கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. அதுக்குள்ள நிறைமாதமா.. ஸ்ரேயா வீடியோவால் சித்துவுக்கு அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவி சீரியல் நடிகை ஸ்ரேயா சித்து நிறை மாத கர்ப்பம் போல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
Recommended Video
திருமணம் எனும் சீரியலில் ஜோடியாக நடித்தவர்கள் ஸ்ரேயா, சித்து. கலர்ஸ் தமிழ் தொலைகாட்சியில் வெற்றிகரமாக ஓடிய இந்த இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் திருமணத்திற்கு பிறகு வாங்கிய கார் குறித்து தங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர்.

சந்தோஷங்கள்
அவ்வப்போது தங்கள் வாழ்வில் நடக்கும் சந்தோஷங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சித்து ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும் , ஸ்ரேயா விஜய் டிவியில் ஒரு சீரியலிலும் நடித்து வருகிறார்கள். கடந்த வாரம் விஜய் அவார்ட்ஸில் நடிகர் சித்துவுக்கு விருது கிடைத்தது.

சீரியலில் சிறந்த மகன்
அதாவது சீரியலில் சிறந்த மகனுக்கான விருது. அந்த விருதை வழங்குவதற்காக சிறப்பு விருந்தினர் வரும் போது "உனக்காக பிறந்தேனே எனதழகா" எனும் பாடல் ஒலித்தது. சித்துவுக்கு ஒரே ஆச்சரியம், நமக்கு விருது கொடுப்பவர் யாராக இருக்கும் என! உடனே ஸ்ரேயா வந்ததும் சித்து துள்ளி குதித்து ஸ்ரேயாவை கட்டி அணைத்தார்.

போன முறை விருது
ஏனென்றால் போன முறை விருது கிடைத்த போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் ஸ்ரேயா வரமுடியவில்லை. இந்த முறையாவது ஸ்ரேயா வர வேண்டும் என விரும்பினேன். நான் அழைத்தேன் அவர் வரவில்லை என சொல்லிவிட்டார். நான் கவலையுடன் வந்தேன். ஆனால் இப்போது சிறந்த மகனுக்கான விருதை மனைவி கையால் வாங்குவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

சித்து மற்றும் ஸ்ரேயா
இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து Sidhu & Shreya எனும் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார்கள். அதில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அந்த வீடியோவில் ஸ்ரேயா நிறைமாத கர்ப்பிணியாக தோன்றுகிறார். இதை பார்த்த சித்துவுக்கே ஆச்சரியமாகிறது. கீழே கமென்ட்டில் ரீல் மொமென்ட் ரியல் ஆனா எப்படி இருக்கும் ? என குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரியலில் கர்ப்பம்
அனேகமாக ஏதேனும் சீரியல் அவர் கரப்பமாக இருக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அந்த காட்சியுடன் தனது நிஜ ஹீரோவுடன் ஒரு டூயட் போட நினைத்து ஸ்ரேயா அவ்வாறு செய்திருக்கலாம் என தெரிகிறது. எனினும் அவர்களது ரசிகர்கள் இது நிஜமாக வாழ்த்துகள் என கூறிவருகிறார்கள். இன்னும் சிலரோ கல்யாணம் ஆகி 5 மாதங்கள்தான் ஆகிறது . அதற்குள் நிறைமாத ஆசையா என கேட்டுள்ளார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications