி தற்போது காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

மெய்மறந்த ரசிகர்கள்
சினிமாக்களில் இது புதிது அல்ல என்றாலும் இவர்கள் இருவரும் இதுவரையிலும் ரசிகர்கள் பலமுறை கேட்டுக் கொண்டிருந்தாலும் நாங்கள் ஒரு நல்ல நண்பர்கள் என்று தான் கூறி வந்திருந்தார்கள். ஆனால் தற்போது சித்தூவின் பிறந்த நாளை வெகு விமர்சனமாக ஸ்ரேயா கொண்டாடி இருக்கிறார் இதைப் பார்த்து சித்து மட்டுமல்லாமல் இவர்களின் ரசிகர்களும் மெய்மறந்து போய் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு விமரிசையாக கொண்டாடி இருக்கிறார்.

மொட்டை மாடியில் கொண்டாட்டம்
அவர் பிறந்த நாள் கொண்டாடிய போட்டோக்களும் வீடியோக்களும் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய பிறந்தநாளுக்கு மாடிப்படியிலிருந்து வெகு விமரிசையாக அழகான விளக்குகளால் அலங்கரித்து மற்றும் பூக்களால் பரப்பி அவரை வரவேற்று மாடிக்கு கூட்டி வருகிறார் .அங்கு ஒரு பிரம்மாண்டமான பெரும் கூட்டத்தோடு அவர்களுடைய நண்பர்கள் இருக்கிறார்கள்.

நீதான் ஸ்பெஷல்
அது மட்டுமல்லாமல் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சூப்பரான ஒரு தோரணம் அமைத்து ஸ்பெஷலான கேக்கும் வைத்திருக்கிறார். தோரணத்தில் ஆங்காங்கே சித்துவின் புகைப்படங்களும் தொங்கிக்கொண்டு ரொம்பவே மெனக்கெட்டு அலங்கரித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் ஒரு ஸ்பெஷலான கேக் மற்றும் அவரை வரவேற்று கிட்டார் வாசிக்கும் இளைஞர் பாட்டுபாடி என செம கொண்டாட்டமும் கொண்டாடி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல அந்த வீடியோவை அப்படியே தன்னுடைய இன்ஸ்டாகிராம் ,ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

மனசிலிருந்து கொட்டி கவிதை
அந்த வீடியோவில் அவருடைய மனதில் இருக்கும் கவிதைகளை அப்படியே கொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில் எனது ஸ்பெஷலான ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அது வேறு யாருமல்ல நீங்கள்தான் உங்களை சந்தித்தது வாழ்க்கையில் இதுவரை எனக்கு மிக மிக அற்புதமான விஷயம். எனது உலகத்தை நீங்கள் அழகாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் என் வாழ்க்கையின் வளம் என் மனநிலை மாற்றங்களை நீங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நீங்கள்தான் ஆதாரம்
நான் கீழே இறங்கும்போது என்னை மேலே இழுக்கவும் நீங்கள் ஒரு அற்புதமான பார்ட்னர், வழிகாட்டி மற்றும் ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் எனக்கு உலகத்தின் இறுதி ஆதாரமாக இருக்கிறார்கள். எனக்காக எப்பவும் நீங்கள் இருப்பதற்கு உங்களுக்கு நன்றி அதுமட்டுமல்லாமல் என்னை நேசித்ததற்கும் நன்றி. உங்கள் பிறந்த நாள் என் வாழ்க்கையில் ஒரு சிறப்பான நாள். நீங்கள் என்னை போலவே சிறப்பு என்பதை உங்கள் பிறந்த நாள் எனக்கு நினைவூட்டுகிறது.

ஆட்டம் பாட்டம்
என் வாழ்க்கையில் உங்களை போன்ற ஒரு மனிதனை பெற்ற அதிர்ஷ்டசாலி நான். வாழ்க்கையில் எல்லா அழகையும் ஆரோக்கியத்தையும் செழிப்பையும் நீங்கள் பெற வேண்டும் என்று நான் உண்மையிலேயே விரும்புகிறேன். என் இதயத்தின் அடிப்பகுதியிலிருந்து நான் நேசிக்கும் நபருக்கு மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறி அசத்தியுள்ளார் ஸ்ரேயா. சித்துவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராஜா ராணி சீரியலில் இவருடன் இணைந்து நடிக்கும் ஆல்யா மற்றும் அவரது கணவரான சஞ்சீவ் அதுபோல இவர்களுடன் நடிக்கும் பலரும் கலந்துகொண்டனர்.

முத்தமும்
அவர்களுடன் போட்டோக்கள் எடுத்து அந்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்கள். எல்லாரையும் விடவும் பிறந்தநாள் கேக் வெட்டும் போது பக்கத்தில் நின்று ஆட்டம் போட்டு ரொம்பவும் சந்தோஷமாக ஸ்ரேயா தான் கொண்டாடி இருக்கிறார். இருவரும் கட்டி பிடித்து முத்த மழை பொழிந்து கலக்கியிருக்கிறார்கள். அதுபோல சித்துவும் தனது இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் போட்டோஸ்களை போட்டு அதில் நான் உன்னை பார்க்காமல் இருந்திருந்தால் என் வாழ்க்கையில் பெரிய இழப்பு ஏற்பட்டிருக்கும்.

செம ஹேப்பி மச்சி
நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி என்று உன்னை பார்த்த பிறகுதான் எனக்குத் தெரிந்தது. நீ எனக்கு கிடைத்தது மிகப்பெரிய வரம் என்று காதல் வசனங்களை பேசியிருக்கிறார் .இந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த ரசிகர்கள் சித்து விற்கு வாழ்த்துக்களையும் இவர்களிருவரும் நிஜ வாழ்க்கையில் சீக்கிரமாக இணைய வேண்டும் என்றும் வாழ்த்தி வருகிறார்கள். நல்லது நடந்தா ரொம்ப சந்தோஷம்தான்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications