குக் வித் கோமாளி டீமுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஸ்ருத்திகா.. கேக்கில் "குட்டிகளுடன் பல்லியால்" பரபரப்பு
சென்னை: குக் வித் கோமாளி வின்னர் ஸ்ருத்திகா அர்ஜுன் தனது 36 ஆவது பிறந்தநாள் விழாவை குக் வித் கோமாளி சீசன் 3 குழுவினருடன் கொண்டாடினார்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 3 சீசன் வரை முடிந்து 4ஆவது சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்கு காரணம் அந்த ஷோவை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
இந்த நிகழ்ச்சியில் குக்குகளும் கோமாளிகளும் செய்யும் லூட்டி உண்மையில் பெரும்பாலான மக்களுக்கு Stress buster ஆக உள்ளது. இதற்காகவே சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சியை காண டிவி முன்பு ஆஜராகிவிடுவர்.

குக் வித் கோமாளி சீசன் 3
அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் வின்னராக தேர்வு செய்யப்பட்டவர் ஸ்ருத்திகா அர்ஜுன், இவர் சில படங்களில் நடித்துள்ளார். இவர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியாவார். இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டார்.

வெள்ளந்தி ஸ்ருத்திகா
நடுவில் இருமுறை எலிமினேஷன் ரவுண்டில் வந்தாலும் கடைசி நேரத்தில் சேஃபர் சோனுக்கு போய்விடுவார். இவரது வெள்ளந்தியான பேச்சும், யார் கிண்டல் செய்தாலும் கோபப்படாத குணமும் ரசிகர்கள் மனதில் மீண்டும் ஸ்ருத்திகாவுக்கு இடம் கிடைத்தது. அவ்வப்போது குக் வித் கோமாளியை சேர்ந்த மணிமேகலை, புகழ், சிவாங்கி உள்ளிட்டோருடன் நேரத்தை செலவிடுகிறார்.

புகழ் ரிசப்ஷன்
அண்மையில் கூட புகழ்- பென்சி திருமண வரவேற்புக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் இவரது பிறந்தநாள் செப்டம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த பாலா, சக்தி, சிவாங்கி, சந்தோஷ், புகழ், சுனிதா உள்ளிட்டோருடன் கொண்டாடினார்.

பல்லிக்கு அஞ்சிய ஸ்ருத்திகா
அப்போது ஸ்ருத்திகாவுக்காக சிலிக்கான் பல்லி பொதித்த கேக்கை புகழ் உள்ளிட்டோர் ஆர்டர் செய்து கொண்டு வந்தனர். ஸ்ருத்திகாவை கேக் கட் செய்ய அழைத்ததும் அருகே வந்து பார்த்த போது அலறினார். அய்யோ பல்லி என்றால் எனக்கு பயம் என ஒதுங்கியே நின்றிருந்தார். பின்னர் ஒரு டிஷ்யூ பேப்பரில் அந்த பல்லியையும் அதன் குட்டிகளையும் அப்புறப்படுத்திய பிறகு ஸ்ருத்திகா கேக் வெட்டினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications